Thursday 30 April 2009

இதுவே இன்று எமது நிலை!


இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் கடந்த 26ஆம் திகதி திடீரென நிறுத்தப்பட்டது.

சுமார் 100 வருடத்திற்கு மேல் இறக்குவானை திருவிழா நடைபெற்று வருகிறது. எனினும், தேர்தல் திருவிழா சுமார் 7 வருடங்களாக மாத்திரமே நடைபெற்று வருகிறது.

இப்படி இருக்க இறக்குவானை ஆலயம் அமைந்திருக்கும் பகுதிக்கு அருகில் காணியொன்று இருந்தது. இந்த காணிக்கும் முன்னாள் கிரிஸ்தவ ஆலயம்.

இந்து ஆலயமும், கிரிஸ்தவ ஆலயமும் சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டது. இவ்விரண்டு ஆலயங்களுமே அருகில் இருக்கின்றன.

இப்படி இருக்கவே குறித்த பகுதியிலுள்ள காணியில் பௌத்தர்கள் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் புத்தர் சிலையொன்றை கொண்டு வந்து வைத்தனர்.

அந்த வருடத்தில் ஆரம்பித்தது பிரச்சினை. அப்போதும் கூறி வந்தனர், இந்து மற்றும் கிரிஸ்தவ ஆலயங்களில் மணி சத்தம் கேட்கிறது. எம்மால் வழிபட முடியவில்லை. என்ற கருத்துக்களை முன்வைத்தனர்.

எனினும், இறக்குவானையிலுள்ள பல பௌத்தர்கள், இந்து மற்றும் கிரிஸ்தவ ஆலயங்கள் மிக பழமை வாய்ந்தவை, அவர்களுடன் பிரச்சினை தேவையில்லை என கூறிய அங்கிருந்து புத்தர் சிலையை எடுக்குமாறு வற்புறுத்தினர்.

எனினும், சிலர் அதனை மறுத்து இன்றும் அந்த இடத்தில் பௌத்த விகாரையொன்றை அமைக்கும் நடவடிக்கைகளை பௌத்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இப்படி இருக்க இவ்வருடம் ஆலய மகோற்சவத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ள நிலையில், 26ஆம் திகதி பௌத்த மதத்தை சேர்ந்த சிலர் பொலிஸில் முறைபாடு ஒன்றை செய்துள்ளனர்.

இதையடுத்து ஆலய பரிபாலன சபை உட்பட மேலும் பல இந்துக்கள் பொலிஸ் நிலையத்தை நோக்கிச் செல்ல, அந்த இடத்தில் இனவாதத்தை வெளிப்படுத்தி திருவிழாவை தள்ளிப்போடுமாறு கூறியுள்ளனர்.

இதற்கு பரிபாலன சபையினர் மறுப்பு தெரிவிக்க, அப்படி திருவிழா திகதியை பிற்போடா விட்டால் களவரத்தை உண்டு பண்ணுவதாக கூறி, இனவாதத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகளை வெளியிட்டுள்ளனர்.

இதைகேட்ட பரிபால சபையினர், நமது மக்களை நாமே காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் திருவிழாவை உடனடியாக நிறுத்தவிட்டனர்.

இதையடுத்து எதிர்வரும் பௌர்ணமி தினத்தன்று ஆலயத்தை மூடவும் பரிபாலன சபையினர் தீர்மானித்துள்ளனர்.

இவ்வருட ஆலய உற்சவம் 28.04.2009ஆம் திகதி ஆரம்பித்து 10.05.2009ஆம் திகதி நிறைவடைய இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட வார்த்தைகளை வெளிப்படுத்திவரும் மக்களுக்கு எதிராக நடவடிக்கைகளை நிச்சயமாக அரசாங்கம் எடுக்க வேண்டும்.

இந்த பதிவு சர்வதேச நாடுகளிலுள்ள தமிழர்கள் அனைவருக்கும். இதுவே தற்போதுள்ள இலங்கையின் நிலை.

சில அரசியல்வாதிகள் இது தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் இந்த ஆலயத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த சில அரசியல்வாதிகள் இதுவரை ஆலயத்தின் பக்கம் திரும்பி பார்க்கவே இல்லை. பார்ப்போம் எமது நிலை எப்படி என்று!

Tuesday 14 April 2009

தமது திறமையை காட்டி விட்டார்கள்!


அமெரிக்க இராணுவத்தினருக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்ளவே வேண்டியது அவசியமானதொன்று தான்!

காரணம் உலக நாடுகளை நேற்றைய தினம் பேச வைத்த அமெரிக்க இராணுவத்தினரின் திறமை.

கடந்த புதன்கிழமை கடற்கொள்ளையர்களினால் கடத்திச் செல்லப்பட்ட அமெரிக்க சரக்கு கப்பலின் கேப்டனை நேற்று முன்தினம் அமெரிக்க இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

இது தான் நேற்றைய தினம் மிக பரபரப்பான செய்தி.

