Tuesday 23 December 2008

இவர்கள் அதிசய பிறவிகளா?












டோயோட்டாவின் பின்னடைவு


உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டோயோட்டா நிறுவனம் கடந்த 71 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த ஆண்டு நட்டத்தை சந்திக்கப் போவதாக அறிவித்துள்ளது.

உலகளாவிய பொருளாதார வீழச்சி மற்றும் ஜப்பானின் யென் நாணயயத்தின் மதிப்பு உயர்வு ஆகிய காரணங்களால் டோயோட்டாவின் விற்பனை வருமானம் வீழச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2008ஆம் ஆண்டின் மொத்த இழப்பு 1.7 பில்லியன் டொலர்களாக இருக்கும் என்று அந்த நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவில் புதிய தொழிற்சாலை திறப்பதை தள்ளிவைத்துள்ள டோயோட்டா நிறுவனம், பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Monday 22 December 2008

வேண்டாம் இப்படி ஒரு நாள் இனி எம்வாழ்வில்!


2004.12.26 உலகின் எமது சொந்தங்களை இழந்த நாள், எமது நண்பர்களை பிரிந்த நாள், எத்தணை ஜென்மங்கள் எடுத்தாலும் மறக்க முடியாத நாள்!...............................

சுமத்திரா தீவில் ஏற்பட்ட ஆழிப்பேரலை (சுனாமி). 2006ஆம் ஆண்டு காலை அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்த மிக கொடுரமான இயற்கையின் முகம்!.

ஆசிய மக்களின் வாழ்க்கையை, உள்ளத்தை, சிந்தனையை முழுமையாக இயற்கையின் பக்கம் திரும்ப வைத்த கடலின் செயல்.

கடலுக்கு ஒரு ஆசை, மனிதன் என்ன தான் பூமியில் செய்கின்றான் என பார்க்க?

வந்தது கடல் பூமிக்கு அள்ளி சென்றது எமது உறவுகளை, சென்ற எமது உறவுகள் திரும்பவில்லை வீட்டிற்கு.

இந்த ஆழிப்பேரலையினால் சுமார் 225000 பேரிற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

பல்லாயிரகணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இருப்பிடங்களை இழந்தனர், உறவுகளை இழந்தனர், தமது வலிமையை இழந்தனர், தமது தொழிலை இழந்தனர்.

மொத்தத்தில் உயிரோடிருந்து தம்மையே இழந்தவர்கள் கூட இருக்கின்றனர் பூமியில்,
2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை, சுமத்திரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆழிப்பேரலையாக மாறி ஆசிய நாடுகளையே அழித்து சென்றது.

2004ன் யேமன் வந்தான்; ஆழிப்பேரலையாக, உயிர்களை எடுத்து சென்றான் சரமாறியாக.

இந்த நிலநடுக்கம் 9.2 ரிக்டர் அளவில் பதிவாகியது.

உலகில் இதுவரை ஏற்பட்ட மிக பெரிய நிலநடுக்கங்களில் 2ஆவது உயிர்காவும் நிலநடுக்கம் இதுவே.



பலியானோரின் நினைவுகள் இன்னமும் மனதை விட்டு நீங்கவில்லை, அதற்குள் 4 வருட நினைவு வந்துவிட்டது.

நேற்று ஏற்பட்டது போல இருக்கிறது. உறவுகளை பிறிந்து 4 வருடங்களா?

நினைத்து கூட பார்க்க முடியவில்லை,

மனிதனாக பிறக்கும் ஒவ்வொருவரும் இறப்பது உலக நியதி!
ஆனால் தமது உறவுகள் அனைவரும் இறப்பது கொடுமை!
அது தான் 2004.12.26ஆம் திகதி நடைபெற்றது!
இயற்கை ஏன் அப்படிப்பட்ட ஒரு கொடுமையை செய்தது!
எத்தனை விஞ்ஞானிகள், எத்தனை வைத்தியர்கள், எத்தனை திறமைகளை கொண்ட எத்தனை பேர்!
உலகிற்கு இது ஆபத்து மட்டுமல்ல!
இழப்பும் கூட!

