வியாழன், 25 பிப்ரவரி, 2010

சச்சினுக்கு அரசியல் வாழ்க்கை தேவையா?

அனைவருமே தற்போது அரசியலில் ஈடுபடத் தொடங்கி விட்டனர். அப்படியிருக்கும் போது ஏன் சச்சின் மட்டும் அரசியலுக்கு பிரவேசிக்கக் கூடாது.இந்தியாவை எடுத்துக் கொண்டால், ஏன் உலகத்தையே எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் முன்னணியில் திகழ்பவர்களின் சச்சினும் ஒருவர் தான்.

அனைத்து துறைகளிலும் உள்ளவர்கள் தேர்ந்தெடுத்து இறுதியில் பிரவேசிக்கம் ஒரு துறையாக அரசியல் மாறிவிட்டது.

இப்படியிருக்கும் போது நான் இறுதியாக வெளியிட்ட பதிவிலும் அதே கருப்பொருளைத் தான் வெளிப்படுத்தியிருந்தேன்.

சில திறமைகளை மாத்திரம் வைத்துக் கொண்டு அரசியலில் பிரவேசிக்கும் பலர் இருக்கும் போது சச்சினும் அரசியலில் ஈடுபட்டால் முன்னேற முடியுமா என்ற கேள்வி நேற்றைய தினம் தான் எனது மனதில் மிக ஆழமாக எழுந்தது.ஏன் அந்த கேள்வி திடீரென எழுந்தது என்பது தானே உங்களின் முதலாவது கேள்வி.

சச்சின் டெண்டுல்கார் நேற்றைய தினம் புதிய சாதனையொன்றை ஒன்றை படைத்ததை அடுத்தே எனக்கு இந்த கேள்வி எழுந்தது.

ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தனிநபரொருவர் பெற்ற அதிகூடிய ஒட்டமாக 200 ஒட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றிருந்தார்.

பல சாதனைகளை படைத்த சச்சின் தொடர்ந்தும் சாதனைகளை படைத்து வருகிறார்.

இந்நிலையில் அவர் அரசியலில் பிரவேசித்தால் அவரின் வாழ்க்கை நிச்சயம் கேள்வி குறித்தான்.இப்படி விளையாட்டில் கழிப்பதே தனக்கும் நல்லது, ஏனையோருக்கும் நல்லது.

அரசியல் வேண்டாம். விளையோட்டே போதும் சச்சின்!

சச்சினுக்கு எனது வாழ்த்துக்கள்!

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

...இலங்கையின் அரசியல் விளையாட்டு....

அரசியல் யுத்தத்தில் ஆரம்பித்து நடிப்பாக மாறி இராணுவத்திலிருந்து தற்போது விளையாட்டாகவும் மாறிவிட்டது.


இதில் எதை அடிப்பது?

என்னடா, இவன் எதை பற்றி சொல்லப் போறான் என தானே உள்ளம் கேட்கிறது. முதலாவது வசனத்திலேயே புரிந்துக் கொள்ள முடிந்திருக்கும் அல்லவா.

வேறு எதை பற்றி இலங்கையின் அரசியல் விளையாட்டுக்களை பற்றி தான்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற மாகாண சபை தேர்தல்களின் போது அரசியலில் நடிகர்களின் ஆதிக்கத்தை பார்த்து ரசித்து பின்னர் இராணுவ ஆட்டத்தை பார்த்து வந்த எமக்கு, மீண்டும் ரசிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.


அரசியல் ஆட்டம் தொடருமா?

உண்மையிலேளே இலங்கை வாழ் நாங்கள் புன்னியம் செய்துள்ளோம் போல. அரசியல், யுத்தம், இராணுவம், விளையாட்டு, சினிமா உள்ளிட்ட அனைத்தையும் அனுபவிக்க கூடிய வாய்ப்பு தொடர்ந்து எமக்கு கிடைத்து வருகிறது.

மாகாண சபை தேர்தல்களில் சினிமா நடிகர்களின் நடிப்புத் திறமைகளை அரசியலில் பார்த்த எமக்கு, மாறுதலாக அரசியல் விளையாட்டையும் பார்க்க கூடிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்களை பற்றி தான்.

