வெள்ளி, 31 அக்டோபர், 2008

மௌனம் காக்கும் ஊர்.....


இந்தியா – தமிழ் நாட்டில் உள்ள குறிச்சிகுளம் எனும் சிறிய கிராமம். இந்த கிராமத்தில் உள்ள மக்களின் பெருந் தொகையானோர் முஸ்லிம்கள்.

இந்த கிராமத்தம் மௌனத்தின் உருவம்.

என்ன மௌனம்? புரியவில்லையா? இங்கு உள்ளவர்களில் 100க்கும் 40 சதவீதமானோர் ஊமைகள். அது மட்டுமா அதிலும் சிலருக்கு காது கேட்காது?

என்ன கொடுமை!

இந்த கிராமத்தில் நிச்சயமாக குடும்பத்தில் ஒருவராவது ஊமை என்பது தான் கடவுள் கொடுத்த சாபம்.

இதற்கான காரணம் என்ன?, சாபமா? அல்லது நோயா? பார்ப்போம்.....

பல வருடங்களுக்கு முன்னர் இந்த ஊரில் உள்ள 5 குடும்பங்கள் தாங்க இதற்கு காரணம்...

இந்த குடும்பங்களும் ஐந்தும் அந்த ஊரில் மிக பெரிய பணக்காரர்கள். இந்த சொத்து வெளியில் உள்ளவர்களுக்கு சென்று விட கூடாதென்ற பேராசையால் உறவு முறைக்குள் திருமணங்களை செய்து கொண்டனர் அந்த 5 குடும்பங்களை சேர்ந்தவர்கள்...

அந்த குடும்பத்தில் உள்ளவர்களில் சிலர் ஊமைகள்... இது தான் பரம்பரையாக பரவ தொடங்கியது.

இப்போதும், உறவு முறைக்குள் தான் திருமணம் செய்து கொள்கிறார்கள்..

இதற்கு கூட காரணம் இருக்கு.....

வெளியில் உள்ள எவருமே இவர்களை திருமணம் செய்ய முன் வருவதில்லை..

பாய்ந்து ஓடி திரியும் குழந்தைகள் முதல் தள்ளாடும் கிழவன் வரை பலர் ஊமைகள் அல்லது காது கேளாதவர்கள்.......

இது தொடர விடாது தடுப்பது எப்படி? அவர்களால் தான் அது முடியும்...... எப்படி?

உறவு முறைகளை திருமணம் செய்வதை தவிர்த்து வெளியில் உள்ளவர்களை திருமணம் செய்தால் நிச்சயம் அடுத்த தலைமுறை ஊமைகள் அல்ல....

அடுத்த தலைமுறையில், இந்த ஊமைகள் நிச்சயம் மௌனம் காக்காது. வெடிக்குண்டுகளின் சத்தங்களை போல பேசும்......
....மூலம் விஜய் T.V....

புதன், 29 அக்டோபர், 2008

நான் முதலில் கண்ட விமான தாக்குதல். (....அனல் மின்சார நிலையத்தில்....)


28ஆம் திகதி இரவு 11 மணி, எனக்கு தூக்கம் கண்ணை சுற்றியது. பாயை விரித்து நித்திரைக்கு சென்றேன்.

இரவு 11.30 அளவில் திடீர் என துப்பாக்கி வேட்டு சத்தங்கள் கேட்டன.

எழுந்து பார்த்தேன் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது, அண்ணன் என்னிடம் புலிகள் தாக்குதல் நடத்துவதாக கூறினார்.

உடனே வீட்டு கதவை திறந்து பார்த்தோம். விமானம் ஒன்று விரைந்து சென்று குண்டுகளை எறிந்தது.

அதேவேளை, கொழும்பு துறைமுகத்திலிருந்து இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

இரவு, மின்சாரம் கூட இல்லை, வானில் பட்டாசு போடுவது போல, துப்பாக்கி ரவைகள் பாய்ந்தன.

மறுபக்கம் களனிதிஸ்ஸ அனல் மின்சார நிலையத்தின் மீது புலிகளின் விமானப் படையினர் தாக்குதலை மேற்கொண்டனர்.

