செவ்வாய், 22 செப்டம்பர், 2009

அனைவருக்கும் நன்றி!


குறுகிய காலத்தில் பெருமளவானோரை இந்த பதிவுகளின் ஊடாகவே சந்தித்துள்ளேன். பலரது முகவரியை நான் அறிந்தேன்.

அதுமட்டுமன்றி என்னை பலரும் அறிந்தது இந்த பதிவுகளின் மூலம் என்றும் கூறலாம்.

இவ்வாறு பதிவுலகில் பிரவேசித்த எனக்கு இதுவரை இருவர் விருதுகளை வழங்கியுள்ளனர்.

இன்றைய பதிவு அவர்களை மையமாக கொண்டே அமைந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும், எனது பதிவுலக பிரவேசத்திற்கு உட்சாகம் கொடுத்தவர்களுக்குமே இந்த பதிவை சமர்பிக்கிறேன்.

முதல் முறையாக அவர்களுக்கு எனக்கு கிடைத்த விருதை வழங்க விரும்புகிறேன்.

முதலாவது விருது இதுவரை பதிவுலகத்திற்கு பிரவேசிக்காது எனக்கு பலவகையில் ஒத்துழைப்புக்களை வழங்கிய என் அண்ணன் டிரோஷனுக்கு.

இரண்டாவது எனக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி தகவல்களை பெற்றுக் கொடுத்த லோஷன் அண்ணாவிற்கு.

http://loshan-loshan.blogspot.com/

மூன்றாவது பதிவுலகில் சிறந்த பதிவுகளை இட்டு வரும் ஹிஷாம் அண்ணாவிற்கு.

http://nhisham.blogspot.com/

நான்காவது எனது அருகில் இருந்தாலும், அருகில் இல்லாவிடினும் தகவல்களை தொடர்ந்தும் வழங்கிய வெற்றியின் சதீஷன்.

http://sshathiesh.blogspot.com/

ஐந்தாவதாக விருது வழங்கியவருக்கே மீண்டும் அதே விருதை வழங்க விரும்புகிறேன்! (சிந்து)
http://vsinthuka.blogspot.com/


இறுதியாக இதுவரை எனக்கு பலவகையில் உதவிகளை வழங்கிய என் நண்பர்களுக்கு இந்த விருதை சமர்பிக்கிறேன்!


எனது பதிவுகளின் இடுகை தொடரும்.............

4 கருத்துகள்:

Sinthu சொன்னது…

நன்றி..

யோ வாய்ஸ் (யோகா) சொன்னது…

வாழ்த்துக்கள்

Ranjan Diroshan சொன்னது…

]நன்றிகள் கோடி, நான் வழங்கியது சிறு உதவிதான் அனாலும் அதை கொண்டு உங்கள் முயற்சியால் தான் நீங்கள் இன்று விருதுகளை பெற்று இருக்குறீர்கள். அதற்காக என் பெயரயும் உங்கள் பதிவில் இட்டு என்னை பெருமை படுத்தியதற்கு நன்றி.
நான் இப் பதிவை இடும் பொழுது உங்கள் வலை தளத்தை 10300 இக்கும் அதிகமானவர்கள் பார்வை இட்டிருந்தனர். எதிர் களத்தில் மேலும் பல 100 கோடி பேர் பார்வை இட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

LOSHAN சொன்னது…

வாழ்த்துக்கள் அருண்.. உங்கள் பணி சிறக்கட்டும் . நீங்கள் அளித்த அன்பு விருதுக்கும்நன்றி.. என் பதிவுலக வாழ்க்கையிலும் நீங்கள் பெரும் பங்கு வகித்தவர். அதுபற்றி என் முன்னூறாவது பதிவில் சொல்லி இருக்கிறேன்