ஞாயிறு, 11 ஜனவரி, 2009

இலங்கையின் ஊடக சுதந்திரத்தின் சிறப்பு அம்சங்கள்!இலங்கையின் ஊடக சுதந்திரம் மிக பின்தங்கிய நிலையில் உள்ளதை நான் கூற வேண்டிய அவசியம் இல்லை.

காரணம் உலக நாட்டுக்கே தெரியும், இலங்கையின் தற்போது ஊடக சுதந்திர நிலை,

நாட்டு நிலை மட்டுமல்ல. ஊடக சுதந்திரமும்.

உலகில் உள்ள உண்மையான, மக்களுக்கு தெரியாத மறைந்துள்ள விடயங்களை வெளிகொண்டுவரும் சேவை உட்பட மக்களின் பிரச்சனைகளை எடுத்து கூற கூடிய ஒரே வழி ஊடகமே!

ஆனால், இலங்கையை தவிர ஏனைய உலக நாடுகளில் ஊடக சுதந்திரம் சற்றுயேனும் இருக்கின்றதை மறுக்கவோ? மறைக்கவோ? முடியாது.

ஆனால், இலங்கையில் ஒரு ஊடகவியலாளன் சுதந்திரமாக செய்தி ஒன்றை வெளியிட முடியாத சூழ்நிலையை உள்ளது.

ஒரு செய்தியை வெளியிட 1000 பேரை கேட்க வேண்டும். இது ஊடக சுதந்திரமா?

அவ்வாறு கேட்காது ஒரு செய்தியை வெளியிட்டால், செய்தியை தெரிவித்த ஊடகவியலாளர் நிலை?

இலங்கையில் கடந்த 2 வருடங்களில் மாத்திரம் 40 ஊடக சுதந்திரம் மீறப்பட்ட குற்றச் சாட்டுக்கள் ஐக்கிய நாடுகள் சபையில் பதிவாகியுள்ளது.

40 தெரிந்து, தெரியாமல்...... எண்ணிக்கை கூறவே முடியாது.

2009 ஜனவரி 06 மஹாராஜா நிறுவனம் முழுமையாக தாக்கப்பட்டு பெருமளவு நட்டமடைந்தது.

அந்த சம்பவம் நடைபெற்று இரு நாட்களில் சண்டே லீடர் பத்திரிகையில் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க சுட்டுக் கொல்லப்பட்டார்.

இது ஒரு வாரத்தில் அப்படி என்றால்.. ஒரு மாதத்தில், ஒரு வருடத்தில், இரு வருடங்களில், 5 வருடங்களில் எண்ணிக்கையை நீங்களே கணக்கெடுத்துக் கொள்ளுங்கள்.

இது தொடர்பான நடவடிக்கைகள் என்ன? நான் தற்போ கூறுகிறேன் இந்த இரு விடயத்திற்கான உண்மையான நிலை கண்டறியபட்டாது. கண்டறியப்பட்டாலும் வெளியிடப்பட்டாது.இருப்பினும், அமெரிக்காவில் ஊடக சுதந்திரம் 100 சதவீதம் உள்ளதை யாருமே இல்லை என கூற முடியாது.

காரணம். தற்போது வெளியாகியுள்ள கார்டூன்..
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பராக் ஒபாமாவை வைத்து சித்தரிக்கப்பட்டுள்ள கார்டூன்...

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியின் படத்தை ஒரு வித்தியாசம் கூட இல்லாமல் அப்படியே, அதே பெயரில் கார்டூனாக வெளியிட்டுள்ளது மாவல் திரைபட நிறுவனம்.

புத்தகமாக வெளிவரவுள்ள இந்த கார்டூனை பற்றி தற்போது அனைவருக்குமே தெரியும் அப்படிப்பட்ட புத்தகமொன்று வெளியாகவுள்ளதாக, இருப்பினும் அமெரிக்க அரசு அதனை தடை செய்யவோ, சித்தரித்தவரை சிறைப்பிடிக்கவே இல்லை.

உட்சாகம் வழங்கியுள்ளது.

அது ஊடக சுதந்திரம்.........

நான் ஏன் அப்படிப்பட்ட ஒரு நாட்டில் ஊடகவியலாளராக வில்லை என தற்போது கவலைபடுவதோடு வேதனைப்படுகிறேன்.

1 கருத்துகள்:

ஆதிரை சொன்னது…

பேனாக்கள் மையை நிரப்பும் போதெல்லாம் வஞ்சகமின்றி துப்பாக்கிகளும் தன் பங்குக்கு தோட்டாக்களை நிரப்புகின்றன. :(