Thursday 22 April 2010

இலங்கைக்கு ஜி.எஸ்.பியை பெற்றுக் கொடுக்க ஹிந்தி திரையுலகம் முயற்சி!

இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் வைபவம் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து பல்வேறு கருத்துக்கள் எழுந்த வண்ணம் உள்ளன.



எதிர்வரும் ஜுன் மாதம் 3ஆம், 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் கொழும்பு – சுகததாசா உள்ளக அரங்கில் இந்த விருது வழங்கும் வைபவம் நடைபெறவுள்ளது.

சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் வைபவத்திற்கான ஊடகவியலாளர் மாநாடு கடந்த 20ஆம் திகதி கொழும்பு சினமன் கிரேன்ட் ஹேட்டலில் ஹிந்த திரைப்பட சுப்பர் ஸ்டார் அமிர்தா பச்சன் தலைமையில் நடைபெற்றது.



சர்வதேச இந்திய திரைப்பட விருது இலங்கையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தின் பின்னர் இலங்கையில் பங்குச் சந்தையில் வளர்ச்சி காணப்பட்டது.

இலங்கையில் இவ்வாறான ஒரு பிரமாண்ட நிகழ்வொன்று நடைபெறுவதை அடுத்து உள்நாட்டிற்கு உல்லாச பிரயாணிகளின் வருகை அதிகரிக்கும் என்பதை கருத்திற் கொண்டே பங்குச் சந்தையின் வளர்ச்சியடைந்துள்ளது.



அத்துடன், ஜுன் மாதம் ஹேட்டல்கள் இப்போதே புக் செய்யப்பட்டுள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இன்று காலை சில இணையதளங்கள் ஒரு அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டிருந்தன.

இலங்கையில் கடந்த 30 வருடங்கள் இடம்பெற்ற யுத்தத்தின் போது மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளதையும், சர்வதேச இந்திய திரைப்பட விருதையும் இணைத்தே அந்த செய்தி வெளியாகியிருந்தது.

இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறப்பட்டு நாட்டிற்கு வழங்கப்பட்டு வந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.



இதனால் இலங்கை ஆடைக் கைத்தொழில் பாரிய வீழ்ச்சியை சந்தித்து வருகின்றமை யாரும் அறிந்ததே!

இதனால் பொருளாதார ரீதியிலும் இலங்கை பாரிய பின்னடைவை எதிர்நோக்கி வருகின்றது.

இவற்றை சரி செய்வதற்காகவே இம்முறை சர்வதேச இந்திய திரைப்பட விருதை இலங்கையில் நடாத்த இலங்கை அரசு முயற்சித்து ஹிந்தி திரையுலகை இலங்கைக்கு அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு இலங்கைக்கு சமூகமளிக்கும் ஹிந்தி திரையுலகத்தினால் இலங்கையின் சுற்றுலா துறை அபிவிருத்தி அடைவதுடன், நாட்டின் பொருளாதாரம் நிலையாக நிலைக்கு கொண்டு வர முடியும் என்பதும் இதன் ஒரு முயற்சி எனவும் கருதலாம்.



எவ்வாறாயினும் இலங்கைக்கு நன்மை கிடைத்தால் அது யாவருக்கும் நலம்!