உலகின் அனைத்து நாடுகளிலும் பல்வேறு விதமான தேர்தல்கள் நடைபெற்று வந்தன. வருகின்றன.
இலங்கையில் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் போன்ற ஒரு தேர்தலை பல நாடுகள் சந்தித்திருந்தாலும், இது போன்றதொரு தேர்தலை நிச்சயம் சந்தித்திருக்க மாட்டார்கள் என்றே கூறவேண்டும்.
ஜனாதிபதியின் சார்பாக இருந்த ஒருவரே அவருக்கு எதிராக போட்டியிடுவதே இந்த தேர்தலின் பிரகாசமான விடயம்.
சரி, தலைப்பை பற்றி சற்று பார்ப்போம்.
உலகில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் பிரசார நடவடிக்கைகள் இருந்த போதிலும், இப்படியான ஒரு பிரசார நடவடிக்கையை நாம் பார்த்ததில்லை. குறிப்பாக கூறினார் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே பிரசார நடவடிக்கைகள் ஆரம்பித்து விட்டன.
உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது கூட இவ்வாறான தேர்தல் பிரசாரங்கள் இருக்கவில்லை.
இன்று கணனியில் அமர்ந்து இணையத்தை தட்டினால் சர்வதேச இணையத்தளத்திலிருந்து உள்நாட்டு இணையத்தளம் வரை இலங்கை தேர்தல் தொடர்பான பிரசாரங்கள்.
உலகின் முன்னணி அனைத்து இணையத்தளங்களிலும் இலங்கை தேர்தல் வேட்பாளர்களின் பிரசாரங்களே காணக்கூடியதாய் உள்ளது.
தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜெனரல் சரத் பொன்சேகா உள்ளிட்ட அனைவரது பிரசாரங்களும் பார்க்கும் அனைத்து இணையத்தளங்களிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
நான் நினைக்கிறேன், இவ்வாறான ஒர் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்வது இதுவே முதற்தடவை என.
இப்படியெல்லாம் தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வெற்றி பெறாவிட்டால்?
3 comments:
U r correct
உண்மையிலேயே இலங்கையிலிருந்து அந்தத் தளங்களைப் பார்க்கும் போதுதான் தேர்தல் விளம்பரங்கள் தெரியும். வெளிநாட்டிலிருந்து பார்த்தால் அவர்களுக்குரிய வேறு விளம்பரங்கள் தான் தெரியும். அனைத்து விளம்பரங்களும் கூகிள் அட்ஸ்ஸினூடாகவே பிரசுரிக்கப்படுகிறது.
இந்த முறை கடந்த ஜனாதிபதித்தேர்தலில் ஒபாமா பயன்படுத்திய அதே முறையை ஒத்தது! அதே அமெரிக்க நிறுவனம் தான் மஹிந்தவின் பிரசாரத்தைக் கவனிக்கிறது என்று ஒரு வதந்தியும் நிலவுகிறது.
100% வழிமொழிகிறேன்.
ஏன் வவுனியாவிலும் கூட..
Post a Comment