Tuesday, 3 August 2010

அச்சுறுத்தலுடன் முதலில் உண்மையை தர நாம் தயார்………

இலங்கையில் 30 வருடங்களாக இடம்பெற்றுவந்த யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் ஊடகங்களின் மீதான யுத்தம் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

உலக நாடுகளை எடுத்துக் கொண்டால் உள்நாட்டு யுத்தத்தை நிறைவு செய்த நாடு என்ற பெருமையை இலங்கை பெற்றுள்ளதாக தெரிவிக்கின்ற போதிலும், அது உண்மைக்கு புறம்பான கருத்து என்பதே உண்மை.

ஒரு நாட்டை எடுத்துக் கொண்டால் நாடாளுமன்றம், ஜனாதிபதி, நீதிமன்றம், ஊடகம் என்ற அடிப்படையிலேயே நாடு இயங்க வேண்டும்.



ஆனால் இலங்கையில் ஜனாதிபதி, நாடாளுமன்றம், நீதிமன்றம், ஊடகம் என்ற அடிப்படையிலேயே நாடு இயங்கி வருகிறது.

இதில் 4ஆவது இடத்தை பிடித்துள்ள ஊடகத்தின் சுதந்திரம் முழுமையாக பறிக்கப்பட்டுள்ளமையானது உலக நாடுகளே அறிந்த உண்மை.

ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்றமை, ஊடகவியலாளர்கள் கடத்தப்படுகின்றமை என ஆரம்பமான ஊடகங்களுக்கு எதிரான வன்முறைகள் தற்போது ஊடகத்தை முழுமையாக அழிக்கும் செயற்பாட்டில் வந்து நிற்கிறது.



நான் கடமையாற்றும் வெற்றி, சியத்த மற்றும் ரியல் ஆகிய ஊடக வலையமைப்புக்களின் செய்திப் பிரிவு கடந்த 30ஆம் திகதி இனந்தெரியாத 12 பேரினால் தாக்கப்பட்டு முழுமையாக தீவைக்கப்பட்டது.



இதையடுத்து கடந்த 30ஆம் திகதி முதல் எமக்கு செய்தி சேகரித்து வெளியிடும் நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் நடுநிலையாக செய்தியை வெளியிடும் பல ஊடக நிறுவனங்கள் இருக்கின்ற போதிலும், எமது செய்தியானது யாருக்கும் அச்சுறுத்தலை எடுத்தும் வகையில் இருக்கவில்லை. முழுமையாகவே நடுநிலை செய்தியாகவே அமைந்திருந்தது.

இவ்வாறு செய்தியை வெளியிடும் எமக்கே அச்சுறுத்தல் என்கிறது போது நாட்டின் உண்மையை வழங்கினால்?



இதேவேளை, என்னுடன் கடமையாற்றும் சகல ஊடகவியலாளர்களான ரஜனிகாந்தன் மற்றும் லெனின்ராஜ் ஆகியோர் தாக்கப்பட்டு தொடர்ந்தும் தமது வீடுகளில் இருந்தவாறே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள அதேவேளை, அவர்களுடன் கடமையாற்றும் ஏனைய நால்வருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

எவ்வாறான அச்சுறுத்தல்கள் வந்தாலும் எமது ஊடக நிறுவனத்தில் வெளியிடப்படும் செய்திகளில் நாம் ஒருபோதும் பின் நிற்பதில்லை.

உண்மையான செய்திகளை உடனடியாக முதலில் தர எப்போதும் தயாராக இருப்போம்.



பாதிக்கப்பட்டுள்ள எமக்கு ஒத்துழைப்புக்களையும், அருதல்களையும் வழங்கி வரும் நேயர்கள், ஊடகவியலாளர்கள், எமது நண்பர்கள் மற்றும் ஏனையோருக்கு நிறுவனத்தின் சார்பில் நன்றி…………….

எமது நேயர்களுக்காக எமது உண்மையான ஊடக சேவை விரைவில் உங்களின் முழுமையான ஒத்துழைப்புடன் தொடரும்…

0 comments: