திங்கள், 24 ஆகஸ்ட், 2009

உச்சக்கட்டம்!


எந்தவொரு முக்கியமான நிகழ்விற்கும் முழுமையாக சமூகமளிக்க முடியாது போவது எனக்கு இயற்கை! இத்தனை வருடமும் இப்படி நடந்து வந்த எனக்கு மீண்டும் அதே நடந்து விட்டது.

நேற்று நடைபெற்ற வலைப்பதிவாளர்களின் சந்திப்பை பற்றி தான் சொல்லுறேன்!

ஞாயிற்றுகிழமை எனக்கு அதிகாலை முதல் பகல் 12 மணி வரையிலான வேலை நேரம். அதனால் எனக்கு அந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை.

ஆனால், நிகழ்வை கொஞ்ச நேரம் இணையத்தினூடாக பார்த்துக் கொண்டிருந்தேன். இணையத்தினூடாக வழங்கி நண்பனுக்கு எனது நன்றிகள்!

எனினும், சந்திப்பு முடியும் முன்பு அங்கு சென்று விட்டேன்! சந்திப்பு முடிவதற்கு சுமார் 15 நிமிடங்களுக்கு முன்பு!

உச்சக்கட்டம் சுப்பர். முழுமையாக கலந்து கொள்ள முடியவில்லை என்பது மனதிற்கு கவலை தான். பரவாயில்லை என்ன செய்ய.

மீண்டும் சந்திப்பு இடம்பெறும் அல்லவா! அன்று நிச்சயமாக முழுமையாக கலந்து கொள்வேன்!

1 கருத்துகள்:

Dr.எம்.கே.முருகானந்தன் சொன்னது…

நானும் அன்றெனப் பார்த்து வெளியூர் செல்ல நேர்ந்ததால் கலந்து கொள்ள முடியவில்லை. கலந்து கொள்ள முடியாத கவலை அரிக்கிறது.