திங்கள், 23 பிப்ரவரி, 2009

உலகில் தமிழனுக்கு இடம்!


தமிழர்கள் என்றாலே உலகில் தனி இடத்தை பிடித்து வருகின்றனர்.

தமிழ் மொழி அழியா மொழி என சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

தமிழர்களை நோக்கினால் பலர் உலக சரித்திரத்தில் இடம்பிடித்துள்ளதை நான் கூறவே தேவையில்லை. உங்களுக்கு தெரியும் அல்லவா!

அப்படியே தான் இன்று தமிழன் ஒருவர் சர்வதேச ரீதியில் விருது பெற்று தமிழுக்கான இடத்தை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் இந்திய – தமிழக இசையமைப்பாளர் மற்றும் பாடகர்.

இவர் ஸ்லம் மாக் மில்லியனர் திரைப்படத்திற்கு இசையமைத்திற்காகவே ஒஸ்கார் விருதுகள் இரண்டை தனதாக்கி கொண்டுள்ளார்.

ஒஸ்கார் விருது என்பது உலக அளவிலான திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும்.

இதனை கூடுதலாக ஆங்கில திரைப்படங்களே பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் கடமையாற்றும் எவரும் இதுவரை ஒஸ்கார் விருதை பெறாத நிலையில் தமிழ் சினிமாவின் மூலம் உலகிற்கு அறிமுகமாகி சர்வதேச ரீதியில் தற்போது புகழ்பெற்றுள்ள ஏ.ஆர் ரகுமானே தமிழர்களில் முதன் முதலில் இந்த விருதை பெற்றுள்ளார்.

தமிழன் என்ற ரீதியில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் இவர் பெற்ற விருதை எண்ணி.

மேலும், ஒஸ்கார் விருது பெற்றமை குறித்த மேடையில் உரையாற்றிய ஏ.ஆர் ரகுமான். தமிழில் பேசியதை எண்ணி மகிழ்ச்சியடைவதோடு, ஏ.ஆர்.ரகுமானுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

தழிழ் மொழியை வாழ வைப்பவர்களில் நீங்களும் அடங்குவதை இந்த சந்தர்ப்பத்தில் நான் உலகிற்கு கூறி கொள்ள விரும்புகிறேன்.

இதற்காகவே தமிழகம் அவருக்கு வேறு ஒரு விருதை வழங்க வேண்டும் என தமிழகத்திற்கு ஒரு வேண்டுக்கோளை நான் விடுக்கிறேன்!

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009

ஒஸ்காருக்காக பரிந்துரைக்கப்பட்டவை!


சர்வதேச திரைப்படங்களுக்காக வழங்கப்படும் ஒஸ்கார் விருது இன்று வழங்கப்படவுள்ளது.

81ஆவது ஒஸ்கார் விருது வழங்கும் வைபவமே இன்று நடைபெறவுள்ளது.

இது லோஸ் ஏங்களிலுள்ள கோடேக் திரையரங்கில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விருது வழங்கும் வைபவம் அமெரிக்க நேரப்படி இன்று மாலை 5 மணி தொடக்கம் நாளை அதிகாலை 1 மணி வரை நடைபெறவுள்ளது.

ஒஸ்கார் விருது வழங்கும் வைபவத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட சர்வதேச திரைப்படங்களும், பரிந்துரைக்கப்பட்டவர்களும்.

Best picture
The Curious Case of Benjamin Button
Frost/Nixon
Milk
The Reader
Slumdog Millionaire

Best director
Danny Boyle - Slumdog Millionaire
Stephen Daldry - The Reader
David Fincher - The Curious Case of Benjamin Button
Ron Howard - Frost/Nixon
Gus Van Sant - Milk

Best actor
Richard Jenkins - The Visitor
Frank Langella - Frost/Nixon
Sean Penn - Milk
Brad Pitt - The Curious Case of Benjamin Button
Mickey Rourke - The Wrestler

Best actress
Anne Hathaway - Rachel Getting Married
Angelina Jolie - Changeling
Melissa Leo - Frozen River
Meryl Streep - Doubt
Kate Winslet - The Reader

Best supporting actress
Amy Adams - Doubt
Penelope Cruz - Vicky Cristina Barcelona
Viola Davis - Doubt
Taraji P Henson - The Curious Case of Benjamin Button
Marisa Tomei - The Wrestler

Best supporting actor
Josh Brolin - Milk
Robert Downey Jr - Tropic Thunder
Philip Seymour Hoffman - Doubt
Heath Ledger - The Dark Knight
Michael Shannon - Revolutionary Road

Best foreign language film
Revanche - Austria
The Class - France
The Baader Meinhof Complex - Germany
Departures - Japan
Waltz With Bashir - Israel

Best animated feature film
Bolt
Kung Fu Panda
Wall-E

Best adapted screenplay
The Curious Case of Benjamin Button
Doubt
Frost/Nixon
The Reader
Slumdog Millionaire

Best original screenplay
Happy-Go-Lucky
Milk
Wall-E
In Bruges
Frozen River

Best original score
The Curious Case of Benjamin Button
Defiance
Milk
Slumdog Millionaire
Wall-E

Best original song
Down To Earth - Wall-E
Jai Ho - Slumdog Millionaire
O Saya - Slumdog Millionaire

Art direction
The Curious Case of Benjamin Button
Changeling
The Dark Knight
The Duchess
Revolutionary Road

Cinematography
The Curious Case of Benjamin Button
Changeling
The Dark Knight
Slumdog Millionaire
The Reader

Costume design
The Curious Case of Benjamin Button
Australia
Milk
The Duchess
Revolutionary Road

Best documentary feature
The Betrayal
Encounters at the End of the World
The Garden
Man on Wire
Trouble The Water

Best documentary short subject
The Conscience of Nhem En
The Final Inch
Smile Pinki
The Witness - From the Balcony of Room 306

Film editing
The Curious Case of Benjamin Button
The Dark Knight
Frost/Nixon
Milk
Slumdog Millionaire

Make-up
The Curious Case of Benjamin Button
The Dark Knight
Hellboy II: The Golden Army

Best live action short film
Auf der Strecke (On The Line)
Manon on the Asphalt
New Boy
The Pig
Spielzeugland (Toyland)

Best animated short film
La Maison en Petits Cubes
Lavatory - Lovestory
Oktapodi
Presto
This Way Up

Sound editing
The Curious Case of Benjamin Button
Iron Man
Wanted
Slumdog Millionaire
Wall-E

Sound mixing
The Curious Case of Benjamin Button
The Dark Knight
Wanted
Slumdog Millionaire
Wall-E

Visual effects
The Curious Case of Benjamin Button
The Dark Knight
Iron Man

ஒஸ்கார் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் வைபவம் இன்று அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.


ஒஸ்கார் சர்வதேச திரைப்படத்திற்கான பட விருது வழங்கும் வைபவம் இன்று அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.

இந்த விருதுகளுக்காக பல படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச ரீதியில் சினிமா படங்களுக்காக வழங்கப்படும் இவ்விருதுக்கு, இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர் A.R. ரஹ்மானும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இவர் ஸ்லம்டாக் மில்லினர் என்ற படத்திற்கு இசையமைத்ததிற்காகவே இந்த விருதுக்கு இசையமைப்பாளர் இசைபுயல் A.R. ரஹ்மான் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

ஸ்லம்டாக் மில்லினர் என்ற படத்திற்கு இசையமைத்ததிற்காக கோல்டன் குளோப் என்ற விருதையும், BAFTA விருதையும் இசைபுயல் A.R. ரஹ்மான் தனதாக்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வியாழன், 19 பிப்ரவரி, 2009

இலங்கை பாதிப்பு, ஆசியாவில் அச்சம்!உலகின் வேலை இழப்பு வீகிதம் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில் இலங்கையிலும் அந்த பாதிப்பு ஏற்பட்டு வருவதாக அறிய முடிகிறது.

ஆசியாவில் இவ்வருடத்தில் மாத்திரம் இதுவரை 7.2 மில்லியனுக்கும் அதிகமானோர் தமது வேலைகளை இழந்துள்ளனர்.

அதில் இலங்கையில் இதுவரை 16 ஆயிரம் பேர் தமது வேலைகளை இழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

உலகின் மிக பிரபல்ய நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்ற நிலையில், இலங்கையில் இதுவரை 50 திற்கும் மேற்பட்ட நிறுவனஙகள் கடந்த 3 மாத காலப்பகுதியில் மூடப்பட்டுள்ளன.

இவ்வாறு இந்த நிலை தொடரும் பட்சத்தில் நாட்டிலுள்ள அனைத்து நிறுவனங்களும் மூடப்படும் எதிர்பார்த்த வண்ணமே இருக்க வேண்டும்!

நாம் செய்யும் தொழிலையும் நாம் இழக்க கூடிய நிலை தற்போது தோன்றியுள்ளது.

தற்போது வேலையிண்மையினால் ஆசியாவில் 22.3 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன்படி, எதிர்காலத்தில் மூன்றாவது தலைமறையினர் நாளொன்றுக்கு ஒரு டொலர் மாத்திரமே உழைக்க கூடிய காலம் நெருங்கி வருவதாக உலக பொருளியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் அமெரிக்க இதுவரை 9 வர்த்தக வங்கிகளை மூடியுள்ளதாகவும், தற்போது அமெரிக்காவில் பாரியளவு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அமெரிக்க நிச்சயம் விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கும் என உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன.

இதற்காக அமெரிக்க ஜனாதிபதி பல நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்.

அதற்காக அமெரிக்க பொருளாதாரத்தை மீட்பதற்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா கைச்சாத்திட்டுள்ளார்.

அமெரிக்காவை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக 787 பில்லியன் டொலர் நிதியுதவி திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கான சட்டத்திலேயே அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே இதற்காக அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை இதற்கு ஒப்புதல் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆயிரத்து 534 பக்கங்கள் கொண்ட இந்த சட்டத்தில் கைச்சாத்திட்ட அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, அடுத்த 3 ஆண்டுகளில் லட்சக் கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திங்கள், 16 பிப்ரவரி, 2009

காதலுக்கான ஒரு வேலி!


காதல் என்பது வானவில்லை போன்றது. தூரத்திலிருந்து பார்க்கும் போது பல வர்ணங்கள், பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியாக தான் இருக்கும்.

இந்த காதலை வேறு ஒரு முறையில் கூறினால் அது மரத்திலிருக்கும் ரோஜாவை போன்றது. அழகு மிகுந்த ஒரு மலர். ஆனால் பறிக்க சென்றால் எவ்வளவு கஷ்டம். முட்களில் எமது கையை காயப்படுத்தி கொண்டு, இரத்தம் வந்த பின்னர் தான் மலர் கையில் கிடைக்கும்.

இரத்தம் வந்தாவது மலர் கைக்கு கிடைக்கும் ஆனால் காதல் அப்படியும் கைக்கு சிலருக்கு கிட்டாது.

காதலில் வெற்றி பெறுபவர்கள் நூற்றுக்கு 30 சதவீதத்திற்கும் குறைந்தவர்களே! தோல்வியே கூடதலான பகுதி. அவர்களுக்காக தான் இந்த பதிவு.

காதலை தவிர இன்னும் எத்தனை அழகுண்டு நம் வாழ்வில்.

காதலில் தோல்வியா? நிச்சயம் எனக்கு தெரியும் அந்த காதலை நீங்கள் மறக்க மாட்டீர்கள் என்று.

அதை மறக்க தேவையில்லை. வேண்டாம் என்று சென்றவர்களுக்கு முன்பு நீங்கள் வாழ்ந்து காட்டினால் போதும் அது தான் வாழ்க்கையின் வெற்றி.

முதலில் தமது வாழ்வில் வெற்றி பெற வேண்டும், பின்னர் தான் மற்றையது.

பிரிந்து சென்ற காதலியோ காதலனையே நினைத்திருந்து உங்கள் வாழ்க்கையை நீங்கள் அழித்து கொள்வதை விட, உங்கள் பெற்றோர் சகோதரர்கள் உங்களை பார்த்து கவலை படுவதை விட வாழ்ந்து காட்டுங்கள் உங்களுக்காக இல்லாவிடினும் உங்கள் சொந்தத்திற்காக!

நினைப்பதெல்லாம் கிடைத்தால் வாழ்க்கைக்கு சுவை ஏது!

சுவை கிடைக்க வேண்டும் என்றால் ஒருவன் நிச்சயம் அவன் விரும்பும் முக்கியமான ஒன்றை இழக்க வேண்டும்.

அப்போது தான் வாழ்க்கையில் ஒரு போராட்டம், ஒரு வெறி, ஒரு தைரியம் உருவாகும்!

அப்படி முக்கியமான ஒன்றை இழக்காதன் வாழ்வின் ஒரு பகுதியில் நிச்சயம் ஏமாற்றத்திற்குள்ளாவான்!

காதலில் தோற்றவர்கள் உயிரை விடுகின்றனர்.

அதனால் காதலில் தோல்வியை கண்டவர்களின் இறுதி முடிவு உயிரை இழப்பதில்லை.

வாழ்வது. கையை வெட்டிக்கொள்வதில்லை. உடம்பில் தைரியத்தை கொண்டு வருவது.
காதலிக்க ஆரம்பிக்கும் போதே!

ஒரு பட்சத்தில் நாம் காதலில் தோற்றால்? என்ற கேள்வியை மனதில் எழுப்பி கொள்ள வேண்டும்!

அப்போது நாம் காதலிப்பவர்களை காதலிப்பது ஒரு அளவிற்கு செல்லும்.

அப்படியில்லாது பல்வேறு கற்பனைகளுடன் காதலிப்பவன் தான் இவ்வாறு உயிரை இழக்கின்றான்!

இந்த பதிவை வாசிப்பவர்கள் காதலிக்கும் போதே நாம் காதலில் தோல்வி பெற்றால் என்ற கேள்வியை எழுப்பிக் கொள்ளவும்.

அடுத்தது, நீங்கள் காதலிப்பவரை விட கூடுதலான அன்பை உங்கள் பெற்றோருக்காவது சகோதரருக்காவது காட்டவும்.

அப்போது காதலில் தோல்வியடையும் போது வலி இருக்காது!

மனம் உறுதியாக இருக்கும்.

காதலை விட உங்கள் தொழிலை நேசியுங்கள்! தற்போது தொழில் புரிவோரை விட மாணவர்களே கூடுதலாக காதலிக்கி;ன்றனர்.

அதனால் கல்வி காதலியுங்கள்! அந்த கல்வி உங்களை காப்பாற்றும்!

இப்படி காதலிக்கும் முன்பே காதலுக்கு ஒரு வேலியை அமைத்து கொள்ளவும்.

இது காதலுக்கான ஒரு வேலி மட்டுமே!

காதலுக்கான ஆயுள் சிறை தண்டனை அல்ல!

மறப்பதில்லை காதல் மனதில் நினைப்பது!

வெள்ளி, 13 பிப்ரவரி, 2009

வெற்றி F.Mஇன் முதலாவது பிறந்தநாள் கொண்டாட்டம்!


தமிழ் வானொலி வரலாற்றில் புதிய தடம் பதித்துள்ள வெற்றி எவ்.எம் தனது முதலாவது பிறந்த தினத்தை 14.02.2009 கொண்டாடுகிறது.

கடந்த ஆண்டு பெப்ரவரி, அதாவது இதுபோன்ற ஒரு நாளில் தமது பயணத்தை ஆரம்பித்த வெற்றி தனது வெற்றி பாதையின் முதலாது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.

லோஷன் அண்ணாவின் தலைமைத்துவத்தில் ஆரம்பிக்கப்பட்ட வெற்றியின் வாழ்க்கை மிக வித்தியாசமான முறையில் சென்று கொண்டிருக்கிறது.

ஆரம்பிக்கப்பட்ட ஒரு வருட காலத்திற்குள்ளேயே பலரின் மனதில் இடம்பிடித்த வெற்றி, இலங்கையின் பல பிரதேசங்களிலும் தனது பயணத்தை தொடர்கிறது.

வெற்றியில் தினமும் காலை 6 மணி தொடக்கம் மீண்டும் அடுத்த நாள் காலை 5.59 வரையிலான நேரம் வரை இளையோர் முதல் முதியோர் வரை கேட்க கூடியவாறு தனது நிகழ்ச்சிகளை செய்து கொண்டிருக்கிறது.

வரலாற்றில் யாரும் பார்க்காத கேட்காத அளவு எதிர்பார்ப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கும் வெற்றியின் வெற்றி பயணத்தை பார்த்து அஞ்சாத வானொலியே இல்லை என கூறலாம்.

இவ்வாறு வெற்றி பாதையில் சென்று கொண்டிருக்கும் வெற்றியின் உறவாக நானும் சேர்ந்ததை இட்டு நான் அடையும் ஆனந்தம் கூற முடியாது.

கடந்த ஆண்டு ஜுன் மாதம் வெற்றியின் உறவாக சேர்ந்த நான், வெற்றியின் வெற்றி பாதைக்கு உதவியாக இருப்பதை நினைத்து ஆனந்தமடைகிறேன் பெருமையடைகிறேன்.

இன்னும் புதிய நிகழ்ச்சிகளை நேயர்களுக்கேற்ப இன்னும் சுவாரசியங்களோடும் சிந்தனை நிகழ்ச்சிகளோடும் வெற்றி உங்களை சந்திக்க காத்திருக்கிறது.

வெற்றியிலுள்ள ஒவ்வொரு அறிவிப்பாளரும், நிகழ்ச்சி தயாரிப்பாளர்களும், செய்திச் சேவையும், தொடர்ந்தும் நல்ல நிகழ்ச்சிகள் மற்றும் தெளிவான செய்திகளை உங்களுக்கு வழங்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

ஆர்ப்பாட்டமில்லாத ஆடம்பரமில்லாத அமைதியான வெற்றியின் பிறந்த தினத்தை முன்னிட்டு வெற்றியின் உறவுகளின் பிறந்த தின வாழ்த்து செய்திகள்.

ஏ.ஆர்.வி.லோஷன் (முகாமையாளர்)
மூச்சிலேயே கலந்திருப்பதனால் ஊரெங்கும் இதுவே ஆச்சு பேச்சு!

என்.இஷாம் (உதவி முகாமையாளர்)
வெற்றி பயணத்தில் வெற்றி வானொலி வெற்றியோடு பயணிக்க என்றும் எம்மோடு இணைந்திருக்கும் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் இந்த முதலாவது ஆண்டு நிறைவில் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

நாங்கள் இன்னும் பல சாதனைகளை புரிய நீங்கள் எமக்கு தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என்றும் வேண்டுகிறேன்.

விமலச்சந்திரன் (அறிவிப்பாளர்)
வெற்றி ஆரம்பித்து ஒரு வருட காலத்திற்குள் பல்லாயிர கணக்கான நேயர்களின் மனதில் இடம்பிடித்துள்ளது. இதற்கு நேயர்களாகி நீங்களே காரணம்! உங்களினாலேயே நாங்கள் இவ்வாறான வெற்றி இலக்கை மிக குறுகிய காலத்தில் அடைய முடிந்துள்ளது. நேயர்கள் அனைவருக்கும் நன்றிகள்!
வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

சந்துரு (அறிவிப்பாளர்)
வளர்ந்துவரும் வெற்றிக்கு வளமான வாழ்த்துக்கள் ஆரோக்கியமான நேயர்களுடன். சிரிப்போம் சிரிச்சிக்கிட்டே இருப்போம்!

பிரதீப் (அறிவிப்பாளர் மற்றும் இசை கட்டுப்பாட்டாளர்)
உலகெங்கும் பரந்திருக்கும் வெற்றியின் அன்பு உள்ளங்களை நன்றியோடு நினைவு கொள்கின்றோம். விடியல் வரட்டும். வானமும் வசப்படட்டும். இசையாலும் இனி ஒரு புது விதி செய்வோம்!

சுபாஷ் (அறிவிப்பாளர்)
வெற்றி ஆரம்பித்த ஒரு வருட காலத்திற்குள் தனக்கென ஒரு இடத்தை வெற்றி பிடித்துள்ளது. இதற்கு வெற்றி குடும்பமும் லோஷன் அண்ணாவின் முகாமைத்துவமுமே காரணம். இவ்வளவு காலமும் எமக்கு ஆதரவு வழங்கிய எமது நேயர்களுக்கு இதன்போது நன்றி தெரிவித்து கொள்கிறேன்!

செந்தூரன் (முன்னாள் அறிவிப்பாளர்)
முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்!

சதீஷன் (அறிவிப்பாளர்)
வாழ்க்கைக்கு வெற்றிதந்து இசையால் புதுவிதி செய்யும் வெற்றி வானொலிக்கு இனிய முதலாவது பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

டிசோகுமார் (உதவி இசை கட்டுப்பாட்டாளர்)
ஏதோ நம்மால் முடிஞ்சது என்பது கோழைத்தனம!;
என்னால் மட்டும் முடியும் என்பது தலைக்கணம்!
நம்மால் முடியும் என்பது தான் வெற்றியின் தளம்!
வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்!

ஆர். ரஜீவ் (அறிவிப்பாளர்)
உங்கள் துணையுடன் எங்கள் வெற்றி பயணம் என்றும் தொடரும். உங்கள் ஆதரவு எங்களுக்கு என்றும் இருக்க வேண்டும். நாங்கள் சாதனைகள் படைக்க நீங்கள் நம்மோடு நாம் உங்களோடு எப்போதும் உங்கள் தோழனாய் நன்றிகளோடு நான்.

பூஜா (அறிவிப்பாளர்)
வெற்றி! வெறும் வார்த்தை அல்ல நம் வாழ்க்கை, நம் வாழ்க்கையின் முதல் ஆண்டு இன்று. வெற்றிக்கு வாழ்த்துக்கள்!

வைதேகி (அறிவிப்பாளர்)
படிப்படியான பல வெற்றிகளைப் பெற்றிட இணைந்திருப்போம் என்றுமே வெற்றியோடு......

வனிதா (அறிவிப்பாளர்)
சோகங்களை சுகமாக்கிட வந்த சொந்தம் வெற்றி எவ்.எம்
அந்த சொந்தத்தில் எனக்குக் கிடைத்த இந்த பந்தம் என் வாழ்வில் நான் என்றுமே மறந்திட முடியாத வசந்தம்!
வாழ்த்துகிறேன் வெற்றிக்கு!

ஜோ. பென்சி (செய்தி ஆசிரியர்)
வெற்றி வெற்றி செயல்களை புரிந்து வென்றிட எனது வாழ்த்துக்கள்!

ரஜனிகாந்த் (உதவி செய்தி ஆசிரியர்)
வெற்றி இதுபோல என்றும் வாழ என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

விஜய்குமார் (செய்தியாளர்)
சூரியனை நோக்கிச் சென்றால் உயிரோடு திரும்ப மாட்டாய்!
வெற்றியை நோக்கி வந்தால் சரித்திரத்தோடு வாழலாம்.
நீங்கள் சரித்திரத்தை நோக்கி வர விரும்புபவர்கள் என எனக்குத் தெரியும்!
இனிமேல் பேச்சுக்கே இடமில்லை...
முதலாம் ஆண்டில் வெற்றியுடன் நான்.

ஜெய்சன் (விரிவாக்கல்பிரிவு)
வெற்றியின் வெற்றி நீங்களே!

தினேஷ் (விரிவாக்கல்பிரிவு)
வான்னலை நாயகனான வெற்றி குழந்தைக்கு வெற்றியின் நாயகனின் பிறந்தநாள் வாழ்த்து!

இவர்களோடு நானும் சேர்ந்து, பல்லாண்டு காலம் வாழ்ந்து நேயர்களுக்கு சந்தேஷத்தையும் வாழ்க்கைக்கு வெற்றியையும், வெற்றி வானொலி அளிக்க வேண்டும் என முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் குழந்தைக்கு வாழ்த்துகிறேன்.

வியாழன், 12 பிப்ரவரி, 2009

மிக பெரிய விமான சாகச நிகழ்வு - இந்தியாவில்


ஆசியாவில் மிக பெரிய விமான சாகச நிகழ்வான ஏயார் இந்தியா 2009யை சர்வதேச பாதுகாப்பு அமைச்சு மற்றும் ஏயார் ஸ்பேஸ் நிறுவனம் ஆகியன ஒழுங்கு செய்துள்ளன.

இந்த நிகழ்வு நேற்று (11.02.2009) பெங்ளுரிலுள்ள இந்திய விமான தரிப்பிடமான ஹேலஹங்கவில் நடைபெறவுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில், 25 நாடுகளைச் சேர்ந்த 592 விமான நிறுவனங்கள் பங்குபற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு பங்குபற்றவுள்ள நிறுவனங்களில் 303 சர்வதேச விமான நிறுவனங்களும், 289 இந்திய விமான நிறுவனங்களும் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் ஆரம்ப நிகழ்வின் போது 66 இந்திய நிறுவனங்கள் பங்குபற்றியுள்ளதாகவும், தற்போது அது 289 நிறுவனங்களாக வளர்ச்சியடைந்துள்ளதாகவும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிகழ்வில் முதன் முறையாக சீனா பங்குபற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இதில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜேர்மனி, இஸ்ரேல் உட்பட இன்னும் பல நாடுகள் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதன், 11 பிப்ரவரி, 2009

கூகுளின் அறிமுகம்


கூகுள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான புதிய தொழிநுட்பங்களை அறிமுகப்படுத்துகிறது.

இவ்வாறு தற்போது கூகுள் தற்போது கூகுள் ஹேத் 5யை வெளியிட்டுள்ளது.

இதில் கடந்த காலங்களில்; வெளியிட்ட கூகுள் ஹேத்தை போன்று இல்லாது முற்றிலும் மாறுப்பட்ட ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த காலங்களில் வெளியிட்ட கூகுள் ஹேதில், நிலப்பரப்பை மாத்திரமே பார்க்க முடியும், அனால் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள கூகுள் ஹேதில் நீரையும் பார்க்க முடியும்.

அதாவது கடற்பரப்பை பார்க்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

கடற்பரப்பில் உள்ளே உள்ள அனைத்து விடயங்களையும் முழுமையாக பார்த்து கொள்ள முடியும்.

இதனை பதிவிறக்கம் செய்ய மற்றும் மேலதி தகவல்களை பெற்றுக் கொள்ள.

http://earth.google.com/ocean/

செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

அமெரிக்கா மீது தாக்குதல், அமெரிக்காவிற்கு பாதிப்பு.


உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக உலகிலுள்ள மிக பெரிய நிறுவனங்கள் ஊழியர்களை பாரியளவில் வெளியேற்றி வருகிறன.

