ஞாயிறு, 1 நவம்பர், 2009

இந்திய - இலங்கை தமிழ் சினிமா!

தமிழ் சினிமா என்கின்ற போது இந்திய சினிமாவிற்கே வரவேற்ப அதிகம்!

காரணம் இந்திய சினிமாவின் தரம். அது மட்டுமா தொன்று தொட்டு வந்த விதம் அவ்வாறு அமைந்து விட்டது.

தமிழர்கள் என்ற ரீதியில் எடுத்துக் கொண்டால் எல்லாவற்றிற்கும் இந்தியா எவ்வாறாவது எமக்கு அவசியம் ஆகும் அல்லவா! அதுபோன்றே தான் இந்திய சினிமாவும்.இலங்கையில் தமிழ் சினிமாக்கள் பல எடுக்கப்படுகின்றன. எனினும் அது இந்த நாட்டை விட்டு வெளியில் செல்லாது இங்கேயே இருந்து விடுகின்றன.

சொல்லப்போனால் மண்ணோடு மண்ணாய் போய் விடுகின்றன இலங்கை தமிழ் சினிமா.

அத்துடன், இந்தியா போன்றதொரு பெரிய நாட்டிற்கு அருகில் இருக்கும் போது எம்மால் முன்னோக்கி செல்லது கடினம். அது எனக்கு நன்றாகவே தெரியும்.

இதற்கு உதாரணமொன்று கூட சொல்ல முடியும். ஆலை மரம் அருகில் எந்தவொரு செடியையும் வளரவிடாது!அதுபோன்று தான் இந்திய சினிமா

ஆலை மரம் - இந்தியா
ஏனைய செடிகள் - இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்

இந்தியாவிற்கு அருகில் இருப்பதனால் எம்மால் முன்னோக்கி செல்வதில் கடினமாகவுள்ளது என்கிறார்கள் உள்ளுர் பட தயாரிப்பாளர்கள்.எனினும், அப்படி சொல்ல முடியாது திறமையான, தரமான, ரசிகர்களின் மனதை கவரும் வண்ணமான திரைப்படங்களை வழங்கினால் நிச்சயம் இந்தியாவை தாண்டி இலங்கை சினிமா செல்ல முடியும்.

என்ன இவன் இலங்கையில் படம் எடுக்க சொல்ரானா? வேணானு சொல்லுரானா? ஒண்ணுமே புரியல அப்படி தானே!

புரிந்து கொண்டால் சரி!

ஏன் இலங்கையிலும் திறமையான நடிகர்கள் இருக்கின்றார். அவர்கள் ஏன் இந்தியாவிற்கு சென்று நடிக்க வேண்டும். இங்கேயே தமது திறமைகளை காட்டி முன்வர முடியும் தானே.

இந்திய சினிமாவை எடுத்து பார்க்கும் போது அதில் முக்கிய புள்ளிகளாக காணப்படும் கலைஞர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இலங்கையிலும் திறமை உள்ளது என்பதை அவர்கள் நிருபித்துள்ளனர்.பார்ப்போம் சினிமாவின் எதிர்காலம் இலங்கைக்கு எப்படி என!

0 கருத்துகள்: