ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

மனிதனைத் தாக்கும் மற்றுமொரு மிருகம்!மனிதர்களை கடந்த சில மாதங்களாக தாக்கிய பன்றிக் காய்ச்சலை தொடர்ந்து இன்னுமொரு மிருகத்தின் காய்ச்சல் மனிதனை அண்மித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை பத்திரிகை செய்தியை கண்டு வியப்படைந்தே இந்த பதிவை சில நாட்களின் பின்னர் இன்று இடுகிறேன்!

தென் கிழக்காசிய நாடுகளிலேயே இந்த காய்ச்சல் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது மலேசியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் அதிகளவில் காணப்படுவதாக இன்றைய பத்திரிகையில் படித்தேன்!

மேலும், இந்த குரங்குக் காய்ச்சல் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை இதுவரை அண்மிக்கவில்லை என்பது திருப்தியளிக்கிறது.

நீண்ட வால், குட்டை வால் குரங்குகளை மட்டுமே தாக்கி வந்த இந்த வைரஸ் மலேசியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் சில மனிதர்களிடம் தொற்றியுள்ளதாக பீதி ஏற்பட்டுள்ளது.

இது நுளம்புகளினால் ஏற்படும் மலேரியா காய்ச்சல் வகையைச் சேர்ந்தது என தெரிவிக்கப்படுகிறது.

நோயால் பாதிக்கப்பட்டுள்ள குரங்குகளிடமிருந்து பரவிய இந்த வைரஸ், மனிதனை தாக்கியுள்ளது. இதுவரை மலேசியாவில் மாத்திரம் 150ற்கும் மேற்பட்டோர் குரங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதில் 3இல் 2 பங்கினரை குரங்குக் காய்ச்சல் வைரஸ் தாக்கியுள்ளமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறு இனங்காணப்பட்டவர்களில் இருவர் இதுவரை பலியாகியுள்ளனர்.

அத்துடன், தற்போது இந்தோனேஷியாவிலும் இந்த காய்ச்சல் பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வைரஸ் தொற்றுக்குள்ளானால் உடலின் இரத்த ஒட்டம் பாதிக்கப்பட்ட மூச்சு திணறல் ஏற்பட்டு உயிர் ஆபத்து ஏற்படும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சரி மனிதன் குரங்கிலிருந்து வந்ததை தற்போது மறந்துள்ள நிலையில் ஞாபகப்படுத்தும் வகையில் இந்த காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது.

ஆனால் பன்றிக் காய்ச்சல். மனிதன் பன்றியிலிருந்து வரவில்லை?

3 கருத்துகள்:

சந்ரு சொன்னது…

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றிகள்.

கனககோபி சொன்னது…

குரங்குகளுக்கு வருமா?
வராதென்றால் எனக்குப்பயம் இல்லை...

Sinthu சொன்னது…

விருது வழங்கியுள்ளேன், பெற்றுக் கொள்க...