ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

மறைமுக செயல் அம்பலம்!தற்போது உலகில் தொழிநுட்ப வளர்ச்சியானது மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.

இந்த தொழிநுட்ப வளர்ச்சியானது இளைஞர்களின் மத்தியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றமை யாரும் அறிந்தவையே!

அதிலும் ஆசிய இளைஞர்கள் மத்தியில் தொழிநுட்பமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் கணினி மற்றும் கையடக்க தொலைபேசிகளின் பாவனையே அதிகளவில் காணக்கூடியதாய் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிலும் கையடக்க தொலைபேசி பாவனை முதன்மை பெறுகின்றதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

இப்படி இருக்கும் பட்சத்தில், கடந்த 2 மாதக்காலப் பகுதியாக எமது கையடக்க தொலைபேசி கட்டணம் அதிகரித்துள்ளதை என்னால் உணரக்கூடியதாய் இருந்தது.

சுமார் 10 நாட்களில் மாத்திரம் எனது தொலைபேசி அழைப்பு கட்டணத்தின் ஒரு மாதக்கால கட்டண தொகை வந்துள்ளதை என்னால் அறிய முடிந்தது.

இதை தொடர்ந்து நான் தொலைபேசி நிறுவனத்திற்கு சென்று எனது முன்னைய மாதங்களின் கட்டணங்களின் விபரங்களை திரட்டியதுடன், எனது வெளிச்செல்லும் அழைப்பு விபரங்களையும் பெற்றுக் கொண்டேன்.அதை எடுத்து பரிசிலித்து பார்க்கும் போது கட்டணம் அதிகமாக குறித்த தொலைபேசி நிறுவனம் அறவிட்டுள்ளதை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது.

அந்த தகவல்களை எடுத்துக் கொண்டு எனது நிறுவனத்தில் கடமையாற்றும், முன்பு குறித்த கையடக்க தொலைபேசி நிறுவனத்தில் கடமையாற்றிய ஒருவரிடம் விசாரித்தேன்!

அவர் அவருடைய நண்பரிடம் உடனடியாக தொலைபேசியில் தொடர்புக் கொண்டு இது தொடர்பான தகவல்களை கேட்டார்.

அப்போது தான் தெரிய வந்தது, கடந்த இரு மாத காலங்களாக வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்காது மேலதிகமாக இரு வரி முறைகளை கட்டணத்துடன் உள்ளடக்கியுள்ளமை.

இந்த வரியினை இலங்கையிலுள்ள அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் உள்ளடக்குகின்றமை எனக்கு அன்று தான் தெரியும்.

தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் உடனடி அறிவித்தலை அடுத்தே இந்த கட்டண அதிகரிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இவ்வாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்காது கட்டணத்தை அதிகரித்தைமைக்காக தற்போது கொழும்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களின் போது வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்காது இவ்வாறு கட்டண அதிகரிப்பினை மேற்கொண்டமை அநீயாயமான செயல் அல்லவா!

இதற்கான முடிவு விரைவில் கிடைக்கும். தொலைபேசி பாவனையின் போது உங்களாலேயே உணர முடியும் இந்த கட்டண அதிகரிப்பை!

இது தொடர்பான தகவல்களை ஊடகங்கள் வெளியிடவில்லை. அதற்கான காரணங்கள் இருக்கின்ற போதிலும் என்னால் அதை இந்த பதிவில் கூற முடியாவில்லை.

எனது இந்த பதிவின் நோக்கம், இந்த தகவலை உங்களுக்கு அறிவிப்பதே!

இது எனது 100ஆவது பதிவு. நிச்சயம் வெற்றி தான்!

2 கருத்துகள்:

சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது…

எப்படியோ சதம் அடிச்சிட்டீங்க.... வாழ்த்துக்கள்....

SShathiesh சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பா. உங்கள் பதிவுகளின் வெற்றிக்கு காரணமே இப்படி தெரியாத முகங்களை தெரியவைப்பதுதான் தொடருங்கள் வெற்றியோடு.