வெள்ளி, 13 பிப்ரவரி, 2009

வெற்றி F.Mஇன் முதலாவது பிறந்தநாள் கொண்டாட்டம்!


தமிழ் வானொலி வரலாற்றில் புதிய தடம் பதித்துள்ள வெற்றி எவ்.எம் தனது முதலாவது பிறந்த தினத்தை 14.02.2009 கொண்டாடுகிறது.

கடந்த ஆண்டு பெப்ரவரி, அதாவது இதுபோன்ற ஒரு நாளில் தமது பயணத்தை ஆரம்பித்த வெற்றி தனது வெற்றி பாதையின் முதலாது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.

லோஷன் அண்ணாவின் தலைமைத்துவத்தில் ஆரம்பிக்கப்பட்ட வெற்றியின் வாழ்க்கை மிக வித்தியாசமான முறையில் சென்று கொண்டிருக்கிறது.

ஆரம்பிக்கப்பட்ட ஒரு வருட காலத்திற்குள்ளேயே பலரின் மனதில் இடம்பிடித்த வெற்றி, இலங்கையின் பல பிரதேசங்களிலும் தனது பயணத்தை தொடர்கிறது.

வெற்றியில் தினமும் காலை 6 மணி தொடக்கம் மீண்டும் அடுத்த நாள் காலை 5.59 வரையிலான நேரம் வரை இளையோர் முதல் முதியோர் வரை கேட்க கூடியவாறு தனது நிகழ்ச்சிகளை செய்து கொண்டிருக்கிறது.

வரலாற்றில் யாரும் பார்க்காத கேட்காத அளவு எதிர்பார்ப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கும் வெற்றியின் வெற்றி பயணத்தை பார்த்து அஞ்சாத வானொலியே இல்லை என கூறலாம்.

இவ்வாறு வெற்றி பாதையில் சென்று கொண்டிருக்கும் வெற்றியின் உறவாக நானும் சேர்ந்ததை இட்டு நான் அடையும் ஆனந்தம் கூற முடியாது.

கடந்த ஆண்டு ஜுன் மாதம் வெற்றியின் உறவாக சேர்ந்த நான், வெற்றியின் வெற்றி பாதைக்கு உதவியாக இருப்பதை நினைத்து ஆனந்தமடைகிறேன் பெருமையடைகிறேன்.

இன்னும் புதிய நிகழ்ச்சிகளை நேயர்களுக்கேற்ப இன்னும் சுவாரசியங்களோடும் சிந்தனை நிகழ்ச்சிகளோடும் வெற்றி உங்களை சந்திக்க காத்திருக்கிறது.

வெற்றியிலுள்ள ஒவ்வொரு அறிவிப்பாளரும், நிகழ்ச்சி தயாரிப்பாளர்களும், செய்திச் சேவையும், தொடர்ந்தும் நல்ல நிகழ்ச்சிகள் மற்றும் தெளிவான செய்திகளை உங்களுக்கு வழங்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

ஆர்ப்பாட்டமில்லாத ஆடம்பரமில்லாத அமைதியான வெற்றியின் பிறந்த தினத்தை முன்னிட்டு வெற்றியின் உறவுகளின் பிறந்த தின வாழ்த்து செய்திகள்.

ஏ.ஆர்.வி.லோஷன் (முகாமையாளர்)
மூச்சிலேயே கலந்திருப்பதனால் ஊரெங்கும் இதுவே ஆச்சு பேச்சு!

என்.இஷாம் (உதவி முகாமையாளர்)
வெற்றி பயணத்தில் வெற்றி வானொலி வெற்றியோடு பயணிக்க என்றும் எம்மோடு இணைந்திருக்கும் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் இந்த முதலாவது ஆண்டு நிறைவில் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

நாங்கள் இன்னும் பல சாதனைகளை புரிய நீங்கள் எமக்கு தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என்றும் வேண்டுகிறேன்.

விமலச்சந்திரன் (அறிவிப்பாளர்)
வெற்றி ஆரம்பித்து ஒரு வருட காலத்திற்குள் பல்லாயிர கணக்கான நேயர்களின் மனதில் இடம்பிடித்துள்ளது. இதற்கு நேயர்களாகி நீங்களே காரணம்! உங்களினாலேயே நாங்கள் இவ்வாறான வெற்றி இலக்கை மிக குறுகிய காலத்தில் அடைய முடிந்துள்ளது. நேயர்கள் அனைவருக்கும் நன்றிகள்!
வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

சந்துரு (அறிவிப்பாளர்)
வளர்ந்துவரும் வெற்றிக்கு வளமான வாழ்த்துக்கள் ஆரோக்கியமான நேயர்களுடன். சிரிப்போம் சிரிச்சிக்கிட்டே இருப்போம்!

பிரதீப் (அறிவிப்பாளர் மற்றும் இசை கட்டுப்பாட்டாளர்)
உலகெங்கும் பரந்திருக்கும் வெற்றியின் அன்பு உள்ளங்களை நன்றியோடு நினைவு கொள்கின்றோம். விடியல் வரட்டும். வானமும் வசப்படட்டும். இசையாலும் இனி ஒரு புது விதி செய்வோம்!

சுபாஷ் (அறிவிப்பாளர்)
வெற்றி ஆரம்பித்த ஒரு வருட காலத்திற்குள் தனக்கென ஒரு இடத்தை வெற்றி பிடித்துள்ளது. இதற்கு வெற்றி குடும்பமும் லோஷன் அண்ணாவின் முகாமைத்துவமுமே காரணம். இவ்வளவு காலமும் எமக்கு ஆதரவு வழங்கிய எமது நேயர்களுக்கு இதன்போது நன்றி தெரிவித்து கொள்கிறேன்!

செந்தூரன் (முன்னாள் அறிவிப்பாளர்)
முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்!

சதீஷன் (அறிவிப்பாளர்)
வாழ்க்கைக்கு வெற்றிதந்து இசையால் புதுவிதி செய்யும் வெற்றி வானொலிக்கு இனிய முதலாவது பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

டிசோகுமார் (உதவி இசை கட்டுப்பாட்டாளர்)
ஏதோ நம்மால் முடிஞ்சது என்பது கோழைத்தனம!;
என்னால் மட்டும் முடியும் என்பது தலைக்கணம்!
நம்மால் முடியும் என்பது தான் வெற்றியின் தளம்!
வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்!

ஆர். ரஜீவ் (அறிவிப்பாளர்)
உங்கள் துணையுடன் எங்கள் வெற்றி பயணம் என்றும் தொடரும். உங்கள் ஆதரவு எங்களுக்கு என்றும் இருக்க வேண்டும். நாங்கள் சாதனைகள் படைக்க நீங்கள் நம்மோடு நாம் உங்களோடு எப்போதும் உங்கள் தோழனாய் நன்றிகளோடு நான்.

பூஜா (அறிவிப்பாளர்)
வெற்றி! வெறும் வார்த்தை அல்ல நம் வாழ்க்கை, நம் வாழ்க்கையின் முதல் ஆண்டு இன்று. வெற்றிக்கு வாழ்த்துக்கள்!

வைதேகி (அறிவிப்பாளர்)
படிப்படியான பல வெற்றிகளைப் பெற்றிட இணைந்திருப்போம் என்றுமே வெற்றியோடு......

வனிதா (அறிவிப்பாளர்)
சோகங்களை சுகமாக்கிட வந்த சொந்தம் வெற்றி எவ்.எம்
அந்த சொந்தத்தில் எனக்குக் கிடைத்த இந்த பந்தம் என் வாழ்வில் நான் என்றுமே மறந்திட முடியாத வசந்தம்!
வாழ்த்துகிறேன் வெற்றிக்கு!

ஜோ. பென்சி (செய்தி ஆசிரியர்)
வெற்றி வெற்றி செயல்களை புரிந்து வென்றிட எனது வாழ்த்துக்கள்!

ரஜனிகாந்த் (உதவி செய்தி ஆசிரியர்)
வெற்றி இதுபோல என்றும் வாழ என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

விஜய்குமார் (செய்தியாளர்)
சூரியனை நோக்கிச் சென்றால் உயிரோடு திரும்ப மாட்டாய்!
வெற்றியை நோக்கி வந்தால் சரித்திரத்தோடு வாழலாம்.
நீங்கள் சரித்திரத்தை நோக்கி வர விரும்புபவர்கள் என எனக்குத் தெரியும்!
இனிமேல் பேச்சுக்கே இடமில்லை...
முதலாம் ஆண்டில் வெற்றியுடன் நான்.

ஜெய்சன் (விரிவாக்கல்பிரிவு)
வெற்றியின் வெற்றி நீங்களே!

தினேஷ் (விரிவாக்கல்பிரிவு)
வான்னலை நாயகனான வெற்றி குழந்தைக்கு வெற்றியின் நாயகனின் பிறந்தநாள் வாழ்த்து!

இவர்களோடு நானும் சேர்ந்து, பல்லாண்டு காலம் வாழ்ந்து நேயர்களுக்கு சந்தேஷத்தையும் வாழ்க்கைக்கு வெற்றியையும், வெற்றி வானொலி அளிக்க வேண்டும் என முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் குழந்தைக்கு வாழ்த்துகிறேன்.

5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

congrats guys.all the best to Loshan & Vettri team.

Mugunthan - COLOMBO

tamil cinema சொன்னது…

வெற்றியின் கொண்டாட்டங்களுடன் நானும் இணைந்திருக்கிறேன். வாழ்த்துக்கள்.

Thusha சொன்னது…

வாழ்த்துக்கள் வெற்றிக்கு எப்போதும் வெற்றியே

இறக்குவானை நிர்ஷன் சொன்னது…

வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

மேலும் வெற்றிச்சாதனைகளுடன் தொடர ஏக இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அருண் தம்பி,
இள வயதில் துடிப்பான உங்கள் ஊடகப்பணி பாராட்டுக்குரியது. சாதனைகளால் சரித்திரம் படைப்போம்.

தொடருங்கள்.

Sinthu சொன்னது…

"ஆரம்பிக்கப்பட்ட ஒரு வருட காலத்திற்குள்ளேயே பலரின் மனதில் இடம்பிடித்த வெற்றி, இலங்கையின் பல பிரதேசங்களிலும் தனது பயணத்தை தொடர்கிறது."
வெளிநாடுகளை விட்டிடீன்களே
வாழ்த்துக்கள்..