இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழா ஆரம்பமாக இன்னும் 2 நாட்கள் மாத்திரமே எஞ்சியுள்ளன.
இந்நிலையில் நேற்றைய தினம் சுற்றுலாத்துறை அமைச்சில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது சர்வதேச இந்திய திரைப்பட விழா தொடர்பான பல்வேறு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டன.
இலங்கையில் நடைபெறவுள்ள இவ்விழாவிற்காக அரசாங்கத்தினால் சுமார் 400 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
இதேவேளை இவ்விழாவிற்காக சுகததாஸ உள்ளக அரங்கில் 2700 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் 2200 ஆசனங்கள் ஏற்கனவே வெளிநாட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்தனர்.
எஞ்சியுள்ள 500 ஆசனங்களில் 100 ஆசனங்கள் மாத்திரமே இலங்கையர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஏற்பாட்டாளர்கள் அவற்றை பதிவு செய்பவர்களுக்கு மாத்திரமே வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மிகுதியாக உள்ள 400 ஆசனங்களும் இலங்கையிலுள்ள விசேட அதிதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.
அதேவேளை இலங்கையர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 100 ஆசனங்களையும் வெளிநாட்டவர்கள் பதிவு செய்யும் பட்சத்தில் இலங்கையர்களுக்கு விழாவை கண்டுகளிக்க முடியாத நிலை ஏற்படும்.
சர்வதேச இந்திய திரைப்பட விழாவானது இலங்கையர்களை மையமாகக் கொண்டு நடாத்தப்படவில்லை என இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் மறைமுகமாக அறிவித்தனர்.
அது எப்படி என்றால் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் தனிநபர் வருமானத்தை பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. காரணம் தமிழர்களாக பிறந்த எமக்கு அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் கஷ்டங்களை உணரகூடிய வகையில் உள்ளமை யாரும் அறிந்ததே.
இந்நிலையில் இந்த விழாவிற்காக டிக்கட்களின் விலைகளை கேட்டால் தலை சுற்றி கீழே வீழ வேண்டிய விலை தான்.
- பிரதான விருதின் பிலட்டினம் பெக்கேஜ் 10000 அமெரிக்க டொலர். (இலங்கை ரூபா மதிப்பின் படி சுமார் 11 லட்சம்)
- பிரதான விருதின் கோல்ட் பெக்கேஜ் 3000 அமெரிக்க டொலர். (இலங்கை ரூபா மதிப்பின் படி சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம்)
- பிரதான விருதின் சில்வர் பெக்கேஜ் 2500 அமெரிக்க டொலர். (இலங்கை ரூபா மதிப்பின் படி சுமார் 3 லட்சத்து)
எப்படி விலை.........
அத்துடன், சர்வதேச இந்திய திரைப்பட விழாவை முன்னிட்டு எதிர்வரும் 4ஆம் திகதி கிரிக்கெட் போட்டியொன்று எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் மூன்று அணிகள் பங்குபற்றவுள்ளன.
இதில் குமார் சங்கக்கார தலைமையிலான இலங்கை அணியும், பொலிவூட் நட்சத்திர நடிகர்களான சல்மன் கான், கிரித்திக் ரோஷன் ஆகியோர் தலைமையிலான இரு அணிகளும் இடம்பெறுகின்றன.
இந்த போட்டிக்கான டிக்கெட்கள் தற்போது விற்பனையில் உள்ளன.
இதற்கான டிக்கெட்டுகளை, இலங்கை கிரிக்கெட்டிலும், சுற்றுலாத்துறை விரிவாக்கற் பிரிவிலும், கொள்ளுப்பிட்டி இலக்கம் 113, 5வது ஒழுங்கையிலுள்ள டிக்கட் ஷொப்பிலும் பெற்றுக் கொள்ளலாம்.
டிக்கெட்டுகளுக்கான விலைகள் 1000/-, 3000/-, 4000/-, 5000/- மற்றும் 7500/- ஆகும்.
இது மாத்திரமே இலங்கையர்களுக்காக....... என கூறமுடியும்...
அத்துடன் சர்வதேச இந்திய திரைப்பட விழாவிற்காக இதுவரை 400 மில்லியன் ரூபாவினை அரசாங்கம் செலவிட்டுள்ளதாக பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.
இந்த தொகையினை 2012ஆம் ஆண்டிற்குள் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
எனினும் இவ்வாறு அரசாங்கத்தால் செலவிடப்படும் தொகை மீள சர்வதேச இந்திய திரைப்பட குழுவினால் வழங்கப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.
செலவிடப்படும் தொகைக்கு ஆப்பு தான்.........
இந்த சுமையும் எமது தலையில்..................... மேலும் தகவல்கள் எதிர்வரும் பதிவுகளில்...........
0 comments:
Post a Comment