செவ்வாய், 3 நவம்பர், 2009

இருக்கிறம் ஏமாற்றியது!


இருக்கிறம் சஞ்சிகையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள் மற்றும் வலைப்பதிவர் சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றது.

3 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இயற்கையில் மாற்றத்தினால் 4 மணி பிந்தியே சந்திப்பு ஆரம்பிக்கப்பட்டது.

எனினும், நாங்கள் குறித்த நேரத்திற்கு சென்று நண்பர்களுடன் கலந்துரையாட ஆரம்பித்து விட்டோம். சுமார் 50ற்கும் மேற்பட்டோர்.

சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், அறிவிப்பாளர்கள், வலைப்பதிவர்கள், மாணவர்கள் உள்ளிட்ட மேலும் பல கலந்து கொண்டதை காணக்கூடியதாய் இருந்தது.

இது வலைப்பதிவுகளை பற்றிய சந்திப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் சென்ற எமக்கு ஏமாற்றம்………

இருக்கிறம் சஞ்சிகையை பற்றிய ஒரு கலந்துரையாடல். ஏன்? இருக்கிறம் சஞ்சிகையின் ஊடகவியலாளர் மாநாடு என்று தான் கூற வேண்டும்.

எத்தனை பேர் வெளி மாகாணங்களிலிருந்து வந்திருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் ஏமாற்றம் தான்.

மட்டக்களப்பு, வவுனியா, பதுளை உள்ளிட்ட மேலும் பல இடங்களிலிருந்து கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பு ஊடகவியலாளர்களான எமக்கு பயனை அளித்த போதிலும், அவர்களுக்கு அது பயனலிக்கவில்லை என்றே கூற வேண்டும்.

இருக்கிறம் சஞ்சிகையினால் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த சந்திப்பு சிறந்தது என்றாலும், அழைப்பு தான் பிழையாயிற்று.

இது ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் என்று அழைப்பை விடுத்திருந்தால் பயனலித்திருக்கும். இருக்கிறம் ஏற்பாட்டாளர்கள் வலைப்பதிவுகளில் அழைப்பை விடுத்ததனால் இது வலைப்பதிவர் சந்திப்பு என்று அனைவரால் பேசப்பட்டது.

அதனால் தான் அனைத்து வலைப்பதிவர்களும் ஒன்று சேர்ந்து விட்டார்கள்.

இனிவரும் காலங்களில் இவ்வாறான சந்திப்புக்களை ஏற்பாடு செய்யும் போது உரியவர்களை மாத்திரம் அழையுங்கள்.

இது எனது கருத்து மாத்திரம் இல்லை. சந்திப்பிற்கு வருகை தந்த சிலரின் கருத்தை தொகுத்த கருத்துக்கள்!

புதிய முகங்கள் பலரை நேற்றைய தினம் நான் சந்தித்தேன்.
அதற்காக இருக்கிறம் சஞ்சிகைக்கு எனது நன்றிகள்.

5 கருத்துகள்:

யோ வாய்ஸ் (யோகா) சொன்னது…

எனது கருத்தும் அவ்வாறே. எனக்கு நேற்றைய சந்திப்பில் நடந்த ஒரே நல்ல விடயம் பல நண்பர்களது முகம் காண கிடைத்ததுதான். வேறு எதுவுமேயில்லை...

VARO சொன்னது…

//இது வலைப்பதிவுகளை பற்றிய சந்திப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் சென்ற எமக்கு ஏமாற்றம்……//

அருண் நீங்களுமா?
இருக்கிறம் ஆரம்பத்திலேயே தெளிவாக கூறிவிட்டதே...

www.irukkiram.tk

நானும் பதிவிட்டிருந்தேன்.
www.shayan2613.blogspot.com

சிலபதிவர்களும் சரியான முறையில் குறிப்பிட்டிருந்தார்கள்

எல்லா பதிவர்களும் ini இதை தானே.. கூறுவார்கள் தெளிவில்லாமல் வந்தது யார்பிழை.. எனக்கு ஒன்றுமே புரியவில்லை..

வதீஸ்வருணன் சொன்னது…

இருக்கிறமுக்கு மிகவும் வாய்ப்பான ஒரு சந்திப்புத்தான் நேற்றைய சந்திப்பு. வலைப்பதிவர்களுக்கு மிகவும் ஏமாற்றமான சந்திப்புத்தான்

வந்தியத்தேவன் சொன்னது…

நான் என்னுடைய பதிவில் சுட்டிக்காட்டினேன் இது பதிவர் சந்திப்பு இல்லையென. அத்துடன் சிலருக்கு தொலைபேசியிலும் விளங்கப்படுத்தினேன் இது பதிவர் சந்திப்பு இல்லையென தவறான புரிந்துணர்வுகளால் ஏன் மற்றவர்களை நோவான்

கார்த்தி சொன்னது…

சரியாக சொன்னீர்கள் அருண். எங்களுக்கும் ஏமாற்றமே. வெறுமனே பெரியவர்களின் பேச்சுக்கள் மட்டுமெனின் இதுபோன்ற சந்திப்புக்கள் தேவையில்லையே!!!!