Wednesday, 2 June 2010

அருணை சந்தித்தார் விவேக் ஒப்ராய்!

சர்வதேச இந்திய திரைப்பட விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ள நிலையில் இன்றைய தினம் அனைத்து ஹிந்தி திரையுலகத்தினரும் இலங்கைக்கு வந்துள்ளனர்.


விவேக் ஒப்ராயுடன் அருண்

சர்வதேச இந்திய திரைப்பட விழாவையடுத்து கொழும்பு தொடர்ச்சியாக ஊடகவியலாளர் சந்திப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்றைய தினம் கொழும்பின் பிரபல விடுதியொன்றில் அனைத்து நடிகர்களும் தங்கியுள்ளனர்.

இப்படி இருக்கையில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பல ஹிந்தி திரையுலகத்தினர் கலந்து கொண்டனர்.


விவேக் ஒப்ராய்

அதன்படி, விவேக் ஒப்ராய், ஜெக்லின் பெனார்ண்டே உள்ளிட்ட மேலும் பல திரையுலகத்தினர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விவேக் ஒப்ராய் தென்னிந்திய திரையுலகத்தினர் இலங்கைக்கு நிச்சயம் வந்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

அவர்கள் இலங்கைக்கு வருகை தராதது மனதிற்கு வேதனை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தனது பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச இந்திய திரைப்பட விழாவிற்கு இன்னும் ஒரு நாள் மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி என அரசாங்கம் அறிவித்துள்ளது.




இதனை முன்னிட்டு கொழும்பில் தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் திரையுலகத்தினர் தங்கியுள்ள விடுதிக்கு அருகில் இன்று காலை முதல் வாகன நெரிசல் காணப்படுவதை எம்மால் அவதானிக்க முடிந்தது.




அதுமாத்திரமன்றி இந்நிகழ்விற்காக கொழும்பு தற்போது சிங்கப்பூராக மாறிவருகின்றமை மனதிற்கு சந்தேசத்தை தருகின்றது.

அப்படி என்றால் நாளை சர்வதேச இந்திய திரைப்பட விழா...............



6 comments:

SShathiesh-சதீஷ். said...

விவேக் ஒபெராயை சந்தித்த அருண் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். அண்ணா சிங்கம் பார்க்கும் ஐடியா இல்லையா?

Unknown said...

அருண் நீங்க இப்போ பெரிய நட்சத்திரம் தான் வாழ்த்துகள்!

ARV Loshan said...

ம்ம்.. அந்தப் பயல் விவேக் என்னைக் கூடக் கூப்பிட்டார் சந்திக்கனும்னு..
நான் தான் சொன்னேன் நேரம் இல்லைன்னு..
தென் இந்திய நட்சத்திரங்களே வராத நேரம் நான் போறது அவ்வளவு நல்லா இருக்காது இல்லையா?


//இந்நிகழ்விற்காக கொழும்பு தற்போது சிங்கப்பூராக மாறிவருகின்றமை மனதிற்கு சந்தேசத்தை தருகின்றது.
//
என்னாது சிங்கப்பூரா?
எல்லா வீதியையும் அங்கே இங்கே திருப்பி வெறுப்பேத்துறாங்க..

டிக்கெட் விலைகளைப் பற்றி நடுத்தர வர்க்கத்துக்காரர் மட்டுமல்ல பணக்காரர் கூட நினைச்சுப் பார்க்க முடியாது.

shaki said...

really? nice........

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இனப்படுகொலை நடந்து, ஆறாத ரணத்திலும் வேல் பாய்ச்சுவதாக இருக்கிறது உங்கள் பதிவு,படங்கள்!

தமிழகளை படுகொலை செய்ததை அங்கீகரி்க்கிறது உங்களுடைய செயல்.

உங்கள் பதிவு சொல்லும் செய்தி என்ன தெரியுமா?

இலங்கை அமைதிப்பூங்கா, இங்கு யாரும் வரலாம், யாரும் உரிமையோடு வாழலாம்!?

இது கடைந்தெடுத்த பொய்! நீங்கள் உருவாக்கும் பிம்பம்!

அது எப்படி இரத்த வாடையுடன் உங்களால் நாடகத்தையும், குத்தாட்டதையும் பார்க்க முடிகிறது?

இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

சரியான புரிதல் இருந்தால் பதிவை நீக்குங்கள்!

Anonymous said...

//அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

இனப்படுகொலை நடந்து, ஆறாத ரணத்திலும் வேல் பாய்ச்சுவதாக இருக்கிறது உங்கள் பதிவு,படங்கள்!

தமிழகளை படுகொலை செய்ததை அங்கீகரி்க்கிறது உங்களுடைய செயல்.

உங்கள் பதிவு சொல்லும் செய்தி என்ன தெரியுமா?

இலங்கை அமைதிப்பூங்கா, இங்கு யாரும் வரலாம், யாரும் உரிமையோடு வாழலாம்!?

இது கடைந்தெடுத்த பொய்! நீங்கள் உருவாக்கும் பிம்பம்!

அது எப்படி இரத்த வாடையுடன் உங்களால் நாடகத்தையும், குத்தாட்டதையும் பார்க்க முடிகிறது?

இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

சரியான புரிதல் இருந்தால் பதிவை நீக்குங்கள்!//

வழி மொழிகிறேன்.

SHAME ON YOU ARUN