இதன்படி, கடந்த சில மாதங்களில் மாத்திரம் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகான ஊழியர் வெளியேற்றம் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு ஊழியர்களை வெளியேற்றும் நிறுவனங்களில் பிரபல்யமான நிறுவனங்கள் அதிகமாக காணப்படுகின்றன.

இதில் நேற்றைய தினம் பிரபல்ய கார் நிறுவனமான நிஷான் நிறுவனம் 20 ஆயிரம் ஊழியர் வெளியேற்றம் மேற்கொண்டுள்ளது.

இதில் கடந்த மாதத்தில் மாத்திரம் நிஷான் நிறுவனத்தில் கடமையாற்றிய 1200 பேர் வேலை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிறுவனம் கடந்த ஆண்டில் மாத்திரம் 265 பில்லியன் யென்கள் அதாவது 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிஷான் நிறுவனம் மேலும் இது தொடர்பாக தெரிவிக்கையில் இவ்வருடம் மார்ச் மாதம் தொடக்கம் எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் வரை மேலும் 20 ஆயிரம் பேருக்கு உலகளாவிய ரீதியில் வேலையிழப்பு ஏற்படகூடிய சாத்திய கூறுகள் தோன்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக அனைத்து கார் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் டோயோட்டா, ஒண்டா, பீ.எம்.டபிள்யூ உட்பட இன்னும் பல பிரபல்ய கார் நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இது தவிர இலத்திரனியல் கருவிகளை தயாரிக்கும் நிறுவனங்களும் பொருளாதார பாதிப்பில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதில் கடந்த 4ஆம் திகதி உலகின் பிரபல்ய இலத்திரனியல் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமான பனசோனிக் நிறுவனம் 15 ஆயிரம் ஊழியர் வெளியேற்றம் செய்துள்ளது.

இந்த நிறுவனம் உலகளாவிய ரீதியிலுள்ள 27 தொழிற்சாலைகளை மூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பனசோனிக் நிறுவனம் கடந்த ஆண்டில் மாத்திரம் 380 பில்லியன் யென்கள் அதவாது 4.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு இலத்திரனியல் பொருட்களை உற்பத்தி செய்யும் இன்னும் பல நிறுவனங்கள் ஊழியர் வெளியேற்றத்தை மேற்கொண்டுள்ளது.

அவ்வாறு ஊழியர்களை வெளியேற்றிய நிறுவனங்களாவன.
என்.ஈ.சீ நிறுவனம் 20000
சோனி நிறுவனம் 16000
இதாச்சி நிறுவனம் 7000

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்காடியினால் அமெரிக்கா இதுவரை 42 அமெரிக்க டொலர்கள் நட்டமடைந்துள்ளதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணமாக அமைந்த நாடு அமெரிக்காவே என குறிப்பிட்டு கூற முடியும்.

2001ஆம் ஆண்டு தீவிரவாத தாக்குதலுக்கு உள்ள அமெரிக்க, அந்த தாக்குதலில் ஏற்பட்ட நட்டத்தை வெளிபடுத்த விரும்பவில்லை.

அமெரிக்க இவ்வாறு செய்ய காரணம் தன் மீது உலக நாடுகள் வைத்திருக்கும் மரியாதையை குறைத்து கொள்ளவிரும்பாததே என குறிப்பிடலாம்.

அமெரிக்கா அன்று ஏற்பட்ட நட்டத்தை வெளிபடுத்தியிருந்தால், தற்போது ஊழியர் வெளியேற்றம் மேற்கொண்டுவரும் நிறுவனங்கள் அன்றே உஷாராகியிருக்கும்.

இவ்வளவு பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இன்று தேவைப்பட்டிருக்காது.

தன் மதிப்பை வைத்துக் கொள்ள நினைத்த அமெரிக்க, இன்று 9 வர்த்தக வங்கிகளை மூடி, பாரிய வீழ்ச்சியில் உள்ளது.

இன்று எவ்வாறு உலகிற்கு முகம் கொடுக்கும் அமெரிக்கா.

சனி, 7 பிப்ரவரி, 2009

இணையத்தில் டாப் 20


இணையத்தளங்களின் முதனிலை வகிக்கும் இணையத்தளங்களை பற்றிய சிறிய ஒரு கண்ணோட்டம்.

எமக்கு பல சேவைகளை வழங்கி வருகின்ற YAHOO.COM தான் இவ்வருடம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இதை தொடர்ந்து இரண்டாம் இடத்தை GOOGLE.COM பிடித்துள்ளது.

மூன்றாம் இடத்தை YOUTUBE.COM வும் நான்காம் இடத்தை LIVE.COM வும் பெற்றுள்ளது.

மேலும் ஐந்தாம் இடத்தை MSN.COM வும், ஆறாம் இடத்தை MYSPACE.COM பெற்றுள்ளது.

இதன் பின்னர் உள்ள இணைய முகவரிகளின் வரிசை கீழே காணப்படுகின்றன.

7. WWW.WIKIPEDIA.ORG

8. WWW.FACEBOOK.COM

9. WWW.BLOGGER.COM

10. WWW.YAHOO.CO.JP

11. WWW. ORKUT.COM

12. WWW.RAPIDSHARE.COM

13. WWW.BAIDU.COM

14. WWW.MICROSOFT.COM

15. WWW.GOOGLE.CO.IN

16. WWW.GOOGLE.DE

17. WWW.QQ.COM

18. WWW.EBAY.COM

19. WWW.HI5.COM

20. WWW.GOOGLE.FR

இந்த வரிசையில் முதல் 100 இடங்களிலுள்ள தமிழ் இணையத்தளமொன்று இடம்பெறவில்லை என்பது கவலை தரக்கூடிய விடயமாகும்.

வியாழன், 5 பிப்ரவரி, 2009

பிறந்த நாளை கொண்டாடும் எமது நண்பன்!


குழந்தையாக இருக்கும் போதே பலரை சேர்த்த நீ, பெரியவனானால் எத்தனை பேரை எம்முடன் சேர்த்து விடுவாய்!

நினைக்கும் போதே ஆச்சரியம்!

நீ வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும், உறவுகளை, நண்பர்களை இணைத்து கொண்டே இருக்க வேண்டும்!

யாரை பற்றி இப்படி எல்லாம் வர்ணிக்கிறேன்.

எல்லேவரும் அறிந்த FACEBOOK யை பற்றி தான்!

FACEBOOK தனது 5ஆவது பிறந்த நாளை கொண்டாட உள்ளது.

2004ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது உலகின் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இணைய நிறுவனங்களில் முன்னிலை வகிக்கின்ற நிறுவன வரிசையில் உள்ளது.

இன்றைய கால கட்டத்தில் அனைவருக்கும் அத்தியவசியமான ஒன்றாக நண்பர்கள் தேவைப்படுகின்றனர்.

கடனாவது வாங்கிக் கொள்ள முடியும் தானே!

இப்படி இருக்கின்ற கால கட்டத்தில் ஒரு புதிய முயற்சியாக 2004 ஆம் ஆண்டு மார்க் லுச்கேர்பேர்கினால் ஆரம்பிக்கப்பட்டது இந்த நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் உரிமையாளரான 24 வயதுடைய மார்க் லுச்கேர்பேர்க் என்பர் தான்.

அன்றைய கால கட்டத்திலிருந்து இன்று வரை பில்லியன் கணக்கான பாவனையாளர்கள் FACEBOOK அங்கத்துவம் பெற்றுள்ளனர்.

இப்படி வளர்ந்த இந்த நிறுவனம் தற்போது தனது 5ஆவது பிறந்த நாளை கொண்டாடவுள்ளது.

ஒவ்வொருவரும் தனது பிறந்த நாளிற்காக எதாவது பரிசு வழங்குவது வழக்கம்.

FACEBOOK நிறுவனமும் அப்படி தான்.

தனது பாவனையாளர்களுக்கு தனது பிறந்த நாளை முன்னிட்டு பரிசில்களை வழங்க தீர்மானித்துள்ளது.

இதன்படி, 150 மில்லியன் பாவனையாளர்களுக்கு பரிசில்கள் வழங்கப்படும் என அந்த நிறுவன நிர்வாகம் அறிவித்துள்ளது.

5 வருடம் என்ற குறுகிய காலப்பகுதியில் தனது உலக இணையத்தளங்களில்; தற்போது 8ஆவது இடத்தை பிடித்து தனக்கென ஒரு இடத்தில் உள்ள நிறுவனம் இது.

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமாக தனது வடிவமைப்பில் சிறிய சிறிய மாற்றங்களை ஏற்படுத்திய FACEBOOK, இம்முறையும் மாற்றத்தை ஏற்படுத்த எண்ணியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பார்ப்போம் எவ்வாறான மாற்றம் ஏற்படும் என!

நண்பர்களை இணைக்கும் இந்த இணையதளத்தில் இணையும் அனைவருமே நண்பர்கள் தான்! கவலை தேவையில்லை.

நண்பர்களை தேடும் நீங்கள் FACEBOOKல் தேடுங்கள், வேறு இடம் தேவையில்லை.

5 வயதிலேயே இப்படியொரு சாதனையை படைத்த இந்த நிறுவனம் இன்னும் பல்லாயிர கணக்கான ஆண்டு வாழ வேண்டும்!

புதன், 4 பிப்ரவரி, 2009

குகூள் வழங்கிய புதிய வசதி!


தொழிநுட்ப வளர்ச்சி எனும் போது தற்போதைய உலகில் ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு விதமாக தமது வளர்ச்சியை காண்பிக்கின்றனர்.

இப்படி பல நிறுவனங்கள் கிளம்பியுள்ளன.

தற்போது உலகின் மிக பிரபல்யமானதும் இணைய உலாவில் முதன்மையானதுமான குகூள் நிறுவனம் புதிய தொழிநுட்பம் ஒன்றை கண்டு பிடித்து மக்களுக்கு நன்மையளித்துள்ளது.

என்ன தொழிநுட்பத்தை அது வழங்கியுள்ளது என யோசிக்கிறீர்களா?

google earth கடந்த சில வருடங்களுக்கு முன்னரே அந்த நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன்மூலம் உலகில் அனைத்து பகுதிகளையும் நாம் இருந்த இடத்திலிருந்த வண்ணமே பார்த்துக் கொள்ள முடியும்.

இதனால் குகூள் நிறுவனம் பெரும் வெற்றியை பெற்றது.

இதனை முன்னேற்றும் நோக்கிள் அதனை மேலும் முன்னேற்றியுள்ளது.

இவ்வளவு காலமும் நிலப்பரப்பை மாத்திரம் பார்த்து கொண்டிருந்த எமக்கு தற்போது நீர் பரப்பையும் பார்த்து கொள்ள முடியும்.

குகூள் நிறுவனத்தினால் கடலுக்கடியில் ஒரு புதிய கருவி ஒன்று பொருத்தப்பட்டு, அதனை செய்மதியுடன் இணைத்ததன் மூலமே இந்த வசதியை எமக்கு குகூள் வழங்கியுள்ளது.

இவ்வளவு காலமும் நிலத்தை பார்த்த நாம், இனி சற்று வெளியே சென்று கடலையும் பார்ப்போம்.

இது அனைத்தும் இருந்த இடத்திலிருந்தே! கடலுக்கு செல்ல தேவையில்லை.

இதனை வழங்கிய குகூளுக்கு நன்றி!

திங்கள், 2 பிப்ரவரி, 2009

சிரிக்க வைக்கும் எயார் டெல்


இந்திய நிறுவனமான எயார் டெல் கடந்த மாதம் இலங்கையில் தனது பாதத்தை வைத்து தனது பணியை ஆரம்பித்தது.

இலங்கை என்னும் சிறிய தீவில் ஏற்கனவே நான்கு கையடக்க தொலைபேசி நிறுவனங்கள் உள்ள நிலையில் ஐந்தாவதாக எயார் டெல் வந்தமை குறித்து அனைவரும் சந்தோஷப்பட்டனர்.

எயார் டெல் நிறுவனம் இலங்கைக்குவரும் வேளையில் மற்றைய நான்கு நிறுவனங்களும் தலையில் கை வைத்தது அனைவரும் அறிந்த உண்மை.

ரீகோ தனது கட்டணத்தை செக்கன் அடிப்படையில் அறிமுகப்படுத்தியது, அதனை தொடர்ந்து டயலொக் செக்கனுக்கு மாற்றியதுடன், மொபிடல் செக்கன் அடிப்படையிலின்றி கட்டணத்தை குறைத்தது என குறிப்பிடலாம்.

இப்படி எல்லாம் செய்த இலங்கையிலுள்ள கையடக்க தொலைபேசி நிறுவனங்கள், இப்போது தலை நிமிர்ந்து கட்டணத்தை அதிகரித்த வழங்கக் கூடிய சாத்தியக் கூறுகள் தோன்றியுள்ளது.

ஏனெனில், சில பிரதேசங்களில் மாத்திரமே எயார் டெல் தனது வளையமைப்பை வழங்கியுள்ளது.

ஆரம்பிக்கும் போது இது ஓகே. எனினும் வழங்கிய போதே முழு நாட்டிற்கும் வழங்க முடியாதல்லவா!

இருப்பினும் வளையமைப்பு வழங்கப்பட்ட பிரதேசங்களுக்காவது அவர்கள் தமது சேவையை நன்றாக வழங்க வேண்டுமல்லவா!

கொழும்பை எடுத்து கொண்டால், வழங்கியுள்ள வளையமைப்பு மிக மோசமான நிலையிலேயே உள்ளது.

பஸ்ஸில் பயணித்து கொண்டிருக்கும் வேளையில், வீட்டின் உள்ளே சென்றால், கடைகள் உள்ளே சென்றால் மக்கள் கூட்டத்திற்குள் சென்றால் சிக்னல் இல்லாமல் போகின்றது.

இப்படி இருப்பதினால் மற்றைய தொலைபேசி நிறுவனங்களுக்கு இது சாதகமாக அமைந்திருக்கிறது.

இந்தியாவிலுள்ள மிக பெரிய நிறுவனங்களில் ஒன்றான எயார் டெல், ஒரு சிறிய நாட்டில் வந்து இப்படி செய்வது சரியா!

ஆசிய கண்டத்திலேயே தொழிநுட்பத்தில் முன்னிலை வகிப்பதாக கூறப்படுவது இந்தியாவை தான், எனினும் அங்குள்ள நிறுவனமொன்று இப்படி தொழிநுட்பத்தில் பின் தங்கியிருப்பது சரியா?

என்னை பொருத்த வரை தொழிநுட்பத்தில் ஆசியாவில் இலங்கையே முன்னிலை வகிக்கிறது.

மொபிட்டல் அறிமுகப்படுத்திய எச்எஸ்பிஎன் தொழிநுட்பம் மற்றும் டயலொக் வழங்கிய புரோட்பேன்ட் என்பன மிக சிறப்பாகவும் மக்களால் பேசப்பட கூடியதாகவும் இருக்கிறது.
இந்த நிறுவனங்களுக்கு இதனை செய்ய முடியும் என்றால் எயார் டெலுக்கு ஏன் இதனை செய்ய முடியாது.

அறிமுகப்படுத்திய காலப்பகுதியில் எயார் டெல் சிம்மை வாங்க ஆயிரக்கணக்கானோர் நிறுவனத்தின் முன் நின்றதுடன், சிலரிடையே கைகலப்பும் ஏற்பட்டது.

இவ்வாறு எயார் டெல்லை நம்பிய வாடிக்கையாளர்களை கழுத்தை அறுப்பது போலல இருக்கு நிறுவனம் செய்யும் இந்த வேளைகள்.

எயார் டெல் நிறுவனத்திற்கு என்னுடைய செய்தி

வளையமைப்பை விஸ்தரிப்பதை விட வளையமைப்பின் தரத்தை அதிகரிக்கவும்.

ஏனைய போட்டி நிறுவனங்கள் உங்களை பார்த்து சிரிக்கின்றார்கள்.

சிரிக்க வேண்டும் நீங்கள் தான், போட்டி நிறுவனமல்ல.