அந்த மின்நிலையம் தீபற்றி ஏறிய தொடங்கியது. மின்நிலையம் அமைந்துள்ள பகுதியில் உள்ள வானம் ஒரே சிகப்பு நிறம், மறுபக்கம் பட்டாசு போடுவது போல துப்பாக்கி ரவைகள் பாய்கின்றன.
ஒரு 5 நிமிடங்கள் ஒரே சத்தம். என்ன செய்வது என எனக்கு தெரியவில்லை. கை, கால் நடுங்க தெடங்கியது. வீதியில் உள்ளவர்கள் ஓட தொடங்கினர்.

எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் பயந்து. சத்தம் கூட இல்லை.

அதேவேளை, எனக்கு முதலில், வெற்றி எப் எமின் விரிவாக்கல் பிரிவை சேர்ந்த ஜெயிசன் போன் செய்து அங்கே என்ன நடக்கிறது என்றார்.

நான் அதற்கு நடந்தவற்றை கூற, அவர் பயந்து, அதன் பிறகு எனக்கு 9 தடவை போன் செய்தார்.

முடியலா? என்ன செய்ய என்னுடன் வேலை செய்பவராயிற்று!

கடைசியாக ஜெயிசன் போன் செய்தது 1 மணி, எப்படி எனக்கு இருக்கும்.

அதன் பிறகு என்னுடன் வேலை செய்யும் அனைவரிடமும் தொடர்பு கொண்டு செய்;திகளை பறிமாற்றி கொண்டேன்.

மின்சாரம் கூட இல்லை, வியர்வை தாங்க முடியவில்லை, என்ன செய்ய துக்கம் கூட வரவில்லை. விளித்தே இருந்தேன்.

விடிந்ததும், எழுந்து குளித்து விட்டு வேலைக்கு வந்து விட்டேன். அன்று மாலை 7 வரை நான் வேலையில் இருந்தேன். மிக கஷ்டப்பட்டு தான் வேலை செய்தேன். முடியல........

மனதை வருத்திய பாகிஸ்தான்!


பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 5 அளவில் இடம்பெற்றதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் - பலோசித்தான் மாகாணத்தில் குவெட்டா நகரிலிருந்து வடகிழக்காக 70 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள பிரதேசத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் பல்லாயிரகணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பிரதேசத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து ஹெலிகொப்டர்களின் மூலம் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக பாகிஸ்தானிய இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சலீம் நாவாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், பெருமளவிலான கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதினால் இடிப்பாடுகளுக்குள் சிக்கி இன்னும் பலர் உயிரிழந்திருக்கலாமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 1935ஆம் ஆண்டு குவெட்டா நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 30 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்திருந்ததுடன், 2005ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 75 ஆயிரம் பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

திங்கள், 27 அக்டோபர், 2008

காதலிக்கும் பறவைகள்


மனிதர்களுக்கு அடுத்தப்படியாக காதலிக்கும் உயிரிணம் எது தெரியுமா? பறவை தான்!
பறவைகளின் காதல் என்பது உலகில் வாழும் உயிரிணங்களிலேயே சிறந்தது என தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், அந்த பறவைகளுக்கு தெரியாது, தான் காதலிக்கும் விடயம். அது தான் உண்மையான அன்பு!
முதலில் பறவைகளின் காதலைப் பற்றி நோக்குவோம். அதற்கு ஒரு சிறந்த காரணம் கூட இருக்கின்றது.

பறவைகள் முட்டை இட்டு, தனது இனத்தை பெருக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
அப்படி முட்டையிட்டு தனதினத்தை பெருக்க குறித்த பறவை அடைக்காப்பது இன்றியமையாதொன்றாகின்றது.

அடைக்காக்கும் பறவைகள் முழு நேரமும் அடைக்காக வேண்டும்.
முடியுமா?
அந்த பறவைக்கு நிச்சயம் உணவு தேவை, அதை எப்படி அந்த பறவைகள் தேடும்.
அதற்காக தான் பறவைகள் காதலிக்கின்றன.

இப்படி அடைக்காக்கும் பறவைக்கு, அதை காதலிக்கும் பறவை உதவியாக உள்ளது.
பெண் பறவை அடைக்காக்கும் போது, ஆண் பறவை இறை தேட சென்று விடும், அந்த நேரத்தில் பெண் பறவை அடைக்காக்கும், அடுத்தப்படியாக ஆண் பறவை அடைக்காக்கும் போது பெண் பறவை இறைத் தேட போகின்றதாம்.

இதை தான் பறவைகள் காதலிப்பதாக கூறுகின்றனர்.

சனி, 25 அக்டோபர், 2008

தமிழனின் கலக்கல் இனி தெரியும் சினிமா நாயகனுக்கு!


தமிழ் நாட்டில் ஈழத் தமிழர் படுகொலைச் செய்யப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் மேற்கொண்டுவரும் நிலையில் அஜித் மற்றும் அர்ஜுன் ஆகியோர் “தமிழர்களுக்காக நாம் ஏன் உண்ணாhவிரதத்தில் ஈடுபட வேண்டும்” என கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழர் என்ற பற்று இல்லாத ஒருவன் ஏன் தமிழ் சினிமாக்களின் நடிக்க வேண்டும். சிங்கள சினிமாவிற்கு செல்ல வேண்டியது தானே?

தமிழினின் பணமும், ஒத்துழைப்பும் இல்லாமல் எப்படி உலகின் வெளிச்சத்திற்கு வந்தார்கள்.

இனிமேல் தமிழன் யார் என்று தெரியவரும் அவர்களுக்கு!

தமிழனின் கலக்கலை கண்ட உலகின் வயிறு கலங்குகின்ற இந்த நிலையில் அவர்களின் உடம்பே கலங்குவது நிச்சயம்.

தமிழனின் கலக்கலில் உலகம் கலங்கியது!


ஈழத் தமிழர் படுகொலையை கண்டித்து 24.10.2008ஆம் திகதி தமிழக முதல்வர் மு.கருணாநிதி தலைமையில் சென்னையில் நடத்தப்பட்ட மிக பிரமாண்டமான மனித சங்கிலி போராட்டத்திற்கு லட்சக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டனர்.

சென்னையில் நடத்தப்பட்ட இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு கொட்டும் கடும் மழையிலும் தமிழர்கள் கலந்து கொண்டதை இட்டு ஈழத்தில் வாழும் மக்களின் சார்பில் இந்திய தமிழர்களுக்கு நான் நன்றி செலுத்துகிறேன்.

தமிழன் என்று செல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா! என்று கூறிய வார்த்தைக்கு, நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்திலிருந்து உலகிற்கு தமிழன் தலைநிமிர்ந்துள்ளவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர் படுகொலையை கண்டித்து இந்தியாவினால் நடத்தப்படும் போராட்டத்திற்கு, இன்று உலகமே கலங்கியுள்ளது.

உலகின் வயிற்றை 24ஆம் திகதி தமிழன் கலக்கியுள்ளான்.

நடைபெற்ற சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்ட கவிஞர். வைரமுத்து கூறியது என் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளது.

“ஈழ மக்கள் குண்டு மழையில் நனைகிறார்கள், நாம் நனையும் இந்த வானின் மழை பெரிதல்ல!” இது மிக சிறந்த வார்ததை.
தமிழனின் வீரம் தொடர எனது வாழ்த்துக்கள்..

வெள்ளி, 24 அக்டோபர், 2008

இலங்கையின் விடியல்


கடந்த சில வாரங்களாக இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக இந்திய தமிழக அரசியல் வாதிகள் கூடுதலாக கவனம் செலுத்தி வருகின்றனர்.

சென்னையில் கடந்த 14ஆம் திகதி தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் 21ஆம் திகதி மனித சங்கிலி போராட்டம் ஒன்றை நடத்த மற்றும் இலங்கை பிரச்சினைக்கு சரியான முடிவை இந்திய மத்திய அரசு பெற்று கொடு;க்காவிட்டால் அனைத்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவதான முடிவுகள் அன்று எடுக்கப்பட்டன.

எனினும், 21ஆம் திகதி நடைபெறவிருந்த மனித சங்கிலி போராட்டம் மழை காரணமாக இன்று 24.10.2008 நடைபெறுகிறது.

14ஆம் திகதியிலிருந்து 2 வாரங்கள் என்பது 28ஆம் திகதி ஆகும்.

நேற்று 23.10.2008 கைது செய்யப்பட்ட தொல். திருமாவளவன் கூறியதாவது:- 28ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் எமது நடவடிக்கை தீவிரமாக இருக்கும் என்றார்.

இருப்பினும் இன்னும் 4 நாட்கள் மாத்திரமே 28ஆம் திகதிக்கு உள்ளது.

தமிழகத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி மிக பாரிய தமிழ் குண்டொன்று வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் இந்திய தமிழ் திரையுலகினர் பாரிய உணாவிரத போராட்டத்தை முதலாம் திகதி நடத்த திட்டமிட்டுள்ளனர்.

“தமிழர்களுக்கு குரல் கொடுப்பதை பார்க்க ஆசையாக தான் உள்ளது. இலங்கைக்கு இந்த பிரச்சினையிலிருந்து விடியல் கிடைக்குமா?”

வியாழன், 23 அக்டோபர், 2008

காரின் வேகம் மணிக்கு 1610 KM


உலகில் கார் பாவனையாளர்கள் அதிகரித்து வருகின்றனர்.

உலகில் புது விதமான மற்றும் அதிக சலுகைகள் உள்ள கார்களை உருவாக்கும் அளவு அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் இங்கிலாந்து உலகிலேயே அதி வேகமாக செல்லக்கூடிய கார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

இந்த கார் மணிக்கு 1610 KM வேகத்தில் செல்லக் கூடிய நிலையில் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக எமது நாடுகளில் மணிக்கு 160 KM வேகத்தில் செல்லக் கூடிய கார்களை வைத்து நம்மவர் “எவ்வளவு முடியுமே அவ்வளவு வேகமாக செல்கின்றனர்” இந்த காரை நம்மவருக்கு கொடுத்தால்.
எப்படி இருக்கும்?
பாதையில் செல்ல முடியுமா?

ஐரோப்பிய போர் விமானத்தின் என்ஜினை பயன்படுத்தியே இந்த காரை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்னும் 18 மாதங்களில் இந்த கார் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அந்த நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது 2011 ஆம் ஆண்டு வெளிவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1997ஆம் ஆண்டு “என்டி கிரீன்” என்ற விமான ஓட்டுநர் மணிக்கு 1288 KM வேகத்தில் செல்லும் காரை கண்டுப்பிடித்து சாதனை படைத்திருந்தார்.

இதன் பிறகு வரும் மிகவேகமான செல்லக்கூடிய கார் இதுதான். பார்ப்போன் உலகம் செல்லும் வேகத்திற்கு இன்னும் எத்தனை வாகனங்களை கண்டுபிடிப்பார்கள் என்று!

எல்லாமே நமக்கு தான். எவ்வளவு முடியுமே! அவ்வளவு செய்வோம்.

மனிதனுக்கு பேய் பிடிப்பது பற்றிய ஆராய்ச்சி.


மனிதர்களுக்கு பேய் பிடிக்கிறது. ஏன் மனிதர்களுக்கு பேய் பிடிக்கிறது ஆராயப்பட்ட விடயங்கள்.

மனிதனின் ஆள் மனதில் தோன்று ஆசைகள் நிறைவேறாத பட்ஷத்தில், அதன் நினைவுகள் ஆள்மனதில் அடிக்கடி தோன்றி மறையும். இது காலச் செல்ல செல்ல அவன் என்ன நினைத்தானோ? அதுவாக அவன் மாறுகிறான். அதுவே பேய் பிடிப்பதென்று கூறப்படுகிறது. இது விஞ்ஞானத்தில் MULTIPLE PERSONALITY DESORDER என அழைக்கப்படுகின்ற ஒரு வகை மன நோய் என கூறலாம்.

உலகில் பேய் பிடிப்பது பெண்களுக்கு அதிகம். காரணம் என்ன?
ஆண் மனதில் தோன்றும் ஆசைகளை விட பெண்களின் மனதில் தோன்றும் ஆசைகள் அதிகம். அது நிறைவேறாத பட்ஷத்தில் அவர்களுக்கு பேய் பிடித்து விடுகிறது.

இவ்வாறு ஆள் மனதில் தோன்றும் ஆசைகள் நிறைவேறாத ஆத்திரத்தை அவர்கள் வெளிப்படுத்துவது ஆக்ரோஷமாக இருக்கின்றது.

இந்த ஆக்ரோஷத்தையே பேய் பிடித்து விட்டது என பாமர மக்கள் நம்புகின்றனர்.

இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களை பேய் பிடித்ததாக கூறி, இந்த பேயை விரட்ட மக்கள் பல உத்திகளை கையாளுகின்றனர்.
இவ்வாறு ஆக்ரோஷமாக நடப்பவர்களை பேய் விரட்டுவதாக கூறி சமய வழிகளை மக்கள் நாடுகின்றனர்.

சமயத்தின் பக்கத்திற்கு சென்று மிக மோஷமான உத்திகளையே கையாளுகின்றனர்.

உதாரணமாக:- சாட்டை அடி, தலையில் தேங்காய் உடைத்தல், மூடியை மரத்தில் கட்டி வைத்தல், கூறிய ஆயுதங்களில் உடலில் குத்துதல் என இன்னும் பல மோஷமான விதத்திலேயே இந்த நோயை குணப்படுத்த நினைக்கின்றனர் மக்கள்.

இது சாத்தியமாகுமா? மனிதனின் மனதில் தோன்றிய ஆசைகள் நிறைவேறும் வரை இந்த மன நோய் குணமடையமாட்டாது.

உலகில் பேய் என்று ஒன்று உள்ளதா? இதற்கு ஒரு ஆராய்ச்சி செய்ய நான் விரும்புகிறேன்.

எனது நண்பர்களின் மூலம் எனக்கு கிடைத்த சில தகவல்களின் அடிப்படையில் கீழ் காணும் தகவல்களை நான் திரட்டியுள்ளேன்.

ஒரு மனிதனின் ஆள்மனதில் உள்ள ஆசைகள் நிறைவேறாது, அவர் உயிரிழந்தால். அவனின் ஆத்மா இந்த உலகத்தை விட்டு செல்லாதென கூறப்படுகின்றது.

பின்னர் குறித்த மனிதனின் ஆன் மனதில் என்ன ஆசைகள் காணப்பட்டது என கண்டறிந்து அதனை நிறைவேற்றி வைத்த பின்னரே குறித்த மனிதனின் ஆத்மா இந்த உலகத்தை விட்டு செல்லும் என்ற நம்பிக்கை இந்த உலகில் காணப்பட்டு வருகின்றது.

இது உண்மையா? இது தொடர்பான தகவல்களை எனக்கு அனுப்பி வைக்கவும்.

புதன், 22 அக்டோபர், 2008

இந்தியாவின் சந்திரன் கனவு நினைவாகியது.


இந்தியாவினால் நிர்மானிக்கப்பட்ட சந்திராயன்-1 என்ற விண்கலம் விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.

இந்த விண்கலத்தை இன்று காலை 6.22 அளவில் இந்தியா ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சத்தீஸ் தவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து செலுத்தப்பட்டது.

இந்த விண்கலம் 4 கட்டங்களாக பிரிந்து, இதில் இறுதி கட்டத்தில் விண்கலம் தனது புவிப் பாதையை வெற்றிகரமாக அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய தினம் இந்திய விண்வெளி வரலாற்றில் மிகச் சிறப்புமிக்க தினம் என்றும், இன்று ஆரம்பித்த இந்த பயணம் விண்வெளி பயணத்தில் மிக முக்கியமான முயற்சி என்றும் இதன் போது உரையாற்றிய விஞ்ஞானி மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, பெங்களூர் - பைலாலு கட்டுப்பாட்டு மையத்தின் உதவியுடன் சந்திராயன்-1 விண்கலம் நிலவுக்கு அருகே கொண்டு செல்லப்பட்டு, அதன் புவிவட்டப் பாதையில் நிறுத்தப்படுவதாகவும் இதற்கு 15 நாட்கள் எடுக்கும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திராயன் - 1 விண்கலம் வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டதன் மூலம் நிலவுக்கு ஆளில்லா விண்கலம் அனுப்பிய 4ஆவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவினால் அனுப்பி வைக்கப்பட்ட இந்த விண்கலத்தில் அதி நவீன வீடியோ கமராக்கள் பொறுப்பட்டுள்ளதாகவும், இந்த வீடியோ கமராக்கள் மூலம் சந்திரனின் அனைத்து பாகங்களும் படமாகப்பட்டு புமிக்கு அனுப்பி வைக்கப்படுமெனவும் இந்திய விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த விண்கலம் 3500 கோடி ரூபா செலவில் அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்திய எதிர்காலத்தில் 10 ஆயிரம் கோடி ரூபா செலவில் ஆளுடனான விண்கலம் ஒன்றை ஏவ திட்டமிட்டுள்ளதான இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.