வியாழன், 13 ஆகஸ்ட், 2009

என்ன கொடுமை சார்!


உலக அழிவென்றால் இது தானா. ஒன்று யுத்தம் அல்லது இயற்கை அழிவு.

ஏன் இவ்வாறான அழிவுகள் தொடர்ச்சியாக வந்துக் கொண்டே இருக்கின்றன.

இன்று காலை நான் வேலைக்கு வந்து எனது வேலைகளை ஆரம்பித்தேன். செய்திகளை சேகரித்துக் கொண்டிருக்கும் போது ஒரு அதிர்ச்சியான செய்தி என் கண்ணில் தென்பட்டது.

உடனே அந்த செய்தியை நான் எடுத்து இன்று காலை நேர செய்திக்கு இணைத்துக் கொண்டேன்.

பங்களதேஷில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகரித்து வருவதாக அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் செய்தி தான்!

சரி என்னவென்று வாசித்து பார்ப்போம் என்றால் ஆண்டொன்றில் அரைவாசிக்கு மேலான நாட்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பங்களதேஷில்.

இன்று காலை வெற்றியில் நான் இணைத்த செய்தியை இந்த பதிவில் இணைத்துள்ளேன்.

பங்களதேஷில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகரித்து வருவதாக அந்த நாட்டின் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமியின் காரணமாக நிலத்திற்கடியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பங்களதேஷில் கடந்த 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2009ஆம் ஆண்டு மே மாதம் வரையான காலப்பகுதியில் மாத்திரம் ரிச்டர் அளவில் 4ற்கு மேல் 86 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

அத்துடன், 2007ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2008ஆம் ஆண்டு ஜுலை மாதம் வரையான காலப்பகுதியில் மாத்திரம் ரிச்டர் அளவில் 5ற்கு மேலான நிலநடுக்கங்கள் 95 பதிவாகியுள்ளதாக பங்களதேஷின் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நிலநடுக்கங்கள் அனைத்தும் டாக்காவிலிருந்து 600 கிலோமீற்றர் தொலைவிலேயே ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பங்களதேஷில் 2006ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையான காலப்பகுதியில் ரிச்டர் அளவில் 7ற்கு மேலான நிலநடுக்கங்கள் 4 பதிவாகியுள்ளன.

இவ்வாறான நிலநடுக்கங்கள் ஏற்படும் பட்சத்தில் அங்கு சுமார் 46 சதவீதமான பகுதிகள் பாதிக்கப்படும் என பங்களதேஷின் பொறியியல் தொழில்நுட்ப பல்கலைகழகம் மேற்கொண்ட ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது.

இது தான் செய்தி!

சரி வேறு என்ன செய்திகள் என்று பார்த்தால் ஜப்பானில் இன்றும் நிலநடுக்கம். எப்படி இருக்கும். அது மட்டுமா பன்றிக் காய்ச்சல் அடுத்த பக்கம்! இந்தியாவில் 17 பேரும் பலியாம்! சரி அது தான் அப்படி இருக்க இலங்கையிலும் ஒரு சம்பவம் நிகழப்போவதாக வீரகேசரியில் செய்தி!

என்ன தான் அந்த செய்தி, இலங்கையில் இன்று அதிகாலை வேளையில் விண்கற்கல் விழும் என ஆர்தர் சி கிளார்க் மையத்தின் எதிர்வு கூறல் செய்தி தான் அது.

அதுவும் ஒரே தடவையில் 1500ற்கும் மேற்பட்ட விண்கற்கள் ப+மியை நோக்கி அதுவும் இலங்கையை நோக்கி வருகிறதாம்!

இவற்றில் சில கற்கல் பகல் வேளையிலும் விழும் என ஆர்தர் சி கிளார்க் மையத்தின் எதிர்வு கூறியுள்ளது.

இப்படியான செய்திகள் காலையில் நான் வாசித்தக் கொண்டிருக்கும் போது மற்றுமொரு செய்தி, தாய்லாந்தில் தற்போது ஏற்பட்டுள்ள மண்சரிவினால் சுமார் 700 பேர் வரை உயிரிழந்திருக்கலாமென்ற செய்தி.

விடியக் காலையில் தனியாக இருந்து இவ்வாறான செய்திகளை கேட்கும் போது மனம் எப்படியிருக்கும்!

இப்படியாக செய்திகளை கேட்கும் போது, ஜென்மங்கள் எத்தனை எடுத்தாலும் நன்மைகளை மாத்திரமே செய்ய வேண்டும்.

இவ்வாறான மனித பேரழிவின் காரணம், உலகிலுள்ள தீயவை அழிந்து புதிய உலகமொன்று உருவாவதே. அவ்வாறான உலகம் 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதியாம்!

போதும் நிறுத்து!

2 கருத்துகள்:

பிரபா சொன்னது…

எப்ப அது ?? பயம் காட்டாதங்க தம்பி. எவ்வளவு காலத்துக்கு தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது.

LOSHAN சொன்னது…

இதெல்லாம் கலி.. பூமிக்கு the end போடும் காலம் வெகு தொலைவில் இல்லை போலிருக்கு..

இந்த அருண் எழுதிய அந்த செய்தியை வாசிக்கும் பாக்கியம் அடியேன்னுக்கு தான் கிடைத்தது..