வியாழன், 19 பிப்ரவரி, 2009

இலங்கை பாதிப்பு, ஆசியாவில் அச்சம்!உலகின் வேலை இழப்பு வீகிதம் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில் இலங்கையிலும் அந்த பாதிப்பு ஏற்பட்டு வருவதாக அறிய முடிகிறது.

ஆசியாவில் இவ்வருடத்தில் மாத்திரம் இதுவரை 7.2 மில்லியனுக்கும் அதிகமானோர் தமது வேலைகளை இழந்துள்ளனர்.

அதில் இலங்கையில் இதுவரை 16 ஆயிரம் பேர் தமது வேலைகளை இழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

உலகின் மிக பிரபல்ய நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்ற நிலையில், இலங்கையில் இதுவரை 50 திற்கும் மேற்பட்ட நிறுவனஙகள் கடந்த 3 மாத காலப்பகுதியில் மூடப்பட்டுள்ளன.

இவ்வாறு இந்த நிலை தொடரும் பட்சத்தில் நாட்டிலுள்ள அனைத்து நிறுவனங்களும் மூடப்படும் எதிர்பார்த்த வண்ணமே இருக்க வேண்டும்!

நாம் செய்யும் தொழிலையும் நாம் இழக்க கூடிய நிலை தற்போது தோன்றியுள்ளது.

தற்போது வேலையிண்மையினால் ஆசியாவில் 22.3 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன்படி, எதிர்காலத்தில் மூன்றாவது தலைமறையினர் நாளொன்றுக்கு ஒரு டொலர் மாத்திரமே உழைக்க கூடிய காலம் நெருங்கி வருவதாக உலக பொருளியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் அமெரிக்க இதுவரை 9 வர்த்தக வங்கிகளை மூடியுள்ளதாகவும், தற்போது அமெரிக்காவில் பாரியளவு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அமெரிக்க நிச்சயம் விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கும் என உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன.

இதற்காக அமெரிக்க ஜனாதிபதி பல நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்.

அதற்காக அமெரிக்க பொருளாதாரத்தை மீட்பதற்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா கைச்சாத்திட்டுள்ளார்.

அமெரிக்காவை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக 787 பில்லியன் டொலர் நிதியுதவி திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கான சட்டத்திலேயே அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே இதற்காக அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை இதற்கு ஒப்புதல் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆயிரத்து 534 பக்கங்கள் கொண்ட இந்த சட்டத்தில் கைச்சாத்திட்ட அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, அடுத்த 3 ஆண்டுகளில் லட்சக் கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: