இலங்கைக்கு சனிபகவானின் பார்வை கிடைத்துள்ளது போல.......
பல பிரச்சினைகளை எதிர்நோக்கிவரும் இலங்கை மக்களுக்கு தொடர்ந்தும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்த வண்ணமே உள்ளது.
கடந்த 30 வருடங்கள் இடம்பெற்ற மோதல்களினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வந்த நிலையில் இலங்கை மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை தரும் தாக்குதலாக 2004ஆம் ஆண்டு சுனாமி தாக்கியது.
இதனால் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
சுனாமியினால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நகரங்கள் இன்னமும் இந்த தாக்குதலில் இருந்து மீளவில்லை.
இந்நிலையில் இறுதிக்கட்ட மோதலில் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுவும் இலங்கைக்கு கிடைத்த பெரும் தாக்குதல் தானே!
அப்படா இனி எந்தவொரு பிரச்சினையும் இல்லாம வாழலாம்.............
என நினைத்த போNது மீண்டும் இயற்கை இலங்கையை தாக்கியது தற்போது!
நினைக்காத அளவு ஒரு பெரிய தாக்குதல் தான் இலங்கைக்கு கிடைத்திருக்கு!
சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு விரைவில் மீண்டு வர முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
நாட்டின் பல பாகங்களையும் தாக்கி வரும் மழையுடன் கூடிய காலநிலை இன்னும் சில தினங்களுக்கு தொடரும் என நான் இன்று வளிமண்டலவியல் திணைக்களத்துடன் தொடர்புக் கொண்டு கேட்டப்போது தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று எனக்கு ஒரு துக்கம் : ஒரு சந்தோஷம் கிடைத்த நாள்.
என்ன துக்கம்......
இன்று நான் பரீட்சையொன்று எழுதினேன்.... ஆனால் சரியான முறையில் எழுத கிடைக்கவில்லை.
இயற்கையின் சீற்றத்தினால் குறித்த நேரத்திற்கு பரீட்சைக்கு செல்ல முடியவில்லை...
ரொம்ப கவலையா இருந்தது.
ஆனால் வேலைக்கு வந்து சிறிது நேரத்தில் ஒரு எஸ்.எம்.எஸ்....
யாரு நம்ம நிர்ஷன் அண்ணா?
புதிய தொலைபேசி இலக்கத்திலிருந்து எனக்கு கோல் பண்ணுங்க அருண்...
இது தான் எஸ்.எம்.எஸ்.......
சரி கோல் பண்ணலாமுனு நினைக்கும் போது...... இன்னுமொரு கோல்.
யாரு என நினைச்சுக்கிட்டு ஆன்சர் பண்ணினா? வீரகேசரி!
உடனே நிர்ஷனுக்கு கோல் பண்ணுங்க அது தான் கோல்.......
சரினு கோல் பண்ணினா?
ரொம்ப முக்கியமாக விஷயம் அருண்...... என்ன அண்ணா.........
ஒரு செய்தியை தந்தாரு....
களுத்துறை – புலத்சிங்கல - மிரிஸ்ஹேண தோட்டத்தில் வெள்ள நீர் 30 அடி உயரத்திற்கு 3 நாட்கள இருக்கு...... 3 நாள் யாரும் இங்க வரல..... சாப்பிட கூட உணவு இல்லாத இருக்காங்க எதாவது செய்யனும்.. நான் அங்க தான் இருக்கேன்; எனக்கும் வெளியில் வர முடியல......
இது தான் அண்ணா தந்த செய்தி..
சரி அண்ணா ஏதாவது செய்யலாம் என சொல்லி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கும் ஏனைய இடங்களிற்கும் சுமார் 20ற்கும் அதிகமான தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டதன் விளைவாக அவர்களுக்கு உலக உணவு திட்டத்தினால் உணவு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
மனசுக்கு ரொம்ப திருப்தியா இருக்கு...
நான் அறிவிக்கும் வரை அப்படியொரு ஊர் பாதிக்கப்பட்டிருக்கும் விடயம் அவர்களுக்கு தெரியாது..
ரொம்ப ரொம்ப சந்தோஷம்......
2 comments:
நல்ல விடயம் உன் சமூகப்பணிக்கு நண்பனாய் ஒரு வாழ்த்துக்கள்.
ஒரு ஊரை காப்பாற்றிய உங்கள் இருவருக்கும் மனனமர்ந்த
நல் வாழ்த்துகள்
Post a Comment