செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

கையடக்கத் தொலைபேசியிலுள்ள வீடியோக்கள் ஒரு நொடியில் இணையத்தில்!...

தொழிநுட்ப வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் வளர்ந்துவரும் ஓர் விடயமாகும்.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால் உலகம் இப்போது தொழில்நுட்பத்தின் கீழேயே உள்ளது.

இந்த நிலையில் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் இணையம் மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியன முக்கிய இடங்களை வகிக்கின்றன.

இந்த இரண்டுமே தற்போது ஒன்றிணைந்து செயற்படுவதாகவும் கூறலாம்.

ஒரே வசனத்தில் சொல்ல வேண்டுமானால், “உலகம் கையில்”.எதற்கு இவ்வளவு விளக்கம் என நினைக்கிறீங்களா?

சரி சொல்லுறேன்.

முன்னர் கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்யப்படும் வீடியோ காட்சிகளை வயர்கள் அல்லது புலுடுத் ஊடாக கணனியில் சேமித்து வைத்தோம்.

இவ்வாறு கையடக்கத் தொலைபேசியில் உள்ள வீடியோக்களை கணனியில் சேமிக்க குறைந்தது சுமார் 10 நிமிடங்களாவது எடுத்தது அல்லவா?ஆனால் இப்போது ஒரு நொடி போதும், கையடக்கத் தொலைபேசி வீடியோக்களை உடனடியாக கணனியில் மட்டுமல்ல உலகமே பார்க்க கூடியவாறு இணையத்தில் ஏற்ற முடியும்.

இதற்கு ஒரு நொடி மாத்திரமே நாம் செலவிட வேண்டியிருக்கும்.

எப்படி? என்பது தானே அடுத்து கேள்வி. இதோ விடை!

நீங்கள் வீடியோவை பதிவு செய்யும் போது உங்கள் கையடக்கத் தொலைபேசியில் GPRS சை செயற்படுத்தி இருப்பதே இதன் முக்கிய அம்சமாகும்.

முதலில் உங்கள் கணனியின் முன் அமர்ந்து என்ற இணையத்தில் உங்களை பதிவு செய்துக் கொள்ளுங்கள்.நீங்கள், உங்களை பதிவு செய்துக் கொண்ட பின்னர் அடுத்த கட்டமாக கணனி திரையில் உங்கள் கையடக்கத் தொலைபேசியின் இலக்கத்தை பதிவு செய்துக் கொள்ளுங்கள்.

அடுத்த சில நிமிடங்களில் உங்கள் கையடக்கத் தொலைபேசிக்கு ஒரு குறுந்தகவல் (SMS) கிடைக்கப் பெறும்.

அதில் காணப்படும் இணைய முகவரிக்கு உங்கள் கையடக்கத் தொலைபேசியின் ஊடாக பிரவேசிக்க வேண்டும்.

அப்போது நீங்கள் பிரவேசிக்கும் இணைத்தளம் ஒரு கோப்பை கையடக்கத் தொலைபேசிக்கு பதிவிறக்கம் செய்ய கோறும்.

உடனடியாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்.

அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் கோப்பானது மென்பொருளாக உங்கள் கையடக்கத் தொலைபேசியில் சேமிக்கப்படும்.

பின்னர் அந்த மென்பொருளின் ஊடாக உள்ளே பிரவேசிக்கும் போது, அங்கே கேட்கப்படும் பாவனையாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை வழங்க வேண்டும்.

அதையடுத்து ஒரு வீடியோ திரையொன்றை உங்கள் கையடக்கத் தொலைபேசியில் காணக்கூடியதாய் இருக்கும்.பின்னர் அதனை Options பட்டனை கிளிக் செய்து வரும் மெனுவிலுள்ள broadcast என்ற சொல்லை கிளிக் செய்த உடன் வீடியோ செய்துக் கொள்ளமுடியும்.

அவ்வாறு வீடியோ செய்யப்படும் அனைத்து வீடியோ கோப்புக்களும் அடுத்த நொடியில் இணையத்திலுள்ள உங்கள் கணக்கில் சேமிக்கப்படும்.எவ்வளவு இலகுவான விடயம். செய்து பாருங்கள்.

1 கருத்துகள்:

Amirdavarshiny சொன்னது…

நன்றி நண்பா புதிய தகவலை தந்தமைக்கு
இன்னும் பல புதிய படைப்புகளை எதிர் பார்க்கின்றோம் . நன்றி