செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

...இலங்கையின் அரசியல் விளையாட்டு....

அரசியல் யுத்தத்தில் ஆரம்பித்து நடிப்பாக மாறி இராணுவத்திலிருந்து தற்போது விளையாட்டாகவும் மாறிவிட்டது.


இதில் எதை அடிப்பது?

என்னடா, இவன் எதை பற்றி சொல்லப் போறான் என தானே உள்ளம் கேட்கிறது. முதலாவது வசனத்திலேயே புரிந்துக் கொள்ள முடிந்திருக்கும் அல்லவா.

வேறு எதை பற்றி இலங்கையின் அரசியல் விளையாட்டுக்களை பற்றி தான்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற மாகாண சபை தேர்தல்களின் போது அரசியலில் நடிகர்களின் ஆதிக்கத்தை பார்த்து ரசித்து பின்னர் இராணுவ ஆட்டத்தை பார்த்து வந்த எமக்கு, மீண்டும் ரசிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.


அரசியல் ஆட்டம் தொடருமா?

உண்மையிலேளே இலங்கை வாழ் நாங்கள் புன்னியம் செய்துள்ளோம் போல. அரசியல், யுத்தம், இராணுவம், விளையாட்டு, சினிமா உள்ளிட்ட அனைத்தையும் அனுபவிக்க கூடிய வாய்ப்பு தொடர்ந்து எமக்கு கிடைத்து வருகிறது.

மாகாண சபை தேர்தல்களில் சினிமா நடிகர்களின் நடிப்புத் திறமைகளை அரசியலில் பார்த்த எமக்கு, மாறுதலாக அரசியல் விளையாட்டையும் பார்க்க கூடிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்களை பற்றி தான்.

நாடாளுமன்ற தேர்தலில் இலங்கையின் கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சனத் ஜனசூரிய களமிறங்கியுள்ளதுடன்,


அப்போது அடிச்சாச்சு இனி?

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனும் அரசியல் காலடி வைக்க எண்ணியுள்ளார்.


அரசியலில் பந்து வீசுவது லேசா?

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க ஏற்கனவே அரசியலில் பிரவேசித்து பல்வேறு இன்னல்களை அனுபவித்து தற்போது வேறு கட்சிகளை நோக்கி தாவிக் கொண்டிருக்கிறார்.


அன்று நானும் அடிச்சேன். வாங்கடா..... வாங்க........

அன்று பந்தை சுழற்றி சுழற்றி அடித்தவர், இப்போது தன்னை தானே சுழற்றி சுழற்றி அடித்துக் கொள்கிறார்.

சொன்னது சரியா??

இந்த நிலையில், தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான சனத் ஜனசூரிய மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோரும் பிரவேசிக்கவுள்ளனர்.

நாடாளுமன்றம் என்ன கிரிக்கெட் ஆடும் மைதானமா?

இவர்கள் எத்தனை நாளுக்கு தெரியவில்லை. இவர்களின் வாழ்க்கையில் எத்தனை கட்சிகள் தெரியவில்லை. அதற்கு நிச்சயம் எமக்கு பொறுமை வேண்டும் அல்ல. காத்திருப்போம் அவர்களின் கட்சி தாவல்களை பார்த்து ரசிக்க.

சரி, இலங்கை அரசியல் தற்போது கிரிக்கெட்டை மையமாக கொண்டு தான் இயங்குகிறது என நினைத்தால், அடுத்த அதிர்ச்சி.

இலங்கையின் முன்னணி ஒட்ட வீராங்களை சுசந்திகா ஜயசிங்க.


நாடாளுமன்றத்திலும் இப்படி ஓட முடியுமா?

அவரும் அரசியலில் பிரவேசிக்க ஆயத்தமாகிவிட்டார்.

இப்போது நாடாளுமன்றம் என்ன ஒடுவதற்கான மைதானமா?

எதிர்வரும் காலங்களில் இலங்கையின் நாடாளுமன்ற ஆட்சியில் அனுபவம் மிக்க அரசியல்வாதி என்ற ஒன்று இல்லாமல் போய்விடும்.

அத்துடன், நாடாளுமன்றின் அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைக்கவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

அப்படி குறைத்தால் அனைத்து விளையாட்டு வீரர்களும் விரைவில் நாடாளுமன்றத்தை நோக்கி சென்று விடுவார்கள்.


இது நல்லா இருக்கே.......

எது எப்படி இருந்தாலும், எமக்கு ஓரே ஜாலி தான். (ஆப்பும் இருக்கு போல)

0 கருத்துகள்: