வியாழன், 24 செப்டம்பர், 2009

ஆதவன் + வேட்டைக்காரன்

தமிழ் சினிமா ரசிகர்களிடையில் மிக எதிர்பார்ப்புடன் இருக்கும் இரு படங்கள் வெகுவிரைவில் வெளியாகவுள்ளன.சினிமா வாழ்க்கையின் பிரவேசத்திலிருந்து குழந்தைகள் முதல் முதியோர் வரை மனதில் இடம் பிடித்து தற்போது அவர்களினாலேயே விமர்சிக்க வைத்துள்ள நடிகர் விஜயின் வேட்டைக்காரன்.

இளைஞர்கள் ரசிக்கின்ற, இளம் பெண்கள் காதலிக்கின்ற தற்போதைய சினிமா ரசிகர்களின் நாயகன் சூர்யாவின் ஆதவன்.

தொடர் வெற்றிகளை தந்து முன்னணியிலுள்ள சூர்யா மற்றும் தற்போது சற்று சினிமாவில் வீழ்ந்துள்ள விஜய் ஆகியோரின் இரு படங்கள் வெளியாகவுள்ளன.

இதில் விசேடம் என்னவென்றால் உண்மையான இரு நண்பர்களின் போட்டிக்காலம் இது!

எனது இன்றைய பதிவு சிறிய ஆய்வு தான்! இது நடக்கலாம், நடக்காமலும் போகலாம்! சும்மா.

அரசியல் வாழ்க்கையில் பிரவேசிக்க எண்ணியுள்ள விஜயை அவருடைய பல ரசிகர்கள் கைவிட்டுள்ளனர். சிலர் அவரை தனது மனதிலிருந்தே நீக்கிவிட்டனர்.விஜயின் வெற்றி படங்களுக்கு பல காரணங்கள் இருக்கின்ற போதிலும், முக்கியமான ஒரு காரணம் உள்ளது. அது தான் விஜய் அனைவரது உள்ளங்களிலும் இடம் பிடித்திருந்தமை.

ஆனால் இன்று அவர் பல ரசிகர்களின் மனதில் பிடித்திருந்த இடத்தை இழந்துள்ளார். காரணம் அவரது அரசியல் பிரவேசம்!

அதனால் வெளிவரவுள்ள வேட்டைக்காரன் எவ்வளவு சிறந்த படமாக இருக்கின்ற போதிலும், அது வெற்றி பெறுமா? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்த வண்ணமே உள்ளது.

விஜயின் இறுதியாக வெளிவந்த படமான வில்லு வரையுள்ள அனைத்து படங்கள் வெளிவரும் போதும் ஓர் எதிர்பார்ப்பு மனதில் இருந்த வண்ணமே இருக்கும். ஆனால் அது இப்போ இல்லை.

ஆனால், சூர்யாவின் ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான கதைகளில் வெளிவந்த வண்ணம் உள்ளன.இவரின் ஒரே நோக்கம், சினிமாவில் தான் கைப்பற்றியுள்ள நிலையை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே!

அதனால் வெளிவரவுள்ள ஆதவன் அனைவரது உள்ளங்களிலும் ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளதாக சினி ரசிகர்களின் தெரிவிக்கின்றனர்.

இதனால் இம்முறை வெளிவரும் படங்களில் எந்த படம் வெற்றி பெறும் என்பது அனைவரது மனதிலும் உள்ள ஒரு கேள்வி!

இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்! நிச்சயம் காலம் பதில் கூறும்!

3 கருத்துகள்:

SShathiesh சொன்னது…

ஆனால் இன்று அவர் பல ரசிகர்களின் மனதில் பிடித்திருந்த இடத்தை இழந்துள்ளார். காரணம் அவரது அரசியல் பிரவேசம்!

=>>
விஜய் எப்போது இப்போது அரசியல் இல்லை என்றாரோ அப்போதே விஜய் ரசிகர்கள் மீண்டும் வந்துவிட்டனர். பெண்கள் குழந்தைகளை கவர்ந்து விட்டால் போதும் அந்த பலம் இப்போதும் விஜய்க்கு இருக்கிறது...

விஜயின் இறுதியாக வெளிவந்த படமான வில்லு வரையுள்ள அனைத்து படங்கள் வெளிவரும் போதும் ஓர் எதிர்பார்ப்பு மனதில் இருந்த வண்ணமே இருக்கும். ஆனால் அது இப்போ இல்லை.
=>>
இதியாயும் இப்போது ஏற்றுக்கொள்ள முடியாது. வேட்டைக்காரன் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது. அதே நேரம் பாடல்கள் பட்டையை கிளப்ப ஆரம்பித்திருக்கின்றன. இன்னொரு கில்லியாக வரும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகின்றது, அதேநேரம் இம்முறை விஜய் கொஞ்சம் கதையையும் நம்பி இருப்பதாக சொல்லப்பட்கின்றது. எனவே எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கின்றது.

இவரின் ஒரே நோக்கம், சினிமாவில் தான் கைப்பற்றியுள்ள நிலையை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே!
=>>>
வில்லன் படம் வெளிவந்த காலம் தொடர்ந்து அஜித் காலமாக இருந்தது. அதன் பின் அஜித் யாரென கேட்கும் நிலைக்கு போனார். தில் தூள் ஏற்றிவிட சாமியில் சுபெர்ச்டார் அளவு போனார் விக்ரம் திருமலையோடு விஜய் காலம் ஆரம்பித்தது இப்போது ஒரு சில வருடங்கள் சூர்யாவிற்கு ஆனால் நிலையாக யாரும் நிக்கவில்லை. எனவே என்னை பொறுத்தவரை சூர்யாவிற்கு இப்போது நடப்பது ஒரு சுக்கிரதிசை. புதிய இயக்குனர்களின் படங்களிலும் சூர்யா தன்னை நிலை நிறுத்தவேண்டும் அப்போதுதான் அவரின் மாஸ் புரியும்.

விஜய் ரசிகனாக இருந்து சூர்யா ரசிகனாகி இருக்கின்றீர்கள் என்பது பதிவில் தெரிகிறது. வாழ்த்துக்கள் ஆதவனும் வெல்லட்டும் வேட்டைக்கரனும் வெல்லட்டும் வாழட்டும் தமிழ் சினிமா இதுதான் தமிழ் சினிமா ரசிகனின் அஆசை.

Sinthu சொன்னது…

ஆதவன் தான் வெற்றியடையனும்..

கார்க்கி சொன்னது…

நீங்க எந்த ஊரில் பாஸ் இருக்கிங்க? வேட்டைக்காரனின் ஆடியோ வெளியீட்டுக்கே சென்னையும், சில நகரங்களிலும் கொண்டாட்டாம் தூள் கிளப்பி இருக்கு. வில்லுவை விட இதுக்கு எதிர்பார்ப்பும் அதிகம். அரசியலுக்கு விஜய் வருவது இப்போது நடக்காது என்பது இங்கே உள்ள ரசிகர்கள் அறிவார்.

மேலும் சூர்யாவின் அயன் மட்டுமே பெரிய வெற்றி. வாரணம் ஆயிரம் தோல்வியே. வேலு சுமாரான ஹிட். இதை வைத்து சூர்யா பெரியாள் ஆகிவிட்டதாக சொல்லல்லாமா? அவருக்கு ஆதரவு பெருகி வருவது உண்மையே. ஆனால் விஜயையோ, ஏன் அஜித்தையோ கூட அவர் இன்னும் தொடவில்லை. சூர்யா அஜித், விஜயை விட சிறந்த நடிகர். மாஸ் இன்னும் வரவில்லை.