53 வயதுடைய ரிசட் பிலிப்ஸ் என்பரே குறித்த அமெரிக்க கப்பலின் கேப்டன். சுமார் 5 நாட்களாக தனியாக கொள்ளையர்களுடன் போராடியுள்ளார்.

இவரை இந்து சமூத்திரத்தில் வைத்தே மீட்டுள்ளனர். எப்படி தெரியுமா அமெரிக்க இராணுவத்தினர் மீட்டுள்ளனர்?

அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி பராக் ஓபாமாவின் சிறப்பு அனுமதியுடனும், அவரின் ஆலோசனைகளை பின்பற்றியுமே இவர் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த கப்பலை மீட்க நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, கடத்தப்பட்ட கப்பலின் கேப்டனின் தலையில் கடற்கொள்ளையர்கள் துப்பாக்கியை கைத்துள்ளனர்.

இதை கண்ட அமெரிக்க இராணுவத்தினர் உடனடியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

காயமடைந்தவரை அமெரிக்க இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.

இவரை தற்போது அமெரிக்காவிலுள்ள சிறைச்சாலையில் சிறை வைத்துள்ளனர் அமெரிக்க இராணுவத்தினர்.

இனிவரும் காலங்களில் அவர் தனது வாழ்க்கையை சிறையிலேயே கழிக்க வேண்டும் என அமெரிக்க இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் சரி வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. அமெரிக்காவிற்கு இன்னும் இருக்கிறது அல்லவா!

உலகின் பல நாடுகளுடன் போராடி தானே ஆக வேண்டும்...... பார்ப்போம் ஜனாதிபதி பராக் ஓபாமாவின் திறமையை.........

Monday 13 April 2009

எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Sunday 12 April 2009

மும்பையில் சச்சினின் சிலை!


இங்கிலாந்து – லண்டனில் செதுக்கப்பட்டுள்ள இந்திய நட்சத்திர துடுப்பாட்டவீரர் சச்சின் டெண்டூல்காரின் மெழுகு சிலை எதிர்வரும் திங்கட்கிழமை (13.04.2009 – பழைய வருட இறுதியில்) திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய – மும்பையில் நாளைய தினம் இந்த சிலையினை இந்திய நட்சத்திர துடுப்பாட்டவீரர் சச்சின் டெண்டூல்காரே திறந்து வைக்கவுள்ளார்.

இங்கிலாந்து – லண்டனிலுள்ள 'மேடம் டுசாட்ஸ்' அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு துறைகளிலும் பிரசித்தி பெற்றவர்களை மெழுகு சிலையின் மூலம் செதுக்கி அவர்களை கௌரவிப்பார்கள்.

உலகின் முக்கியமான சுற்றுலா மையமாகவே இந்த அருங்காட்சியகம் விளங்குகின்றது.

இதன்படி, இந்தியாவைச் சேர்ந்த ஹிந்தி நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ் ஆகியோருக்கு மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்திய கிரிக்கெட் வீரரொருவருக்கு மெழுகு சிலை வைப்பது இதுவே முதற்தடவை என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது சிலையின் அனைத்து வேலைகளும் நிறைவடைந்துள்ளதாக லண்டன் அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு செதுக்கப்பட்ட சிலையின் பெறுமதி எவ்வளவு தெரியுமா?
ஒரு கோடி ரூபா என தெரிவித்துள்ளனர்.

எத்தனை மாதங்கள் செலவிடப்பட்டுள்ளது தெரியுமாறு – 3 மாதமாம்!

சரி நாங்களும் முடியுமான போவோம் என....................

Thursday 2 April 2009

பிச்சை எடுக்கவும் தடை!


பங்களாதேஷிலுள்ள பிரதான நகரங்களில் பிச்சை எடுப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இந்த சட்டம் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளதாக பங்களாதேஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது.

144 மில்லின் மக்கள் வாழும் பங்களாதேஷில் 40 வீதமான மக்கள் நாள் ஒன்றிற்கு ஒரு டொலர் மூலம் பிச்சை எடுப்பதன் மூலம் வருமானம் பெற்றுவருவதாக பங்களாதேஷ் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு பிச்சை எடுப்பதினை தடை செய்யும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் விவாத்ததிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டதினை மீறி பிச்சை எடுப்பதில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக ஒரு மாத கால கடும் சிறைத் தண்டனை விதிக்கப்படுமென பங்களாதேஷ் அரசு தெரிவித்துள்ளது.

இந்த சட்ட மூலத்தை நிறைவேற்றக்கோரி பங்களாதேஷ் நிதி அமைச்சர் யு.ஆ.யு. முஸித் கடந்த டிசம்பர் மாதம் முதல் நாடாளுமன்றத்திடம் முறையிட்டிருந்த நிலையில், தற்போது இது சட்டமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.