நீண்ட நாட்களுக்கு பின்னர் பதிவிற்கு வருகிறேன். மன்னிக்கவும் வேலைகள் அதிகம்.
சரி, எதை பற்றி எழுதுவது என நினைத்தால் ஞாபகத்திற்கு வருபது இலங்கையின் அரசியல் களம்.
6ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக எதிர்வரும் 26ஆம் திகதி இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று தபால் மூல வாக்களிப்புக்களும் ஆரம்பமாகிவிட்டன.
இந்த வாக்களிப்பு நடவடிக்கைகள் இரண்டு நாட்களுக்கு தொடரும்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட திகதியிலிருந்து வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரித்த வண்ணமே உள்ளன.
நாளொன்றில் தேர்தல் பிரசார கூட்டங்களை விட வன்முறைச் சம்பவங்களே அதிகளவில் இடம்பெறுகின்றன.
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக அதிகளவிலான வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இதன்படி, 22 வேட்பாளர்கள் இம்முறை தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.
இம்முறை தேர்தல் களத்திலுள்ள வேட்பாளர்களின் விபரங்கள்
• மஹிந்த ராஜபக்ஷ - ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு
• சரத் பொன்சேகா - புதிய ஜனநாயக முன்னணி
• சிறிதுங்க ஜெயசூரிய - ஐக்கிய சோசலிஸக் கட்சி
• M.P..நமுனுமுல்ல - அனைவரும் மக்கள் அனைவரும் மன்னர்
• சரத் மனமேந்திர - புதிய சிஹல உறுமய
• அச்சல சுரவீர - தேசிய அபிவிருத்தி முன்னணி
• அநுர லியனகே - தொழிலாளர் கட்சி
• வண.பத்தரமுல்ல சீலரட்ண தேரர் - ஜனசெத முன்னணி
• விக்ரமபாகு கருணாரட்ண - இடதுசாரி முன்னணி
• விஜய டயஸ் - சோசலிச சமத்துவக் கட்சி
• சரத் கொன்காஹே - ஐக்கிய தேசிய மாற்று முன்னணி
• K.G.R.L.பெரோ - நமது தேசிய முன்னணி
• M.C.M. ஸ்மயில் - ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி
• ஒஸ்வால்ட் சொய்ஸா - ருகுணா ஜனதா கட்சி
• சரத் பின்னடுவ - தேசிய கூட்டமைப்பு.
• செனரட்ண சில்வா - தேசப்பற்றுள்ள தேசிய கூட்டமைப்பு.
• சுகத்சிறி கமகே - ஐக்கிய ஜனநாயக முன்னணி
• M.K.சிவாஜிலிங்கம் - சுயேட்சை
• I.M. இலியாஸ் - சுயேட்சை
• மயோன் முஸ்தப்பா - சுயேட்சை
• U.B.விஜயகோண் - சுயேட்சை
• V.மஹிமன் ரஞ்சித் - சுயேட்சை
இதேவேளை, இம்முறை தேர்தலில் வாக்களிக்க தகுதிப் பெற்றவர்கள் தொடர்பான விபரங்களை திரட்டினால்.
2008ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின்படி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நாடு முழுவதிலும் 1 கோடியே 40 லட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
மாகாண அடிப்படையில் மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் 15 லட்சத்து 21 ஆயிரத்து 854 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 14 லட்சத்து 74 ஆயிரத்து 464 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 8 லட்சத்து 13 ஆயிரத்து 233 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் 9 லட்சத்து 70 ஆயிரத்து 456 பேரும், நுவரெலிய மாவட்டத்தில் 4 லட்சத்து 57 ஆயிரத்து 137 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 7 லட்சத்து 42 ஆயிரத்து 684 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
மேலும், வன்னி மாவட்டத்தில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 975 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் 7 லட்சத்து 21 ஆயிரத்து 359 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 லட்சத்து 23 ஆயிரத்து 644 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 133 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 835 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் 4 லட்சத்து 95 ஆயிரத்து 575 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 11 லட்சத்து 83 ஆயிரத்து 649 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் 5 லட்சத்து 74 ஆயிரத்து 814 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 3 லட்சத்து 642 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் 7 லட்சத்து 34 ஆயிரத்து 651 பேரும், கேகாலை மாவட்டத்தில் 6 லட்;சத்து 13 ஆயிரத்து 938 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
வட மத்திய மாகாணத்தின் அநுராதபுரம் மாவட்டத்தில் 5 லட்சத்து 79 ஆயிரத்து 261 பேரும், பொலன்னறுவை மாவட்டத்தில் 2 லட்சத்து 80 ஆயிரத்து 337 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
அத்துடன், தென் மாகாணத்தின் காலி மாவட்டத்தில் 7 லட்சத்து 61 ஆயிரத்து 715 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 4 லட்சத்து 21 ஆயிரத்து 186 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 5 லட்சத்து 78 ஆயிரத்து 758 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
Tuesday, 12 January 2010
இலங்கை தேர்தல் களத்தில் சூடு.
Posted by R.ARUN PRASADH at 08:17:00
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
:) நால்லாத் தான் பார்க்கிறாங்கைய்யா கணக்கு.. :)
Post a Comment