கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிய முதல்வன் திரைப்படத்தை குடும்பத்தினருடன் சேர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
பல தடவைகள் இத்திரைப்படத்தை நான் பார்த்திருந்தும், இம்முறை வேறு ஓர் கோணத்திலேயே பார்த்தேன்.
இந்த படத்திற்கும் இலங்கைக்கும் இடையில் பல்வேறு தொடர்புகள் உள்ளமையை நான் இம்முறை தான் அறிவிந்து கொண்டேன், அது மாத்திரமன்றி இப்படத்தை முழுமையாக இலங்கையுடனேயே ஒப்பிட்டு பார்த்தேன்.
ரகுவரனுக்கும், அர்ஜுனுக்கும் இடையில் நடைபெறும் செவ்வி காணும் சம்பவம்.
அர்ஜுனினால் ரகுவரனிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கும் தற்போது இலங்கையின் சூழ்நிலைக்கும் இடையில் 100 சதவீத ஒற்றுமை காணப்படுகிறது.
உலக வங்கி, வரி, மனித உரிமைகள் என அனைத்து விடயங்களும் கேள்விகளாக இதன்போது அர்ஜுனினால் கேட்கப்படுகிறது.
அத்துடன், தேர்தல் விஞ்ஞாபனத்தையும் எமது நாட்டுடன் ஒப்பிட்டு பார்க்கக்கூடியதாய் உள்ளது.
அது மாத்திரமன்றி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சு பதவியை வகிக்கும் ஒருவரை சார்ந்த கதாப்பாத்திரமொன்றும் முதல்வன் திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் எதிர்காலத்தை ஏற்கனவே இத்திரைப்படத்தில் இயக்குநர் சங்கர் தெளிவுப்படுத்தியுள்ளமை வியக்க வைக்கும் விடயம்........
மேலும் இலங்கை தொடர்பான பல விடயங்கள் அத்திரைப்படத்தில் வெளிகொணரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம்........... படத்தை மீண்டும் பார்க்கவும்....................
Monday, 26 July 2010
இலங்கையுடன் முதல்வன்...........
Posted by R.ARUN PRASADH at 18:00:00
Labels: arjun, Arun, muthalvan, muthalvan - sri lanka, rakuwaran, Ranjan Arunprasadh, Raprasadh, sri lanka
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
நீங்கள் இலங்கையை பற்றி சொல்கிறீர்...தமிழ்நாட்டு நிலைமையே அது தான்...நல்ல பதிவு....
Post a Comment