Thursday, 17 June 2010

தமிழீழ துரோகி நான் - சீமானை சந்திக்க வேண்டும்!

"இலங்கை சிங்கப்பூராக மாறி வருகிறது" என எனது முன்னைய பதிவில் தெரிவித்த கருத்திற்கு நான் தமிழீழ துரோகி என கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.



தமிழீழ துரோகி என வெளியிடப்பட்ட கருத்து இங்கே!


ஏன்? இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் கொழும்பும் முக்கிய இடத்தை வகிக்கின்றது அல்லவா?

கொழும்பு சிங்கப்பூராக மாறினால் தமிழர்களின் செயற்பாட்டிற்கு பெருமளவு உதவியாக இருக்கும் என்ற செய்தி என் மனதில் சந்தோஷத்தை ஏற்படுத்தியது.

அதற்காகவே நான் அப்படியாக கருத்து முன்வைத்தேன். அந்த வசனத்திற்கு நான் மன்னிப்பு கோர போவதும் இல்லை. காரணம் அந்த வசனம் தமிழர்களின் நன்மையை கருதியே!

மேலும் இலங்கை பிரச்சினை தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டு வரும் இயக்குநர் சீமானை நான் சந்திக்க வேண்டும்.



அவரை சந்தித்து இலங்கையின் தற்போதைய உண்மை நிலையை கூற வேண்டும்.

காரணம் இலங்கை பிரச்சினை தொடர்பாக பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுவரும் தமிழ் நாடு இலங்கையில் எஞ்சியுள்ள சுமார் 30 சதவீத தமிழர்களை பற்றி சிந்திக்கவில்லை என இலங்கை வாழ் தமிழர் பலரின் மனதில் தோன்றுகிறது.

தமிழ் நாட்டில் அழுத்தங்கள் தொடர்ந்தும் இலங்கைக்கு விடுக்கப்படும் பட்சத்தில் இலங்கை மீதான சர்வதேசத்தின் கவனம் அதிகரிக்கும்.

அதனால் சர்வதேசத்தின் உதவிகள் முற்றாக குறைவடைவதுடன் மோதல்களினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான உதவிகளை வழங்குவதிலும் அரசாங்கத்திற்கு சிரமம் ஏற்படும்.



இலங்கை தமிழர்களின் எதிர்கால நலனை சிந்தித்து தயவு செய்து ஆர்ப்பாட்டங்களை கைவிட்டு, தமிழர்களுக்கான உதவிகளை வழங்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் இலங்கை தமிழர்களுக்கு சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து தமிழ் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் தமிழர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது.

ஆனால் அதிலும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளதை ஆர்ப்பாட்டக்காரர்கள் நினைத்து பார்க்கின்றார்களா? என்ற கேள்வி என் மனதில் தோன்றி விட்டதனாலேயே இவ்வாறு தெரிவித்தேன்.

அத்துடன் இலங்கையிலுள்ள இந்திய முதலீட்டாளர்களின் பொருட்களை தமிழ் நாட்டில் நுகர வேண்டாம் என தமிழக அரசியல்வாதிகள் தமிழக மக்களிடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.



அவர்களின் அவ்வாறான நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட போது இலங்கையில் எஞ்சியுள்ள மிகுதி தமிழர்கள் தான் என்ற நினைப்பு அவர்களின் உள்ளத்தில் உள்ளதா?


இவர்களின் எதிர்காலம் குறித்தும் தயவு செய்து தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் மற்றும் திரையுலகத்தினர் நினைத்து பார்க்க வேண்டும்.

மோதல்களினால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மையான மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டு அவர்களுக்கென ஒரு எதிர்காலத்தை அரசாங்கம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

அத்துடன் இந்தியாவினாலும் இலங்கைக்கு பல்வேறு நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருவதுடன் வீடுகளை அமைத்து கொடுப்பதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.

இப்படியான போராட்டங்களை நீங்கள் நடத்தி வருகின்றீர்கள். சரி வரவேற்கிறேன்.

ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இலங்கை வாழ் தமிழர்களுக்கு அரசாங்கம் வழங்கிவரும் சலுகைகளை நிறுத்தி இந்தியாவிடமே பெற்றுக் கொள்ளுங்கள் என கூறினால் எங்கள் நிலை என்ன?

அதற்கு பிறகு தமிழ் நாட்டில் எமக்கு தங்க இடம் கிடைக்குமா? தமிழ் நாடு எமக்கு உதவிகளை வழங்குமா? இப்படியான கேள்வி எழுகிறது.

தயவு செய்து இவ்வாறான எதிர்ப்புக்களை தவிர்த்து இந்திய மத்திய அரசு மேற்கொண்டு வரும் உதவிகளுக்கு ஒத்துழைப்பை வழங்கி எமது எதிர்காலத்தை வளமாக்க உதவி செய்யுங்கள் என்பதே எனது தனிப்பட்ட கோரிக்கை.

2 comments:

EKSAAR said...

தைரியமான பதிவு.. ஒன்று ரெண்டுபேராவது முதுகெலும்போட இருக்காங்க என்று நினைக்க குல்ள சந்தோசம்.

அது என்ன 30% கணக்கு? விளக்குவீங்களா?

Anonymous said...

-இலங்கை பிரச்சினை தொடர்பாக பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுவரும் தமிழ் நாடு இலங்கையில் எஞ்சியுள்ள சுமார் 30 சதவீத தமிழர்களை பற்றி சிந்திக்கவில்லை என இலங்கை வாழ் தமிழர் பலரின் மனதில் தோன்றுகிறது.-

சீமானும் அவரை சேர்ந்தவர்களும் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களை பற்றி சிறதும் அக்கறைபடவில்லை,அக்கறையும் கிடையாது. வெளிநாடுகளில் வசதியாக வாழும் தமிழர்களை சந்தோசப்படுத்தி தாங்களும் பயன் பெறலாம் என்பதே அவர்கள் நோக்கம். மனித நேயரான நடிகர் விவேக் ஒப்ராய் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவினார். தென்னிந்திய நடிகர்கள் இலங்கை தமிழர்களுக்கு உதவ கூடாது என்பதில் எவ்வளவு கவனமாக சீமான் குழுகள் இருந்தன என்பதை பார்த்திருப்பீர்கள்.
அருண் உங்களுக்கு எனது வாழ்த்துகள்!