வியாழன், 1 அக்டோபர், 2009

நான் என்ன கடவுளா!

கடந்த ஜுன் மாதம் 16ஆம் திகதி நான், எனது இணைத்தளத்தில் இட்ட பதிவைப் பார்த்து அனைவரும் சிரித்தார்கள்.

நான் கூறியவாறு கூறிய திகதியில் சம்பவங்கள் நடக்க நான் என்ன கடவுளா?எனினும் நான் அன்று கூறியது இன்று நடந்துள்ளது. என்னவென்று பார்க்கிறீர்களா? அது தான் சுனாமி.

சுமத்திரா தீவில் நேற்றைய தினம் இடம்பெற்ற சுனாமியினால் சுமார் 770ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தும், பலர் காணாமல் போயும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், கடந்த கிழமை பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு. சுமார் 40 வருடங்களின் பின்னர் ஏற்பட்டதாம்! அதில் 150ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஒரு வருடத்தில் 3 கிரகணங்கள் ஏற்பட்டால் அந்த வருடத்தில் ஒரு பாரிய அழிவொன்று உள்ளது என்பது உறுதி! நான் அன்று எனது இணைத்தளத்தில் இட்ட பதிவை பார்த்து பலர் சிரித்தார்கள். ஏன் நிறுவனத்தில் இன்றும் என்னை கேலி செய்வார்கள்.

எனது இந்த பதிவும் முன்னெச்சரிக்கைக்கான பதிவு தான்! இந்த வருட இறுதிக்குள் மேலும் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நான் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் எனக்கு தெரிய வந்துள்ளது.

அதனால் தயவு செய்து எதற்கும் அவதானத்துடன் இருக்குமாறு நான் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

இது உலகம் புதுப்பிக்கப்படுவதற்கான காலப்பகுதி. இவ்வாறான அழிவுகள் ஏற்பட்டு பின்னர் இந்த உலகம் புதுப்பிக்கப்படும் என்பது வரலாறு!

இந்த உலகம் புதுப்பிக்கப்படுவது யுகமொன்றிற்கு ஒரு முறை தான்! அந்த யுகம் புதுப்பிக்கப்படும் ஆண்டு நெருங்கி விட்டதாம். அந்த ஆண்டு தான் 2012!2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதியுடன் உலகின் பிரசித்திப் பெற்ற கலண்டரான மாயன் கலண்டரின் திகதிகள் முடிவடைகின்றன.

அதன் பின்னர் உலகம் எப்படி இருக்கும் என்பது தான் கேள்வி!

எனது பழைய பதிவை பார்க்க இந்த முகவரியில் பயணிக்கவும்!

http://aprasadh.blogspot.com/2009/07/2012-22.html

0 கருத்துகள்: