திங்கள், 26 ஜூலை, 2010

இலங்கையுடன் முதல்வன்...........

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிய முதல்வன் திரைப்படத்தை குடும்பத்தினருடன் சேர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

பல தடவைகள் இத்திரைப்படத்தை நான் பார்த்திருந்தும், இம்முறை வேறு ஓர் கோணத்திலேயே பார்த்தேன்.இந்த படத்திற்கும் இலங்கைக்கும் இடையில் பல்வேறு தொடர்புகள் உள்ளமையை நான் இம்முறை தான் அறிவிந்து கொண்டேன், அது மாத்திரமன்றி இப்படத்தை முழுமையாக இலங்கையுடனேயே ஒப்பிட்டு பார்த்தேன்.

ரகுவரனுக்கும், அர்ஜுனுக்கும் இடையில் நடைபெறும் செவ்வி காணும் சம்பவம்.

அர்ஜுனினால் ரகுவரனிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கும் தற்போது இலங்கையின் சூழ்நிலைக்கும் இடையில் 100 சதவீத ஒற்றுமை காணப்படுகிறது.

உலக வங்கி, வரி, மனித உரிமைகள் என அனைத்து விடயங்களும் கேள்விகளாக இதன்போது அர்ஜுனினால் கேட்கப்படுகிறது.

அத்துடன், தேர்தல் விஞ்ஞாபனத்தையும் எமது நாட்டுடன் ஒப்பிட்டு பார்க்கக்கூடியதாய் உள்ளது.அது மாத்திரமன்றி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சு பதவியை வகிக்கும் ஒருவரை சார்ந்த கதாப்பாத்திரமொன்றும் முதல்வன் திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் எதிர்காலத்தை ஏற்கனவே இத்திரைப்படத்தில் இயக்குநர் சங்கர் தெளிவுப்படுத்தியுள்ளமை வியக்க வைக்கும் விடயம்........

மேலும் இலங்கை தொடர்பான பல விடயங்கள் அத்திரைப்படத்தில் வெளிகொணரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம்........... படத்தை மீண்டும் பார்க்கவும்....................

ஞாயிறு, 11 ஜூலை, 2010

ஒரு அதிசயப் பெண்ணின் வீடியோ!

செவ்வாய், 6 ஜூலை, 2010

(FACEBOOK) முகப்புத்தக பாவனையாளர்களுக்கு மாத்திரம்.

முகப்புத்தகத்தில் அரட்டையில் ஈடுபடும் போது உங்கள் நண்பர்களுடன் வார்த்தைகளை தவிர்த்து சிறு சிறு அடையாளங்களின் மூலம் வித்தியாசமாக உங்களின் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளுங்கள்.


இதற்கான சில அடையாளங்கள் உங்களுக்காக.............


SmileyNameShortcut
smilesmile:-) :) :] =)
frownfrown:-( :( :[ =(
gaspgasp:-O :O :-o :o
gringrin:-D :D =D
tonguetongue:-P :P :-p :p =P
winkwink;-) ;)
curly lipscurly lips:3
kisskiss:-* :*
grumpygrumpy>:( >:-(
glassesglasses8-) 8) B-) B)
sunglassessunglasses8-| 8| B-| B|
upsetupset>:O >:-O >:o >:-o
confusedconfusedo.O O.o
sharkshark(^^^)
pacmanpacman:v
squintsquint-_-
angelangelO:) O:-)
devildevil3:) 3:-)
unsureunsure:/ :-/ :\ :-\
crycry:'(
Chris PutnamChris Putnam:putnam:
robotrobot:|]
heartheart<3
kikikiki^_^
4242:42:
penguinpenguin<(“)
மேலதிக தகவல்கள்!

திங்கள், 5 ஜூலை, 2010

சேர்ந்த பிறகு விரும்பினேன்!

தன்னை தான் அறியும் நாள் முதல் ஒருவனின் மனதில் தனக்கென ஒரு லட்சியம் உண்டாகும்.

தான் தன் வாழ்க்கையில் ஒரு நிலையை அடையும் போது, இந்த தொழிலை தான் செய்ய வேண்டும், இந்த தொழிலின் மூலமே தான் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்ற எண்ணம் அனைத்து மனித உள்ளங்களிலும் தோன்றுவது உலக நியதி அல்லவா!

அவ்வாறான உலக நியதியில் மாட்டிக் கொண்ட நான், இன்று அதனை சாதிக்க முடியாத நிலையில் உள்ளேன்.

உயர்தரத்தை முடித்த எனக்கு பல்வேறு வேலைகள் என்னை நாடி வந்த போதிலும், மனதிற்கு பிடித்த இரு வேலைகளை ஒரே நேரத்தில் செய்தேன்.இலங்கையின் முன்னணி வாகன காப்புறுதி நிறுவனமான செலிங்கோ வி.ஐ.பி மற்றும் உலக வங்கி ஆகிய இரு நிறுவனங்களிலும் கடமையாற்றினேன்.

இப்படியாக என் வாழ்க்கை சென்றுக் கொண்டிருக்கும் அதேநேரம் என் லட்சியத்திற்காகவும் போராடினேன்.

ஒன்றரை வருடம் கண்மூடி திறக்கும் போது சென்று விட்டது.

2008ஆம் ஆண்டு ஜுன் மாதம் 25ஆம் திகதி எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு.

புதிதாக வானொலி சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது, அதில் கடமையாற்ற விருப்பமா?

இது தான் அழைப்பு?

அப்போது எனக்கு அங்கிருந்த வர விருப்பமில்லை. ஆனாலும் சில காரணங்களினால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அந்த வானொலி சேவையின் நேர்முகத் தேர்விற்கு சமூகமளித்தேன்.

நேர்முகத் தேர்வு – 28.06.2008

எனக்கு இந்த தொழிலில் எந்த அனுபவமும் கிடையாது. இந்த தொழிலை பற்றியும் தெரியாது. எனது லட்சியமும் இந்த தொழில் அல்ல.

ஆனாலும் நிறுவனத்திற்கு நான் அளித்த விடைகள் அவர்களுக்கு விருப்பம் போல.

உடனடியான நாளையே தொழில் வந்து இணைந்துக் கொள்ளுமாறு அழைக்கப்பட்டேன்.

எனக்கு ஆச்சரியம், என்ன செய்வது என்று தெரியவில்லை. உடனே நான் அளித்த பதில் தான்

இன்னும் இரு தினங்களில் வந்து சேருகின்றேன்.

சரி சென்று வாருங்கள். என்று அனுப்பி விட்டார்கள் என்னை.
2008.06.30ஆம் திகதி இலங்கையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட வானொலியான வெற்றியில் இணைந்துக் கொண்டேன்.இப்படி தான் என் வாழ்க்கையில் ஊடகத்துறை நுழைந்தது. கடந்த 30ஆம் திகதியுடன் இரு வருடங்களை பூர்த்தி செய்த நான், 3ஆவது ஆண்டில் தடம்பதித்து விட்டேன்.

லட்சியத்தை பற்றி சொன்னவன், அது என்ன லட்சியம் என்று இதுவரை கூறவில்லை என்பது தானே உங்களின் கேள்வி.

எனது பாடசாலை வாழ்க்கையில் பல மேடை நாடகங்களை நடித்த நான், எனது உயர்தர வகுப்பில் ஒரு நாடகத்தை நடித்தேன்.

அந்த நாடகத்தில் ஹீரோ நான் தான்.

பாடசாலையில் பிரதான மண்டபம் முழுவதும் அன்றைய நிகழ்ச்சிகளை கண்டுகழிக்க விசேட அதிதிகள், பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என அனைவரும் திரண்டிருந்தனர்.எனது அறிமுகத்தை கண்டு கரகோஷம் எழுப்பிய எனது நண்பர்கள், எனது அறிமுகத்திற்கு வரவேற்பும் அளித்தனர்.

நாடகத்தின் ஆரம்பத்தில் கரகோஷங்களை எழுப்பிய எனது நண்பர்கள், நாடக முடிவில் கண்களில் கண்ணீரை விட்டுச் சென்றனர்.

அப்போது திரைக்கு பின்னால் வந்த ஆசிரியரொருவர் என்னை பார்த்து நிச்சயமாக நீ ஒரு நடிகனாவாய்; என வாழ்த்திச் சென்றார்.

அவர் சொன்ன வார்த்தை மட்டுமல்ல, எனது லட்சியமும் அது தான்.

அது மட்டுமல்ல, அந்த நடாகத்தின் பிறகு என் வாழ்க்கையில் பல மாற்றங்கள்.

எனது நாடகத்தை பார்த்த விசேட அதிதிகளின் அறிமுகம் இன்றும் என்னுடன் இருக்கிறது.

அன்றைய தினம் எனக்கு கிடைத்த வரவேற்புக்கள்.

லட்சியம் நிறைவேறா விட்டாலும் பரவாயில்லை.... அவர்களின் வார்த்தைகள், வாழ்த்துக்கள், கண்களில் கண்ணீர் என அனைத்தும் எனது லட்சியத்தை நிறைவேற்றியது.

எனது லட்சியம் நிச்சயமாக நிறைவேறும் காலம் நெருங்கி விட்டது என நான் நம்புகிறேன்.

லட்சியம் நடிகராகுவது........
வந்து சேர்ந்தது ஊடகத்துறை........

விரும்பி சேரவில்லை இந்த தொழிலில்...... சேர்ந்த பிறகு விரும்பி செய்கிறேன்......

விரும்பி சேர நினைத்த தொழில் இதுவரை கிடைக்கவில்லை..... கிடைக்கும் என நம்புகிறேன்.


ஊடகத்துறையில் இரு வருடங்களை வெற்றிகரமான கொண்டுச் செல்ல உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்!