நாடாளுமன்ற தேர்தலில் இலங்கையின் கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சனத் ஜனசூரிய களமிறங்கியுள்ளதுடன்,


அப்போது அடிச்சாச்சு இனி?

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனும் அரசியல் காலடி வைக்க எண்ணியுள்ளார்.


அரசியலில் பந்து வீசுவது லேசா?

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க ஏற்கனவே அரசியலில் பிரவேசித்து பல்வேறு இன்னல்களை அனுபவித்து தற்போது வேறு கட்சிகளை நோக்கி தாவிக் கொண்டிருக்கிறார்.


அன்று நானும் அடிச்சேன். வாங்கடா..... வாங்க........

அன்று பந்தை சுழற்றி சுழற்றி அடித்தவர், இப்போது தன்னை தானே சுழற்றி சுழற்றி அடித்துக் கொள்கிறார்.

சொன்னது சரியா??

இந்த நிலையில், தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான சனத் ஜனசூரிய மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோரும் பிரவேசிக்கவுள்ளனர்.

நாடாளுமன்றம் என்ன கிரிக்கெட் ஆடும் மைதானமா?

இவர்கள் எத்தனை நாளுக்கு தெரியவில்லை. இவர்களின் வாழ்க்கையில் எத்தனை கட்சிகள் தெரியவில்லை. அதற்கு நிச்சயம் எமக்கு பொறுமை வேண்டும் அல்ல. காத்திருப்போம் அவர்களின் கட்சி தாவல்களை பார்த்து ரசிக்க.

சரி, இலங்கை அரசியல் தற்போது கிரிக்கெட்டை மையமாக கொண்டு தான் இயங்குகிறது என நினைத்தால், அடுத்த அதிர்ச்சி.

இலங்கையின் முன்னணி ஒட்ட வீராங்களை சுசந்திகா ஜயசிங்க.


நாடாளுமன்றத்திலும் இப்படி ஓட முடியுமா?

அவரும் அரசியலில் பிரவேசிக்க ஆயத்தமாகிவிட்டார்.

இப்போது நாடாளுமன்றம் என்ன ஒடுவதற்கான மைதானமா?

எதிர்வரும் காலங்களில் இலங்கையின் நாடாளுமன்ற ஆட்சியில் அனுபவம் மிக்க அரசியல்வாதி என்ற ஒன்று இல்லாமல் போய்விடும்.

அத்துடன், நாடாளுமன்றின் அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைக்கவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

அப்படி குறைத்தால் அனைத்து விளையாட்டு வீரர்களும் விரைவில் நாடாளுமன்றத்தை நோக்கி சென்று விடுவார்கள்.


இது நல்லா இருக்கே.......

எது எப்படி இருந்தாலும், எமக்கு ஓரே ஜாலி தான். (ஆப்பும் இருக்கு போல)

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

நீங்களும் ஹீரோவாக வேண்டுமா?எனது முன்னைய பதிவில் நான் தான் ஹீரோ? முதலில் அந்த வீடியோவை பார்த்து விட்டு. இந்த பதிவை வாசித்தால் மிக நல்லது என நான் நினைக்கிறேன்.

சரி எப்படி? அந்த பதிவில் வெளியிட்டுள்ள வீடியோவில் நான் தானே ஹீரோ.

இந்த வீடியோ பல நாட்கள் கஷ்டப்பட்டு, பணம் செலவீட்டு, மக்களை ஒன்று திரட்டி செய்ய வீடியோ அல்ல!

இது நான் சேர்த்த கூட்டம் இல்ல, தானா சேர்ந்த கூட்டம்...........உங்களுக்கும் இதே கூட்டம் உள்ளது என்பது உங்களுக்கே தெரியாத உண்மை!

சரி இந்த வீடியோவின் ரகசியத்தை வெளியிடும் தருணம் இதுவென நினைக்கிறேன்.

ஒன்றும் இல்லை.

http://en.tackfilm.se

என்ற இணைய முகவரிக்கு பிரவேசியுங்கள்.

அங்கே உங்களுடைய புகைப்படமொன்றை கேட்டுக்கும் பட்சத்தில் அதே வழங்கினால்.

நீங்களும் ஹீரோ தான்!செய்து பாருங்கள். நீங்கள் ஹீரோ ஆனதற்கு முதலில், முதலாவதாக எனது வாழ்த்துக்கள்!

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

இவ்வாண்டின் நாயகன் நான்!

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

கையடக்கத் தொலைபேசியிலுள்ள வீடியோக்கள் ஒரு நொடியில் இணையத்தில்!...

தொழிநுட்ப வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் வளர்ந்துவரும் ஓர் விடயமாகும்.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால் உலகம் இப்போது தொழில்நுட்பத்தின் கீழேயே உள்ளது.

இந்த நிலையில் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் இணையம் மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியன முக்கிய இடங்களை வகிக்கின்றன.

இந்த இரண்டுமே தற்போது ஒன்றிணைந்து செயற்படுவதாகவும் கூறலாம்.

ஒரே வசனத்தில் சொல்ல வேண்டுமானால், “உலகம் கையில்”.எதற்கு இவ்வளவு விளக்கம் என நினைக்கிறீங்களா?

சரி சொல்லுறேன்.

முன்னர் கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்யப்படும் வீடியோ காட்சிகளை வயர்கள் அல்லது புலுடுத் ஊடாக கணனியில் சேமித்து வைத்தோம்.

இவ்வாறு கையடக்கத் தொலைபேசியில் உள்ள வீடியோக்களை கணனியில் சேமிக்க குறைந்தது சுமார் 10 நிமிடங்களாவது எடுத்தது அல்லவா?ஆனால் இப்போது ஒரு நொடி போதும், கையடக்கத் தொலைபேசி வீடியோக்களை உடனடியாக கணனியில் மட்டுமல்ல உலகமே பார்க்க கூடியவாறு இணையத்தில் ஏற்ற முடியும்.

இதற்கு ஒரு நொடி மாத்திரமே நாம் செலவிட வேண்டியிருக்கும்.

எப்படி? என்பது தானே அடுத்து கேள்வி. இதோ விடை!

நீங்கள் வீடியோவை பதிவு செய்யும் போது உங்கள் கையடக்கத் தொலைபேசியில் GPRS சை செயற்படுத்தி இருப்பதே இதன் முக்கிய அம்சமாகும்.

முதலில் உங்கள் கணனியின் முன் அமர்ந்து என்ற இணையத்தில் உங்களை பதிவு செய்துக் கொள்ளுங்கள்.நீங்கள், உங்களை பதிவு செய்துக் கொண்ட பின்னர் அடுத்த கட்டமாக கணனி திரையில் உங்கள் கையடக்கத் தொலைபேசியின் இலக்கத்தை பதிவு செய்துக் கொள்ளுங்கள்.

அடுத்த சில நிமிடங்களில் உங்கள் கையடக்கத் தொலைபேசிக்கு ஒரு குறுந்தகவல் (SMS) கிடைக்கப் பெறும்.

அதில் காணப்படும் இணைய முகவரிக்கு உங்கள் கையடக்கத் தொலைபேசியின் ஊடாக பிரவேசிக்க வேண்டும்.

அப்போது நீங்கள் பிரவேசிக்கும் இணைத்தளம் ஒரு கோப்பை கையடக்கத் தொலைபேசிக்கு பதிவிறக்கம் செய்ய கோறும்.

உடனடியாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்.

அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் கோப்பானது மென்பொருளாக உங்கள் கையடக்கத் தொலைபேசியில் சேமிக்கப்படும்.

பின்னர் அந்த மென்பொருளின் ஊடாக உள்ளே பிரவேசிக்கும் போது, அங்கே கேட்கப்படும் பாவனையாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை வழங்க வேண்டும்.

அதையடுத்து ஒரு வீடியோ திரையொன்றை உங்கள் கையடக்கத் தொலைபேசியில் காணக்கூடியதாய் இருக்கும்.பின்னர் அதனை Options பட்டனை கிளிக் செய்து வரும் மெனுவிலுள்ள broadcast என்ற சொல்லை கிளிக் செய்த உடன் வீடியோ செய்துக் கொள்ளமுடியும்.

அவ்வாறு வீடியோ செய்யப்படும் அனைத்து வீடியோ கோப்புக்களும் அடுத்த நொடியில் இணையத்திலுள்ள உங்கள் கணக்கில் சேமிக்கப்படும்.எவ்வளவு இலகுவான விடயம். செய்து பாருங்கள்.

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

ஆங்கில எழுத்துக்கள் 26 – ஒரே வசனத்தில்!

உங்களுக்கு தெரியுமா? ஒரே வசனத்தில் 26 ஆங்கில எழுத்துக்களும் வரும்.அந்த வசனம் மாத்திரமே இன்றை எமது பதிவு.

இதோ....................

THE QUICK BROWN FOX JUMPS OVER THE LAZY DOG.

எழுத்துக்களை எண்ணி பார்த்து விட்டு, சரியாக இருந்தால் சொல்லவும். பிழையாக இருந்தாலும் சொல்லலாம்.

வியாழன், 4 பிப்ரவரி, 2010

.....இலங்கை தமிழர் கையில்.....

இலங்கையின் பெரும்பான்மை சமூகமாக தற்போது சிங்களவர்களே உள்ளனர்.

சிங்களவர்களின் கலை, கலாச்சார, பண்பாடுகள் மற்றும் மொழி பாவனை உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் இலங்கை, சிங்களவர்களை மற்றும் சிங்கள மொழியை நாடிச் செல்ல வேண்டியது அவசியம் என்ற நிலையில் தற்போது உள்ளது.குறிப்பாக வைபவங்கள், நிகழ்வுகள் போன்றவற்றிலும் முன்னுரிமை சிங்கள பண்பாட்டிற்கே வழங்கப்படுகின்றமை வழக்கமானதொன்றாகும்.

இந்த கலாச்சாரம் ஆரம்ப காலத்திலிருந்தே வந்தது என்று பலர் கூறி வந்தாலும், அது சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பின்பற்றப்பட்டு வந்தவொன்று என்பதை யாராலும் மறைக்கவோ? மறுக்கவோ முடியாது.

எப்படி நாட்டின் பெரும்பான்மை சிங்களவர்களை சார்ந்தது.இலங்கையின் தேசிய தலைவர்கள் சுதந்திரத்திற்காக போராட்டங்களை மேற்கொண்டதன் விளைவாக 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி இலங்கை சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இலங்கை சுதந்திரம் பெற்றதை தொடர்ந்து முதலாவது பிரதமராக D.S.சேனாநாயக்கவும், அவரை தொடர்ந்து அவரது மகனாக டட்லி சேனாநாயக்கவும் 1952ஆம் ஆண்டு காலக்கட்டம் வரை பிரதமர்களாக இருந்தனர்.

1956ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் S.W.R.D.பண்டாரநாயக்க பிரதமராக இருந்ததுடன், இலங்கையின் தேசிய மொழியாக சிங்கள மொழி பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்த பின்னரே சிங்கள மொழியில் ஆதிக்கம் இலங்கையில் வலுவடைந்துள்ளதாக வரலாறுகள் கூறுகின்றன.

அவரது மறைவைத் தொடர்ந்து 1959ஆம் ஆண்டு அவரது பாரியாரான சிறிமாவே பண்டாரநாயக்க பிரதமராக கடமையாற்றினார்.

1972ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி சிலோன் என அழைக்கப்பட்டு வந்த இலங்கை, ஸ்ரீலங்கா என மாற்றம் பெற்றது. இலங்கையின் தேசிய கொடி மாற்றம் பெற்றதும் இவ்வாண்டிலேயே ஆகும்.

இதன்பின்னரே இலங்கையில் சிங்கள கலாச்சாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை சுதந்திமடைவதற்கு முன்னர் இலங்கையில் பல தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்துள்ளதாகவும் வரலாறுகள் கூறுகின்றன.சிங்களவர்கள் இலங்கையில் முக்கியத்துவம் பெறுவதற்கு முக்கிய காரணம் என கூற வேண்டியது தமிழர்களையே!

இதற்கு பல உதாரணங்களையும் குறிப்பிட முடியும்.

இலங்கையில் பழைய தேசிய கொடியும் தமிழர்களின் கலாச்சாரத்திலேயே இருந்தமை குறிப்பிடத்தக்க விடயம்.

இவை இலங்கையின் பழைய தேசிய கொடிகள்.இப்படியே சிங்கள மொழி வலுவடைந்து, தற்போது இலங்கையின் பெரும்பான்மை என்ற அந்தஸ்தையும் சிங்களவர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர்.