திங்கள், 27 ஜூலை, 2009

வெற்றிப் பட விருது தமிழுக்கு!


தயாரிக்கப்படும் அனைத்து மொழிகளிலுமான திரைப்படங்களுக்கு விருது வழங்க நான் தீர்மானித்தேன். எதற்கு விருது வழங்கலாம் என யோசித்த போது தான் ஒரு தீர்மானம் எனக்கு எடுக்க முடிந்தது.

குறிப்பிட்ட காலத்தில் கூடுதலாக எந்த மொழியில் படங்கள் தயாரிக்கப்படுகின்றது என்பதை அவதானித்து அதற்கு விருது கொடுக்கலாம் என்பது தான் அந்த தீர்மானம்.

எப்படி இது சூப்பர் தானே! ஓ.கே விருது வழங்குவோமா?

நான் வழங்கும் விருது முதலாவது இடத்திற்கு மாத்திரமே! யாரும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை கேட்க வேண்டாம்! காரணம் வழங்க முடியாது.

முதலாவது இடத்திற்கு வந்து திரைப்படங்கள் மிகவும் தூரத்தில் அதாவது முன்னிலையில் உள்ளன. அதனால் தான் முதலாவதற்கு மாத்திரம் விருது!

எந்த மொழியில் உள்ள திரைப்படங்கள் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் அதிகளவில் தயாரிக்கப்படுகின்றன.........

வேறு எது தமிழ் மொழி திரைப்படங்கள் தான்!

என்ன இது! நாளொன்றுக்கு சுமார் 3 அல்லது 4 திரைப்படங்கள் வெளியிடப்பட்டுகின்றன.

என்ன படம் எப்போது வந்தது என்பது இப்போ எனக்கு சந்தேகமாக தான் இருக்கு!

அவ்வளவு படங்கள்! கடந்த சில காலமாக வெளிவரும் படங்களை பார்க்க நேரமும் இல்லை, பார்த்த ஞாபகமும் இல்லை.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் திரைப்பட பாடல்கள் எந்த படத்திலுள்ள பாடல்கள் என்பது, எப்போதும் சந்தேகம் தான் எனக்கு!

எதற்கு இப்படி திரைப்படங்கள் தயாரிக்கின்றனர். ஒரு கருப்பொருள் கூட இல்லாமல் படங்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணமே உள்ளன.

முன்பு வந்த திரைப்படங்களை எடுத்து பார்த்தால் குறைந்தது 100 நாட்களையும் தாண்டி திரையரங்குகளில் ஓடினால் தான் அந்த திரைப்படம் வெற்றி திரைப்படமாக கருதப்படும்.

உதாரணமாக ரோஜா திரைப்படம் 300 நாட்களை கடந்த வெற்றியடைந்தது. இப்படி படங்களை குறிப்பிட்டு காட்ட முடியும்.

ஆனால் இன்று இந்திய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் திரைப்பட விளம்பரங்களில் '10ஆவது நாள் வெற்றிநடை போடுகிறது' என ஒளிபரப்பாகிறது.

10ஆவது நாள் வெற்றி நடையா?

எதற்கு இப்படியான விளம்பரங்கள் வெற்றி நடை என்பதன் கருத்தையே மாற்றிவிட்டார்கள் தமிழ் திரையுலகத்தினர்.

இப்படியான பிரசார நடவடிக்கைகள் இனியும் வேண்டாம்!

வெற்றி நடை என்பதற்கான கருத்தை மாற்றியமைத்தது இந்திய தொலைக்காட்சிகளே!

0 கருத்துகள்: