Thursday 27 August 2009

தேவையா (விஜய்) இது!


நான் சிறிய வயதிலிருந்தே விஜயின் ரசிகன், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விஜயை யாரிடமும் விட்டுக் கொடுத்து பேசமாட்டேன்.

அப்படி இருந்த என்னை இன்று இப்படியொரு பதிவை போட வைத்து விட்டார் விஜய்! ஏன்?

தனக்கென ஒரு பாதை வைத்துக் கொண்டால் ஒருவன் நிச்சயம் உயர்வான இடத்தில் போவது உறுதி! அப்படியான பலரை நாம் கண்டுள்ளோம்.

உதாரணமாக சினிமாவில் சிவாஜி, எம்.ஜி.ஆர். ரஜனி, கமல், விக்ரம் தற்போது அந்த பாதையில் சூர்யா ஆகியோர்.

விஜயும் இதே பாதையில் தான் இவ்வளவு காலமும் இருந்தார். அதற்கு உதாரணமாக பலவற்றை கூற முடியும். ஆனால் ஒன்றை இங்கு குறிப்பிடுகிறேன்.

அது தான் அவரின் ஸ்டைல், அந்த ஸ்டைலை வைத்துக் கொண்டு இன்று பல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இப்படியான ஒரு இடம் கிடைத்திருக்கும் விஜய்க்கு ஏன் இப்படி ஒரு ஆசை!
அரசியலில் போக போவதாக கடந்த காலங்களில வெளியான செய்திகளை அவர் தற்போது உறுதியான உறுதிப்படுத்தி விட்டார்.

கடந்த ஞாயிற்றுகிழமை விஜய் ராகுல் காந்தியை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், இன்று காலை இலங்கை பத்திரிகைகளிலும் அந்த செய்தி வெளியாகியிருந்தது.

இந்த சந்திப்பு நீண்ட நேரமாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது அவர்கள் இருவரும் அரசியல் தொடர்பான கருத்துக்களை பரிமாற்றிக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜயின் இந்த நிலைக்கு காரணம் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தான்!
ஒரு பெரிய குழி விஜய்க்காக காத்திருக்கிறது. நிச்சயம் அதில் அவர் வீழ்வார். அப்போது அவரை அவருடைய அப்பா இல்லை யாராலும் காப்பாற்ற முடியாது!

ஒரு நல்ல வழியை ஆண்டவன் தனக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் போது ஏன் தேவையில்லாதவற்றிற்கு ஆசை. வேண்டாம் தயவு செய்து இதை நிறுத்திக் கொள்ளுங்கள் விஜய்!

இவ்வாறு அவர் அரசியலுக்குச் செல்லும் பட்சத்தில் அவருடைய வாழ்க்கை கேள்வியாகிவிடும். இப்போ உள்ள வழி தான் சரி விஜய்க்கு!


அனைத்தும் ஆண்டவனின் கைகளில். அரசியல் வாழ்க்கையிலும் வெற்றி பெற்றால் சந்தேஷம் தான் எனக்கு!

6 comments:

SShathiesh-சதீஷ். said...

உன்கள் கருத்தோடு நான் உடன்படுகின்றேன். விஜய் கெட்டுப்போவது அவர் தந்தையால். அரசியலை விட இந்த சினிமாவே அவருக்கு போதும்.என்னைப்போருத்தவர இவர் ரஜினியை இதிலும் பின்பற்றி நாடகம் போடுகிறார்.

Anonymous said...

enakkum vijai arasijalukku varuvathu pidikkavilai

சப்ராஸ் அபூ பக்கர் said...

தனக்கென தனி இடம் வைத்திருந்த தளபதியா இப்படி?... பார்க்கலாம்... பார்க்கலாம்....
துல்லிய மாடு பொதி சுமக்க நீண்ட நாட்கள் எடுக்காது இல்லையா?...

Anonymous said...

உண்மையை கூற வேண்டுமானால், தொடர் பட தோல்வியால் விஜய் நடிப்பில் நம்பிக்கை இழந்து இருக்ககூடும்.
அவர் பல படங்களை ஒரே பாணியாக நடிக்காமல், சில படங்களை நன்றாக நடித்தால் நிச்சயம் வெற்றி பெறுவார்.

Anonymous said...

he is like any other human being wanted to do something for others or like many other politician he wanted to earn money for himself.
but the pary he try to join...which had Tamils blood in its hand, thats what i cant understand. He is here because of Tamils and their support.. but if he goes against them... Yah ther is no one can help him.

Myl

மயில்வாகனம் செந்தூரன். said...

ம்ம்ம்... உண்மையை சொல்ல வேண்டுமென்றால்....

முதலில் தமிழ் உணர்வு பின்னர்தான் இன்னோரன்ன விடயங்கள்....

இப்படி ஒவ்வொருவரும் விமர்சித்தால் விஜய் முடிவை மாற்றுவார்....

நல்ல பதிவு... தொடரட்டும்... வாழ்த்துக்கள்....