திங்கள், 5 ஜூலை, 2010

சேர்ந்த பிறகு விரும்பினேன்!

தன்னை தான் அறியும் நாள் முதல் ஒருவனின் மனதில் தனக்கென ஒரு லட்சியம் உண்டாகும்.

தான் தன் வாழ்க்கையில் ஒரு நிலையை அடையும் போது, இந்த தொழிலை தான் செய்ய வேண்டும், இந்த தொழிலின் மூலமே தான் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்ற எண்ணம் அனைத்து மனித உள்ளங்களிலும் தோன்றுவது உலக நியதி அல்லவா!

அவ்வாறான உலக நியதியில் மாட்டிக் கொண்ட நான், இன்று அதனை சாதிக்க முடியாத நிலையில் உள்ளேன்.

உயர்தரத்தை முடித்த எனக்கு பல்வேறு வேலைகள் என்னை நாடி வந்த போதிலும், மனதிற்கு பிடித்த இரு வேலைகளை ஒரே நேரத்தில் செய்தேன்.இலங்கையின் முன்னணி வாகன காப்புறுதி நிறுவனமான செலிங்கோ வி.ஐ.பி மற்றும் உலக வங்கி ஆகிய இரு நிறுவனங்களிலும் கடமையாற்றினேன்.

இப்படியாக என் வாழ்க்கை சென்றுக் கொண்டிருக்கும் அதேநேரம் என் லட்சியத்திற்காகவும் போராடினேன்.

ஒன்றரை வருடம் கண்மூடி திறக்கும் போது சென்று விட்டது.

2008ஆம் ஆண்டு ஜுன் மாதம் 25ஆம் திகதி எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு.

புதிதாக வானொலி சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது, அதில் கடமையாற்ற விருப்பமா?

இது தான் அழைப்பு?

அப்போது எனக்கு அங்கிருந்த வர விருப்பமில்லை. ஆனாலும் சில காரணங்களினால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அந்த வானொலி சேவையின் நேர்முகத் தேர்விற்கு சமூகமளித்தேன்.

நேர்முகத் தேர்வு – 28.06.2008

எனக்கு இந்த தொழிலில் எந்த அனுபவமும் கிடையாது. இந்த தொழிலை பற்றியும் தெரியாது. எனது லட்சியமும் இந்த தொழில் அல்ல.

ஆனாலும் நிறுவனத்திற்கு நான் அளித்த விடைகள் அவர்களுக்கு விருப்பம் போல.

உடனடியான நாளையே தொழில் வந்து இணைந்துக் கொள்ளுமாறு அழைக்கப்பட்டேன்.

எனக்கு ஆச்சரியம், என்ன செய்வது என்று தெரியவில்லை. உடனே நான் அளித்த பதில் தான்

இன்னும் இரு தினங்களில் வந்து சேருகின்றேன்.

சரி சென்று வாருங்கள். என்று அனுப்பி விட்டார்கள் என்னை.
2008.06.30ஆம் திகதி இலங்கையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட வானொலியான வெற்றியில் இணைந்துக் கொண்டேன்.இப்படி தான் என் வாழ்க்கையில் ஊடகத்துறை நுழைந்தது. கடந்த 30ஆம் திகதியுடன் இரு வருடங்களை பூர்த்தி செய்த நான், 3ஆவது ஆண்டில் தடம்பதித்து விட்டேன்.

லட்சியத்தை பற்றி சொன்னவன், அது என்ன லட்சியம் என்று இதுவரை கூறவில்லை என்பது தானே உங்களின் கேள்வி.

எனது பாடசாலை வாழ்க்கையில் பல மேடை நாடகங்களை நடித்த நான், எனது உயர்தர வகுப்பில் ஒரு நாடகத்தை நடித்தேன்.

அந்த நாடகத்தில் ஹீரோ நான் தான்.

பாடசாலையில் பிரதான மண்டபம் முழுவதும் அன்றைய நிகழ்ச்சிகளை கண்டுகழிக்க விசேட அதிதிகள், பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என அனைவரும் திரண்டிருந்தனர்.எனது அறிமுகத்தை கண்டு கரகோஷம் எழுப்பிய எனது நண்பர்கள், எனது அறிமுகத்திற்கு வரவேற்பும் அளித்தனர்.

நாடகத்தின் ஆரம்பத்தில் கரகோஷங்களை எழுப்பிய எனது நண்பர்கள், நாடக முடிவில் கண்களில் கண்ணீரை விட்டுச் சென்றனர்.

அப்போது திரைக்கு பின்னால் வந்த ஆசிரியரொருவர் என்னை பார்த்து நிச்சயமாக நீ ஒரு நடிகனாவாய்; என வாழ்த்திச் சென்றார்.

அவர் சொன்ன வார்த்தை மட்டுமல்ல, எனது லட்சியமும் அது தான்.

அது மட்டுமல்ல, அந்த நடாகத்தின் பிறகு என் வாழ்க்கையில் பல மாற்றங்கள்.

எனது நாடகத்தை பார்த்த விசேட அதிதிகளின் அறிமுகம் இன்றும் என்னுடன் இருக்கிறது.

அன்றைய தினம் எனக்கு கிடைத்த வரவேற்புக்கள்.

லட்சியம் நிறைவேறா விட்டாலும் பரவாயில்லை.... அவர்களின் வார்த்தைகள், வாழ்த்துக்கள், கண்களில் கண்ணீர் என அனைத்தும் எனது லட்சியத்தை நிறைவேற்றியது.

எனது லட்சியம் நிச்சயமாக நிறைவேறும் காலம் நெருங்கி விட்டது என நான் நம்புகிறேன்.

லட்சியம் நடிகராகுவது........
வந்து சேர்ந்தது ஊடகத்துறை........

விரும்பி சேரவில்லை இந்த தொழிலில்...... சேர்ந்த பிறகு விரும்பி செய்கிறேன்......

விரும்பி சேர நினைத்த தொழில் இதுவரை கிடைக்கவில்லை..... கிடைக்கும் என நம்புகிறேன்.


ஊடகத்துறையில் இரு வருடங்களை வெற்றிகரமான கொண்டுச் செல்ல உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்!

4 கருத்துகள்:

SShathiesh-சதீஷ். சொன்னது…

உன் இலட்சியம் ஒருநாள் நிறைவேற என் வாழ்த்துக்கள். அன்று உன் நடிப்பை பற்றியும் உன் கடந்தகால வாழ்வை பற்றியும் என்னுடன் பேசும்போது ஒரு நண்பனாக பெருமை பட்டேன். இப்போது இருக்கும் துறையில் மேலும் சாதிக்க வாழ்த்துக்கள் .

R.ARUN PRASADH சொன்னது…

நன்றி நண்பா உன் வாழ்த்துக்கு

விக்கி சொன்னது…

(நாடகத்தின் ஆரம்பத்தில் கரகோஷங்களை எழுப்பிய எனது நண்பர்கள், நாடக முடிவில் கண்களில் கண்ணீரை விட்டுச் சென்றனர்.)
*அந்த நண்பர்கள் யார்?

(அப்போது திரைக்கு பின்னால் வந்த ஆசிரியரொருவர் என்னை பார்த்து நிச்சயமாக நீ ஒரு நடிகனாவாய்; என வாழ்த்திச் சென்றார்.)

*அந்த ஆசிரியர் யார்?

(அந்த நடாகத்தின் பிறகு என் வாழ்க்கையில் பல மாற்றங்கள்.)
*எவ் வகையான மாற்றங்கள்?


உங்கள் நடிப்பு திறமையை மிக அருகினில் இருந்து பார்த்தவன் நான் ........
லட்சியம்நிறைவேற வாழ்த்துக்கள்

இறக்குவானை நிர்ஷன் சொன்னது…

நேரம் கிடைக்கும்போது மட்டும் சிலருடைய பதிவுகளை வாசிப்பது என்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன். அந்த சந்தர்ப்பங்களில் தம்பி அருண் என்ன எழுதியிருக்கிறார் என்பதைக் கட்டாயம் பார்ப்பதுண்டு.

ம்ம்ம்…நிச்சயமாக உங்கள் இலட்சியம் நிறைவேறும் அருண். உங்களைப் போல உங்கள் குடும்பத்தினரைப்போல நல்ல உள்ளம் படைத்தவர்களை ஆண்டவன் கைவிடுவதில்லை.

உங்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கைக்கு எனது பாராட்டுக்கள். ஊடகத்துறையில் இளவயது சாதனையாளனாக இருக்கிறீர்கள். விரைவில் சிகரத்தை எட்டி சாதனைக் கொடியை பிடிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாகவே உள்ளது.