Monday, 10 May 2010

27 பேர் உயிரிழந்த குறுந்தகவல் உண்மை என உறுதி!

இலங்கையில் பரப்பரப்பை ஏற்படுத்திய குறுந்தகவல் உண்மைக்கு புறம்பானது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அது உண்மை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த செய்தி சுமார் 3 வருடங்களுக்கு முன்னர் உத்தியோகப்பூர்வ ஆங்கில செய்தி இணையத்தளங்களில் வெளிவந்திருந்தன.



இலங்கையில் பரப்பரப்பை ஏற்படுத்திய செய்தியை தருகிறேன்!


Its very important news for all of you. Do not pick up calls from the Under given numbers. 9888308001, 9316048121,
9876266211, 9888854137, 9876715587 ,These numbers will come in red color, if the call comes up from these
numbers. Its with very high wave length, and frequency. If a call is received on mobile from these numbers, it creates a very high frequency and it causes brain ham range.
It's not a joke rather, its TRUE. 27 persons died just on receiving calls from these numbers. Watch Aaj Tak (NEWS), DD News and IBN 7.
Forward this message to all u'r friends and colleagues, and relative

குறித்த குறுந்தகவலிலுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களானது செய்மதி தொலைபேசிகளுக்கான இலக்கங்களே.

அது ஜி.எஸ்.எம் அல்லது 3-ஜி இணைப்புக்களுக்கான இலக்கங்கள் அல்ல!

அதனை நீங்களே உறுதி செய்துக் கொள்ள முடியும்! எப்படி என்றால் குறித்த குறுந்தகவிலுள்ள தொலைபேசி இலக்கங்களை உற்று நோக்கும் போது அதில் நாட்டிற்கான தொலைபேசி குறியீட்டு இலக்கம் இல்லை.

அவ்வாறு நாட்டிற்கான தொலைபேசி குறியீட்டு இலக்கங்கள் இல்லாத இலக்கங்கள் நிச்சயமாக செய்மதி தொலைபேசி இலக்கங்களே!

அத்துடன், அந்த குறுந்தகவில் குறிப்பிடப்பட்டுள்ளதை போன்றே 27 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் செய்மதி தொலைபேசியினூடாக குறித்த ஒரு நாளில் உரையாடிக்கொண்டிருக்கும் போது செய்மதியில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அதிலிருந்து வெளிவரும் கதிரின் தாக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து இவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நேரத்தில் உரையாடிக் கொண்டிருந்த தொலைபேசி இலக்கங்களினாலேயே இவர்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என சில வதந்திகள் அன்றைய தினம் எழுந்த நிலையில் அது சர்ச்சையை ஏற்படுத்தியது.

நிச்சயமாக இது நாங்கள் உபயோகிக்கும் ஜி.எஸ்.எம் அல்லது 3-ஜி தொலைபேசி இணைப்பல்ல, அதனால் எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை.



எனினும், அன்றைய காலப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தாத இந்த குறுந்தகவல் ஏன் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியது என அனைவரது மனதிலும் ஓர் கேள்வி தோன்றுகின்றது அல்லவா?

சுமார் 3 வருடங்களுக்கு முன்னர் எனும் போது 2007ஆம் ஆண்டு!

2007ஆம் ஆண்டில் இலங்கையின் தொலைபேசி உபயோகம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. அன்று இவ்வாறு பரவிய குறுந்தகவல் அனைவரையும் சென்றடைய முடியாத நிலை இருந்தது.



எனினும் தற்போது இலங்கையில் தொலைபேசி உபயோகிப்பவர்களது எண்ணிக்கை சுமார் 75 சதவீதத்திற்கும் அதிகம்.

அதனாலேயே இந்த குறுந்தகவலினால் இந்த செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.

இவ்வாறு பரவும் செய்திகளை ஆராய்ந்து பின்னர் அதற்கான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதே சிறந்தது.

இதை கூறுவதற்கான காரணம் இந்த செய்தியை கேள்வியுற்ற பலர் தமது தொலைபேசிகளை விற்பனை செய்துள்ளமை சுவாரச்சியமான விடயம்!

எது எப்படியோ இவ்வேளையில் இலாபமாக தொலைபேசிகளை வாங்கியவர்களுக்கு அதிஷ்ட தேவதை கதவை தட்டியிருக்கின்றார் என்பது உண்மை தான்!


0 comments: