வியாழன், 5 பிப்ரவரி, 2009

பிறந்த நாளை கொண்டாடும் எமது நண்பன்!


குழந்தையாக இருக்கும் போதே பலரை சேர்த்த நீ, பெரியவனானால் எத்தனை பேரை எம்முடன் சேர்த்து விடுவாய்!

நினைக்கும் போதே ஆச்சரியம்!

நீ வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும், உறவுகளை, நண்பர்களை இணைத்து கொண்டே இருக்க வேண்டும்!

யாரை பற்றி இப்படி எல்லாம் வர்ணிக்கிறேன்.

எல்லேவரும் அறிந்த FACEBOOK யை பற்றி தான்!

FACEBOOK தனது 5ஆவது பிறந்த நாளை கொண்டாட உள்ளது.

2004ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது உலகின் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இணைய நிறுவனங்களில் முன்னிலை வகிக்கின்ற நிறுவன வரிசையில் உள்ளது.

இன்றைய கால கட்டத்தில் அனைவருக்கும் அத்தியவசியமான ஒன்றாக நண்பர்கள் தேவைப்படுகின்றனர்.

கடனாவது வாங்கிக் கொள்ள முடியும் தானே!

இப்படி இருக்கின்ற கால கட்டத்தில் ஒரு புதிய முயற்சியாக 2004 ஆம் ஆண்டு மார்க் லுச்கேர்பேர்கினால் ஆரம்பிக்கப்பட்டது இந்த நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் உரிமையாளரான 24 வயதுடைய மார்க் லுச்கேர்பேர்க் என்பர் தான்.

அன்றைய கால கட்டத்திலிருந்து இன்று வரை பில்லியன் கணக்கான பாவனையாளர்கள் FACEBOOK அங்கத்துவம் பெற்றுள்ளனர்.

இப்படி வளர்ந்த இந்த நிறுவனம் தற்போது தனது 5ஆவது பிறந்த நாளை கொண்டாடவுள்ளது.

ஒவ்வொருவரும் தனது பிறந்த நாளிற்காக எதாவது பரிசு வழங்குவது வழக்கம்.

FACEBOOK நிறுவனமும் அப்படி தான்.

தனது பாவனையாளர்களுக்கு தனது பிறந்த நாளை முன்னிட்டு பரிசில்களை வழங்க தீர்மானித்துள்ளது.

இதன்படி, 150 மில்லியன் பாவனையாளர்களுக்கு பரிசில்கள் வழங்கப்படும் என அந்த நிறுவன நிர்வாகம் அறிவித்துள்ளது.

5 வருடம் என்ற குறுகிய காலப்பகுதியில் தனது உலக இணையத்தளங்களில்; தற்போது 8ஆவது இடத்தை பிடித்து தனக்கென ஒரு இடத்தில் உள்ள நிறுவனம் இது.

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமாக தனது வடிவமைப்பில் சிறிய சிறிய மாற்றங்களை ஏற்படுத்திய FACEBOOK, இம்முறையும் மாற்றத்தை ஏற்படுத்த எண்ணியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பார்ப்போம் எவ்வாறான மாற்றம் ஏற்படும் என!

நண்பர்களை இணைக்கும் இந்த இணையதளத்தில் இணையும் அனைவருமே நண்பர்கள் தான்! கவலை தேவையில்லை.

நண்பர்களை தேடும் நீங்கள் FACEBOOKல் தேடுங்கள், வேறு இடம் தேவையில்லை.

5 வயதிலேயே இப்படியொரு சாதனையை படைத்த இந்த நிறுவனம் இன்னும் பல்லாயிர கணக்கான ஆண்டு வாழ வேண்டும்!

3 கருத்துகள்:

Sinthu சொன்னது…

எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்....

பெயரில்லா சொன்னது…

எப்படி பட்ட விடயங்கள சொல்லுரிங்க உண்மையாவா? "இன்றைய கால கட்டத்தில் அனைவருக்கும் அத்தியவசியமான ஒன்றாக நண்பர்கள் தேவைப்படுகின்றனர்" ரொம்ப தேவை .......

தங்கராசா ஜீவராஜ் சொன்னது…

எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்...