புதன், 7 ஜனவரி, 2009

காதலுக்கு வயசே இல்லப்பா!


குட்டிக் காதலர்களான 6 வயது சிறுவனும் 7 வயதுடைய சிறுமியும் திருமண பந்தத்தில் இணைய ஆபிரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்ற பொழுது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்ட விசித்திர சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.

மிகா மற்றும் அனா லெனா என்ற இந்த சின்னஞ்சிறு ஜோடி, வெப்பமான ஆபிரிக்க காலநிலையில் திருமணம் செய்து கொள்ளவென நீச்சல் உடைகள், குளிர் கண்ணாடிகள் மிதவை என்பன சகிதம் விமான நிலையத்திற்கு புறப்பட்டுள்ளது.

திருமணத்துக்கு சாட்சியாக அனா லெனாவின் 5 வயது சகோதரியையும் தம்முடன் அழைத்துச் சென்றனர்.

சின்னஞ்சிறு காதலர்களின் குடும்பத்தினர் புதுவருட தினத்தை ஒன்றாக கொண்டாடிய சமயமே மிகா இந்த திருமணத்துக்கான யோசனையை முன்வைத்துள்ளான்.

பெற்றோர் புதுவருட கொண்டாட்டங்களில் மூழ்கியுள்ள வேளை சிறுவர்கள் தமது எதிர்கால வாழ்க்கைக்கான திட்டத்தை தீட்டியுள்ளனர்.

இரவு பெற்றோர் உறங்கச் சென்றதும், தமது திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கையில் சிறுவர்கள் களம் இறங்கினர்.
அவசர அவசரமாக தமக்கு தேவையான வெப்ப கால ஆடைகள் மற்றும் பொருட்களை எடுத்துக் கொண்டு அவர்கள் புறப்பட்டனர்.

ஹனோவரின் புறநகர்ப் பகுதியிலமைந்த தமது வீட்டிலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரம் வரை சென்ற சிறுவர்கள் அங்கிருந்து மின்சார வண்டியில் ஏறி ஹனோவர் புகையிரத நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

சிறுவர்கள் மூவரும் புகையிரத நிலையத்தில் ஹனோவர் விமான நிலையத்துக்கு செல்லும் புகையிரதத்தின் வருகைக்காக காத்திருந்துள்ளனர்.

இந்நிலையில் அங்கிருந்த காவல் அதிகாரியொருவர் சிறுவர்களின் விசித்திர நடவடிக்கையால் சந்தேகப்பட்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

பணமும் விமானப் பயணச்சீட்டுகளும் இல்லாத நிலையில் வயது வந்தவர்கள் எவரதும் துணையும் இன்றி காணப்பட்ட இந்த சிறுவர்களிடம் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டதையடுத்து, இந்த அதிர்ச்சி தரும் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

ஆபிரிக்காவின் வெப்பமான காலநிலையில் திருமணம் செய்துகொள்ள விரும்பியே அந்நாட்டுக்கு பயணம் செய்ய முடிவெடுத்ததாக சின்னஞ்சிறு காதலர்கள் தெரிவித்து பொலிஸ் உத்தியோகத்தர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்கள்.
(அப்பாடா, எப்படியொரு காதல் முடிஞ்சா நீங்களும் ரைபண்ணுங்க!
ஆனால் மாட்டீகிறாதீங்க!)

1 கருத்துகள்:

tamil cinema சொன்னது…

நெல்லைத்தமிழ் டாட் காம் சார்பில் புதிய திரட்டி...
சோதனை ஓட்டத்திற்கு பின்வரும் முகவரியை சொடுக்குங்கள்.

http://india.nellaitamil.com/