செவ்வாய், 8 ஜூன், 2010

ஐபா வழங்கிய அனுபவங்கள்!

உலக திரைப்படங்களில் 2ஆவது இடத்திலுள்ள பாலிவுட் திரைப்படத்தின் விருது வழங்கும் விழாவான ஐபா இலங்கையில் மிக சிறப்பாக நடைபெற்று முடிவடைந்ததையிட்டு இலங்கையர்களாகிய நாம் பெருமைப்பட வேண்டும்.


ஐபாவில் அருண்

வெளியில் எவ்வித பிரச்சினைகளும் இல்லாமல் முடிவடைந்த ஐபா உள்ளே பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தமை யாரும் அறிந்த மறைக்க முடியாத உண்மை.

இப்படி யாரும் அறிந்த மறைக்க முடியாத உண்மைகளிலும் மறைந்து கிடக்கும் பல்வேறு உண்மைகளை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள் (ஐபா செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை தவிர)

இலங்கையில் நடைபெற்ற 11ஆவது ஐபா விருது வழங்கும் வைபவத்;தின் பெரும்பாலான பெறுப்புக்களை அரசாங்கம் ஏற்று நடாத்தினாலும் கூட இறுதி நிகழ்ச்சிகளின் ஏற்பாடுகளை ஐபா ஏற்பாட்டு குழுவினரே எடுத்து நடத்தினர்.


ஐபாவில் அருண்

இப்படி இருக்கின்ற நிலையில் ஜுன் மாதம் 3ஆம் திகதி முதலாவதாக ஐபாவின் உத்தியோகப்பூர்வ ஊடகவியலாளர் மாநாடு கொழும்பு சினமன் கிரேன்ட் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

அன்று முதலே ஊடகவியலாளராகிய எமக்கு பிரச்சினைகள் ஆரம்பமாயிற்று.

அன்றைய தினம் எமது கமராக்களை பொருத்துவதற்கு கூட இடம் இருக்கவில்லை. அத்துடன், வீடியோவை எடுத்துக்கொள்ள முடியாத நிலை.

பல்வேறு கஷ்டங்களின் மத்தியிலும் நாங்கள் எமது கடமைகளை சரிவர செய்து முடித்துவிட்டு அலுவலகத்திற்கு திரும்பினோம்.


நடிகர் நீல் நித்தின் முக்கேஷ்

மீண்டும் அலுவலகத்திலிருந்து சரியாக 4 மணியளவில் மீண்டும் கொழும்பின் மிக பிரபல்யமான நட்சத்திர விடுதியொன்றிற்கு வருமாறு ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அந்த அழைப்பை அடுத்து நாங்கள் அங்கு சென்றோம். அங்கு சென்றதும் தான் தெரிகிறது. பாதுகாப்பு காரணங்கள் கருதி சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டே எம்மை அழைத்தார்கள் என.

சோதனை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் பஸ் ஒன்றில் ஏற்றி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்திற்கு எம்மை பொலிஸ் பாதுகாப்பின் மத்தியில் அழைத்து சென்றார்கள்.

அங்கு மீண்டும் எம்மை சோதனை செய்ய வேண்டும் என பொலிஸார் அழுத்தம் கொடுக்க பொலிஸாருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் அதிகரித்து பின்னர் சோதனைகள் இன்றி உள்ளே செல்ல அனுமதி வழங்கினர்.

அப்படா பிரச்சினைகள் அனைத்து முடிவிற்கு வந்து விட்டது நிம்மதியாக உள்ளே சென்று நிகழ்ச்சிகளை பார்க்கலாம் என எண்ணத்துடன் உள்ளே சென்றால்............

ஊடகவியலாளர்களுக்காக ஒரு பகுதி.........

ஒரு வசதிகளும் இன்றி வெளியில்...........


கணினிவை வைக்க இடமில்லாத ஊடகவியலாளரொருவர் தரையில் கணினிவை வைத்து வேலை செய்கிறார்.

உட்கார்வதற்கு ஓர் இடமில்லை.... குடிப்பதற்கு தண்ணீர் இல்லை...... உண்ணுவதற்கு உணவில்லை......

இப்படியான பல இன்னல்களுக்கு மத்தியில் சுமார் 6 மணிநேரம்........ அன்றைய தினத்தை யாராலும் மறக்க முடியாது.......

அதனைத் தொடர்ந்து இரவு உணவு 11 மணிக்கு வழங்கப்பட்டு வீடு செல்லும் போது சுமார் அதிகாலை ஒரு மணியிருக்கும் மீண்டும் அடுத்த நாள்.......... 7 மணிக்கு அலுவலகத்தில்.......

அன்றைய தினம் கிரிக்கெட் சுற்றுப் போட்டி.......

அதற்கும் அப்படிதான் இருக்கும் என்ற அச்சத்தில் சென்ற எமக்கு ஒரு மாற்றம்.

மைதானத்திற்கு உள்ளேயே செல்ல அனுமதி வழங்கப்பட்டதுடன், போட்டிகளையும் மைதானத்தில் இருந்தவாறே கண்டு மகிழ முடிந்தது.

மனதிற்கு மகிழ்ச்சி...... முதல் நாள் சந்தித்த கஷ்டங்களுக்கு ஒரு பரிசு தான் ஐபா கிரிக்கெட் போட்டி.....


மைதானத்தில் சூரியன் எவ்.எம் செய்தி ஆசிரியர் கிருஸ்ணாவுடன் நடிகர் விவேக் ஒப்ரோய்!

உண்ணுவதற்கு உணவு எமக்கே, ஒரு அறை, என அனைத்தையும் வழங்கினர் ஐபா ஏற்பாட்டு குழுவினர்

ஆனால் அன்றைய தினமும் குடிநீரை மறந்து விட்டனர் ஐபா குழுவினர்.......

3ஆவது நாள் காலை முதல் வேலை ஆரம்பம்...............

காலை 9 மணி முதல் கொழும்பு சினமன் கிரேன்ட் நட்சத்திர விடுதியில் ஹிந்தி பட வெளியீடுகள் புத்தக வெளியீடு என பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து மதியம் உணவும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்த ஐபா விருது வழங்கும் வைபவம்.......

மீண்டும் அதே நட்சத்திர விடுதி, ஊடகவியலாளர்கள் சோதனை, மீண்டும் பஸ், பொலிஸ் பாதுகாப்பு, சுகததாஸ உள்ளகர அரங்கிற்கு பாதுகாப்பின் மத்தியில் அழைத்து செல்லப்பட்ட எமக்கு தனியே ஓர் இடம்.........

முக்கிய பிரமுகர்கள் வருகை தரும் வாயில்....... அருகில் எமக்கான இடம்..

இன்றைய தினமும் கடந்த 3 நாட்களை விட ஓர் மாறுதல் அதுதான் குடிநீர் போத்தல்கள் வழங்கப்பட்டன.


சுகததாஸ உள்ளக அரங்கில் நிகழ்ச்சிகளை பார்வையிடும் அருண்

ஒரு திருப்தி......... வருகை தந்த அனைத்து முக்கிய பிரமுகர்களிடமும் பேட்டிகளை பதிவு செய்து 9 மணிக்கு நிகழ்ச்சிகளை பார்க்க சென்று விட்டோம்.

நான் எனது இந்த பதிவில் சில விடயங்களை வெளியிடவில்லை. பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் பதிவானது தான் எம்மால் வெளியிடப்பட்ட ஐபா செய்திகள்.........

ஒரு ஊடக நிறுவனத்திற்கு போட்டியாக இன்னுமொரு ஊடக நிறுவனம்.......

தனக்கு மாத்திரமே அவரது பேட்டி கிடைத்தால் போதும் என்ற எண்ணத்துடன் செயற்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களும் பாராட்டத்தக்கவர்கள்.

தான் கடமையாற்றும் நிறுவனத்திற்கான அயராது உழைத்த ஊடகவியலாளர்கள் நினைக்கும் போது மகிழ்ச்சி...... புரிந்துக் கொள்பவர்கள் புரிந்துக் கொண்டால் சரி....................ஐபா நிகழ்வுகளின் போது இலங்கையிலுள்ள தமிழ் ஊடகங்களில் கடமையாற்றும் பலர் ஒன்று சேர்ந்திருந்தோம்.

சூரியன் கிருஸ்ணா, சக்தி ரஞ்ஜனி, வெற்றி அருண்

தினக்குரல் நிமல்ராஜ் மற்றும் வீரகேசரி கனகராஜா

1 கருத்துகள்:

Amirdavarshiny சொன்னது…

IIFA நிகழ்வுகளில் நம் ஊடகவியாளர்கள்
பல சிரமங்களின் மத்தியிலும் மக்களுக்கு செய்தியை வழங்கியமை சிறப்பான ஒரு விடயம்
வெளியில் தெரியாத பல உண்மைகளை எடுத்துக்காட்டிய உங்களுக்ம் இன் நிகழ்வில் பல இன்னல்களுக்கு
மத்தியில் தங்களின் கடமையை செய்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்