செவ்வாய், 4 நவம்பர், 2008

...மூன்று கால்களை கொண்ட குழந்தை இலங்கையில்....


அம்பாறை – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் மூன்று கால்களைக் கொண்ட குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இந்தக் குழந்தை நேற்றிரவு பிறந்துள்ளதாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எம்.எம். பாயிஸ் தெரிவித்தார்.

தாய் கருத்தரித்திருந்த போது, இரட்டைக் குழந்தையாக தென்பட்டதாகவும், அது நாட்கள் செல்லச் செல்ல ஒரு குழந்தையாக மாறியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, 3 கால்களுடன் பிறந்த குழந்தை நலமாகவுள்ளதுடன், இந்த குழந்தை குறித்த தாய்க்கு முதற் குழந்தை எனவும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி கூறினார்.

அத்துடன், குழந்தையை மேலதிக மருத்துவ பரிசோதனைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எம்.எம். பாயிஸ் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்: