Thursday 28 January 2010

மஹிந்த ராஜபக்ஷ எப்படி ஜனாதிபதி ஆனார்?

பல்வேறு கருத்துக்கள் பல்வேறு மோதல்கள் பல்வேறு அழுத்தங்கள் என்ற பலவற்றையும் தாண்டி இன்று மீண்டும் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.



இவர் இலங்கையின் 5ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக பதவியை பெறுப்பேற்பதற்கு பல பாதைகளை கடந்த இன்று ஜனாதிபதியாக தொடர்ந்தும் இருக்க தெரிவாகியுள்ளார்.

1982ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்.



1982ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 30ஆம் திகதி முதலாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது.

இதன்படி, இந்த தேர்தலில் 81 லட்சத்து 45 ஆயிரத்து 15 பேர் வாக்களிக்க தகுதிப் பெற்றிருந்தனர்.

எனினும், இந்த தேர்தலில் 66 லட்சத்து 2 ஆயிரத்து 671 பேர் மாத்திரமே வாக்களித்துள்ளதுடன், 6 ஆயிரத்து 985 வாக்களிப்பு நிலையங்களில் இந்த தேர்தல் நடைபெற்றுள்ளது.

1982ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி காலை 8 மணி முதல் முற்பகல் 11 மணி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான திகதி.

இந்த தேர்தலில் மொத்தமாக 6 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தல் 1982ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி நடைபெற்றது.

இந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜே.ஆர். ஜெயவர்தன 34 லட்சத்து 50 ஆயிரத்து 811 வாக்குகளை பெற்று இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

அவரை எதிர்த்துஇலங்கை சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட எச்.எஸ்.ஆர்.பீ. கோபேகடுவ 25 லட்சத்து 48 ஆயிரத்து 438 வாக்குகளை பெற்றார்.

1988ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்.



1988ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி 2ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது.

இதன்படி, இந்த தேர்தலில் 93 லட்சத்து 75 ஆயிரத்து 742 பேர் வாக்களிக்க தகுதிப் பெற்றிருந்தனர்.

எனினும், இந்த தேர்தலில் 51 லட்சத்து 86 ஆயிரத்து 223 பேர் மாத்திரமே வாக்களித்துள்ளதுடன், 8 ஆயிரத்து 60 வாக்களிப்பு நிலையங்களில் இந்த தேர்தல் நடைபெற்றுள்ளது.

1988ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான திகதி.

இந்த தேர்தலில் மொத்தமாக 3 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இலங்கையின் 2ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தல் 1988ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி நடைபெற்றது.

இந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட ரணசிங்க பிரேமதாஸ 25 லட்சத்து 69 ஆயிரத்து 199 வாக்குகளை பெற்று இலங்கையின் 2ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

அவரை எதிர்த்து இலங்கை சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட சிறிமாவோ பண்டாரநாயக்க 22 லட்சத்து 89 ஆயிரத்து 960 வாக்குகளை பெற்றார்.

நிறைவேற்று அதிகாரமுடைய பதில் ஜனாதிபதி தெரிவு.



இலங்கையின் 2ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ 1993ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்ததை அடுத்து, 1993ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடத்தாது இலங்கையில் 3ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய பதில் ஜனாதிபதியாக டி.பி.விஜயதுங்க தெரிவு செய்யப்பட்டார்.

1994ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்.



1994ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 17ஆம் திகதி 4ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது.

இதன்படி, இந்த தேர்தலில் ஒரு கோடியே 9 லட்சத்து 45 ஆயிரத்து 65 பேர் வாக்களிக்க தகுதிப் பெற்றிருந்தனர்.

எனினும், இந்த தேர்தலில் 77 லட்சத்து 13 ஆயிரத்து 232 பேர் மாத்திரமே வாக்களித்துள்ளதுடன், 9 ஆயிரத்து 580 வாக்களிப்பு நிலையங்களில் இந்த தேர்தல் நடைபெற்றுள்ளது.

1994ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான திகதி.

இந்த தேர்தலில் மொத்தமாக 6 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இலங்கையின் 4ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தல் 1994ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி நடைபெற்றது.

இந்த தேர்தலில் சந்திரகா பண்டாரநாயக்க குமாரதுங்க 47 லட்சத்து 9 ஆயிரத்து 205 வாக்குகளை பெற்று இலங்கையின் 4ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட வஜிர சிறிமத்தி திஸாநாயக்க 27 லட்சத்து 15 ஆயிரத்து 285 வாக்குகளை பெற்றார்.

1999ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்.



1999ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி 5ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது.

இதன்படி, இந்த தேர்தலில் ஒரு கோடியே 17 லட்சத்து 79 ஆயிரத்து 200 பேர் வாக்களிக்க தகுதிப் பெற்றிருந்தனர்.

எனினும், இந்த தேர்தலில் 86 லட்சத்து 35 ஆயிரத்து 290 பேர் மாத்திரமே வாக்களித்துள்ளதுடன், 9 ஆயிரத்து 912 வாக்களிப்பு நிலையங்களில் இந்த தேர்தல் நடைபெற்றுள்ளது.

1999ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான திகதி.

இந்த தேர்தலில் மொத்தமாக 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இலங்கையின் 5ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தல் 1999ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற்றது.

இந்த தேர்தலில் சந்திரகா பண்டாரநாயக்க குமாரதுங்க 43 லட்சத்து 12 ஆயிரத்து 157 வாக்குகளை பெற்று இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தொடர்ந்தும் பதவி வகித்தார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 36 லட்சத்து 2 ஆயிரத்து 748 வாக்குகளை பெற்றார்.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்.



2005ஆம் ஆண்டு செப்டெபர் மாதம் 19ஆம் திகதி 5ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது.

இதன்படி, இந்த தேர்தலில் ஒரு கோடியே 33 லட்சத்து 27 ஆயிரத்து 160 பேர் வாக்களிக்க தகுதிப் பெற்றிருந்தனர்.

எனினும், இந்த தேர்தலில் 98 லட்சத்து 26 ஆயிரத்து 778 பேர் மாத்திரமே வாக்களித்துள்ளதுடன், 10 ஆயிரத்து 748 வாக்களிப்பு நிலையங்களில் இந்த தேர்தல் நடைபெற்றுள்ளது.

2005ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான திகதி.

இந்த தேர்தலில் மொத்தமாக 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இலங்கையின் 5ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தல் 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதி நடைபெற்றது.

இந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 48 லட்சத்து 87 ஆயிரத்து 152 வாக்குகளை பெற்று இலங்கையின் 5ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 47 லட்சத்து 6 ஆயிரத்து 366 வாக்குகளை பெற்றார்.

2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்.



மஹிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதி பதவி காலம் நிறைவடைய இன்னும் இரு ஆண்டுகள் உள்ள நிலையில் 6ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது.

இதன்படி, இந்த தேர்தலில் 1 கோடியே 40 லட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றனர்.

எனினும், இந்த தேர்தலில் ஒரு கோடியே 4 லட்சத்து 95 ஆயிரத்து 451 பேர் மாத்திரமே வாக்களித்தனர்.

2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் திகதி காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான திகதி.

இந்த தேர்தலில் மொத்தமாக 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இலங்கையின் 6ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தல் 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடைபெற்றது.

இந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 60 லட்சத்து 15 ஆயிரத்து 934 வாக்குகளை பெற்று இலங்கையின் 5ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தொடர்ந்தும் பதவி வகிக்க தகுதிப் பெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா 41 லட்சத்து 73 ஆயிரத்து 185 வாக்குகளை பெற்றார்.

Thursday 14 January 2010

பிரசாரத்தில் உலகை வென்றது இலங்கை

உலகின் அனைத்து நாடுகளிலும் பல்வேறு விதமான தேர்தல்கள் நடைபெற்று வந்தன. வருகின்றன.


இலங்கையில் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் போன்ற ஒரு தேர்தலை பல நாடுகள் சந்தித்திருந்தாலும், இது போன்றதொரு தேர்தலை நிச்சயம் சந்தித்திருக்க மாட்டார்கள் என்றே கூறவேண்டும்.





ஜனாதிபதியின் சார்பாக இருந்த ஒருவரே அவருக்கு எதிராக போட்டியிடுவதே இந்த தேர்தலின் பிரகாசமான விடயம்.


சரி, தலைப்பை பற்றி சற்று பார்ப்போம்.





உலகில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் பிரசார நடவடிக்கைகள் இருந்த போதிலும், இப்படியான ஒரு பிரசார நடவடிக்கையை நாம் பார்த்ததில்லை. குறிப்பாக கூறினார் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே பிரசார நடவடிக்கைகள் ஆரம்பித்து விட்டன.


உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது கூட இவ்வாறான தேர்தல் பிரசாரங்கள் இருக்கவில்லை.





இன்று கணனியில் அமர்ந்து இணையத்தை தட்டினால் சர்வதேச இணையத்தளத்திலிருந்து உள்நாட்டு இணையத்தளம் வரை இலங்கை தேர்தல் தொடர்பான பிரசாரங்கள்.


உலகின் முன்னணி அனைத்து இணையத்தளங்களிலும் இலங்கை தேர்தல் வேட்பாளர்களின் பிரசாரங்களே காணக்கூடியதாய் உள்ளது.


தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜெனரல் சரத் பொன்சேகா உள்ளிட்ட அனைவரது பிரசாரங்களும் பார்க்கும் அனைத்து இணையத்தளங்களிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.


நான் நினைக்கிறேன், இவ்வாறான ஒர் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்வது இதுவே முதற்தடவை என.


இப்படியெல்லாம் தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வெற்றி பெறாவிட்டால்?

Tuesday 12 January 2010

இலங்கை தேர்தல் களத்தில் சூடு.

நீண்ட நாட்களுக்கு பின்னர் பதிவிற்கு வருகிறேன். மன்னிக்கவும் வேலைகள் அதிகம்.

சரி, எதை பற்றி எழுதுவது என நினைத்தால் ஞாபகத்திற்கு வருபது இலங்கையின் அரசியல் களம்.

6ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக எதிர்வரும் 26ஆம் திகதி இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று தபால் மூல வாக்களிப்புக்களும் ஆரம்பமாகிவிட்டன.



இந்த வாக்களிப்பு நடவடிக்கைகள் இரண்டு நாட்களுக்கு தொடரும்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட திகதியிலிருந்து வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரித்த வண்ணமே உள்ளன.

நாளொன்றில் தேர்தல் பிரசார கூட்டங்களை விட வன்முறைச் சம்பவங்களே அதிகளவில் இடம்பெறுகின்றன.




இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக அதிகளவிலான வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இதன்படி, 22 வேட்பாளர்கள் இம்முறை தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.

இம்முறை தேர்தல் களத்திலுள்ள வேட்பாளர்களின் விபரங்கள்

மஹிந்த ராஜபக்ஷ - ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு
• சரத் பொன்சேகா - புதிய ஜனநாயக முன்னணி
• சிறிதுங்க ஜெயசூரிய - ஐக்கிய சோசலிஸக் கட்சி
• M.P..நமுனுமுல்ல - அனைவரும் மக்கள் அனைவரும் மன்னர்
• சரத் மனமேந்திர - புதிய சிஹல உறுமய
• அச்சல சுரவீர - தேசிய அபிவிருத்தி முன்னணி
• அநுர லியனகே - தொழிலாளர் கட்சி
• வண.பத்தரமுல்ல சீலரட்ண தேரர் - ஜனசெத முன்னணி
• விக்ரமபாகு கருணாரட்ண - இடதுசாரி முன்னணி
• விஜய டயஸ் - சோசலிச சமத்துவக் கட்சி
• சரத் கொன்காஹே - ஐக்கிய தேசிய மாற்று முன்னணி
• K.G.R.L.பெரோ - நமது தேசிய முன்னணி
• M.C.M. ஸ்மயில் - ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி
• ஒஸ்வால்ட் சொய்ஸா - ருகுணா ஜனதா கட்சி
• சரத் பின்னடுவ - தேசிய கூட்டமைப்பு.
• செனரட்ண சில்வா - தேசப்பற்றுள்ள தேசிய கூட்டமைப்பு.
• சுகத்சிறி கமகே - ஐக்கிய ஜனநாயக முன்னணி
• M.K.சிவாஜிலிங்கம் - சுயேட்சை
• I.M. இலியாஸ் - சுயேட்சை
• மயோன் முஸ்தப்பா - சுயேட்சை
• U.B.விஜயகோண் - சுயேட்சை
• V.மஹிமன் ரஞ்சித் - சுயேட்சை

இதேவேளை, இம்முறை தேர்தலில் வாக்களிக்க தகுதிப் பெற்றவர்கள் தொடர்பான விபரங்களை திரட்டினால்.



2008ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின்படி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நாடு முழுவதிலும் 1 கோடியே 40 லட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

மாகாண அடிப்படையில் மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் 15 லட்சத்து 21 ஆயிரத்து 854 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 14 லட்சத்து 74 ஆயிரத்து 464 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 8 லட்சத்து 13 ஆயிரத்து 233 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் 9 லட்சத்து 70 ஆயிரத்து 456 பேரும், நுவரெலிய மாவட்டத்தில் 4 லட்சத்து 57 ஆயிரத்து 137 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 7 லட்சத்து 42 ஆயிரத்து 684 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

மேலும், வன்னி மாவட்டத்தில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 975 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் 7 லட்சத்து 21 ஆயிரத்து 359 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 லட்சத்து 23 ஆயிரத்து 644 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 133 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 835 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் 4 லட்சத்து 95 ஆயிரத்து 575 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 11 லட்சத்து 83 ஆயிரத்து 649 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.



ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் 5 லட்சத்து 74 ஆயிரத்து 814 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 3 லட்சத்து 642 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் 7 லட்சத்து 34 ஆயிரத்து 651 பேரும், கேகாலை மாவட்டத்தில் 6 லட்;சத்து 13 ஆயிரத்து 938 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

வட மத்திய மாகாணத்தின் அநுராதபுரம் மாவட்டத்தில் 5 லட்சத்து 79 ஆயிரத்து 261 பேரும், பொலன்னறுவை மாவட்டத்தில் 2 லட்சத்து 80 ஆயிரத்து 337 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அத்துடன், தென் மாகாணத்தின் காலி மாவட்டத்தில் 7 லட்சத்து 61 ஆயிரத்து 715 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 4 லட்சத்து 21 ஆயிரத்து 186 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 5 லட்சத்து 78 ஆயிரத்து 758 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.