எதிர்கால சந்ததியினரின் வளர்ச்சி ஒடுக்கப்பட்ட ஆண்டு 2004 நாள் 26, வேண்டாம் இப்படி ஒரு நாள் இனி எம்வாழ்வில்.

ஆழிப்பேரலையினால் உயிரிழந்த என் உறவுகளின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் இறைவனை.......

Sunday 21 December 2008

சீனாவில் தடை செய்யப்பட்ட இன்னுமொரு இணையத்தளம்!


சீனாவில் பல இணையத்தளங்கள் தடைசெய்யப்பட்டு வருகின்றன.

இதில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எனது வளைப்பதிவில் நான் எமுதியிருந்தேன் சீனாவில் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பற்றி:

மேலும் முக்கியமான ஒரு இணையத்தளம் தடைசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

என்ன தெரியுமா? GOOGLE.COM தான்க அது!

என்ன கொடுமை சார் இது!

GOOGLE லை மாத்திரம் சீனாவில் கடந்த மாதம் 45.6 மில்லயன் பேர் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்கான காரணம் என்ன தெரியுமா? சீனாவில் இவ்வருடம் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி தான்.

ஒலிம்பிக் போட்டிகள் அனைவருக்கும் நன்மையாகவே அமைந்தது, ஆனால் இணையத்தளங்களுக்கு இது எதிராகிவிட்டதே!

தற்போது சீன அரசுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்ட வண்ணம் உள்ளன.

கலந்துரையாடல்களின் பின்னரே மீண்டும் இணையத்தளங்கள் அந்த நாட்டில் செயற்படுமா? இல்லையா? என்பது குறித்து தெரியவரும்.

பார்ப்போம் எல்லாம் அவன் செயல் அல்லவா!

எனது வாழ்த்துக்கள்

Thursday 18 December 2008

பீ.பீ.சீ செய்தி இணையத்தளம் சீனாவில் தடை.


உலக நாடுகளிலுள்ள செய்தி இணையத்தளங்களில் பெரும் பாலானவையை சீன அரசு தமது நாட்டில் தடை செய்துள்ளது.

இந்த வருடம் சீனாவில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் போது சீன அரசியல் சட்டத்திட்டத்திற்கு எதிரான செய்திகளை வெளியிட்டதாக கூறியே செய்தி இணையத்தளங்கள் பலவற்றை சீன அரசு தடை செய்துள்ளதாக சீன தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு தடை செய்யப்பட்ட இணையத்தளங்களில் பீ.பீ.சீ இணையத்தளமும் ஒன்றாகும்.

சீனாவில் பலரினாலும் உபயோகிக்கும் மிக முக்கியமான செய்தி இணையத்தளங்களையே சீன அரசு தடை செய்துள்ளது.

சீனாவில் செய்தி நுகர்வோர் பெரும் அசௌகரியங்கள் எதிர்நோக்கி வருவதாகவும், உலக செய்திகள் தெரிந்து கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும் சீன மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு தடை செய்யப்பட்ட இணையத்தளங்களில் உலகில் பலரும் உபயோகிக்கும் தேடுபொறி இணையத்தளமொன்றும் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான சரியாக தகவல் எனக்கு இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

தெரிந்தால் பதில் அனுப்பவும்.

உலக நாடுகளில் மிக வேகமாக மிக முக்கியமான இணையத்தளங்களை நாடுகள் தடை செய்து வருகின்றன.

இதில் நாம் நோக்க வேண்டியது நாட்டுக்கு தேவையான இணையத்தளங்களையே அந்த நாடுகள் தடை செய்கின்றன.

எமது நாட்டில் கூட அதே நிலை தான்

சிம்பாப்வேயில் கொலரா நோயினால் 978 பேர் பலி.


சிம்பாப்வே நாட்டில் கொலரா நோயினால் இதுவரை சுமார் 978 பேர் வரை உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்த நோய் தொடர்பாக ஐக்கிய நாடுகள் ஒன்றியம் சிம்பாப்வேயில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

சிம்பாப்வேயில் கடந்த ஒரு வாரத்தில் இந்த நோயின் தாக்கம் 25 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஒகஸ்ட் மாதம் முதல் இன்று வரை இந்த நோயினால் 18 ஆயிரத்து 413 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 978 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் ஒன்றியம் சிம்பாப்வேயின் ஜனாதிபதி ரொபட் முகாபேயுடன் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக தகவல் தெரிவிக்கி;ன்றன.

இந்த நோய் உலக நாடுகளுக்கு பரவக் கூடிய அபாயம் தோன்றியுள்ளதாக ஐக்கிய நாடுகள் ஒன்றியம் கூறியுள்ளது.

Sunday 7 December 2008

தண்ணீரில் ஒடும் காலம்!


அமெரிக்காவின் பொருளாதாரம் கடந்த 15 வருட காலத்தில் இல்லாதவாறு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பொருளாதார வீழ்ச்சியினால் சுமார் 5 லட்சத்து 33 பேர் தமது வேலையை இழந்தனர்.

அமெரிக்காவில் வேலையில்லாது தவிப்போரின் சதவீதம் தற்போது 6.7 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொருளாதார நெருக்கடியானது இந்த வருடம் நவம்பம் மாதம் முதல் ஏற்பட்டதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக நாடுகளின் வல்லரசான அமெரிக்காவின் நிலை தற்போது வீழ்ச்சியடைந்து வருகிறது.

இதேவேளை, எரிப்பொருளின் விலையிலும் வீழ்ச்சியடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மசகு எண்ணெய் ஒரு பிப்பாயின் விலை 150 டொலரிலிருந்து தற்போது 40 டொலருக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

இதையடுத்து, ஒபெக் தனது எரிப்பொருள் விநியோகத்தை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக ஒபாகின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் சிறிது காலங்களில் எரிப்பொருளின் உற்பத்தி நிறுத்தக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.

அவ்வாறு உற்பத்தியை நிறுத்தினால் எமது நிலை.

யோசிக்க வேண்டியது தான், நீரில் ஒட வேண்டிய காலம் வர போகிறது!

Thursday 4 December 2008

அழகு தான் ஆபத்து.





தீவிரவாத செயல்கள் 2013ஆம் ஆண்டு வரை


உலகெங்கும் தீவிரவாதிகளினால் நடத்தப்பட்டுவரும் தாக்குதல்கள் 2013ஆம் ஆண்டு வரை நடத்த திட்டமிட்டு, தயாரித்து கைவசம் வைத்துள்ளதாக அமெரிக்க புலனாய்வுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

தீவிரவாதிகளின் தாக்குதல் கடந்த 5 வருடங்களாக அதிகரித்து வருகின்றதாகவும், ஆசிய நாடுகளில் இந்த நிலை மிக மோசமாக உள்ளதாகவும் அமெரிக்க புலனாய்வுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் 27ஆம் திகதி இந்திய மும்பை நகர் தாக்குதலை கண்கானித்த அமெரிக்கா, தீவிரவாதம் தொடர்பாக தகவல் திரட்ட தொடங்கிது.

இதிலிருந்தே, 2013ஆம் ஆண்டு வரை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முடியும் என அமெரிக்க புலனாய்த்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

உலகொங்கும் உருவாகிவரும் தீவிரவாதிகள் எதிர்காலத்தில் ஆணு ஆயுதங்கள் மற்றும் வைரஸ்களை பரப்ப திட்டம் தீட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனை பாகிஸ்தானிய மற்றும் ஆப்கானிஸ்தானிய தீவிரவாதிகள் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பாக அமெரிக்க புலனாய்த்துறை விஷேட குழுவொன்றை நியமித்து, தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்க தகவல் வெளியிட்டுள்ளது.