வெள்ளி, 19 மார்ச், 2010

இறக்குவானை மீண்டும் புதுபொலிவுடன்!

இலங்கையின் இரத்தினபுரி மாவட்டத்தில் இறக்குவானை நகரில் அருள்பாளிக்கும் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் புனர்நிர்மானப் பணிகள் நிறைவடைந்து எதிர்வரும் 22.03.2010 ஆம் திகதி கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கூடியுள்ளது.கடந்த வருடம் நடைபெறவருந்த ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் மகோற்சவ நிகழ்வுகள் இலங்கையில் இடம்பெற்றுவந்த பிரச்சினைகள் காரணமாக திடீரென இடைநிறுத்தப்பட்டிருந்தமை யாரும் அறிந்ததே!

இவ்வாறு ஆலயத்தின் உற்சவங்கள் இடைநிறுத்தப்பட்டமை உலகம் முழுவதும் பரப்பரப்பாக பேசப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஆலயத்தின் 12 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் ஆலயத்தின் புனர்நிர்மானப்பணிகள் ஆரம்பமாகின.

அம்பாளின் திருவருளால் ஆலயத்தின் புனர்நிர்மானப் பணிகள் சுமார் 5 மாதக்காலப்பகுதிக்குள் நிறைவு பெற்று தற்போது ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.ஆலயத்தின் புனர்நிர்மாணப் பணிகளுக்காக இந்தியாவிலிருந்து ஸ்தபதிகள் வரழைக்கப்பட்டு பல லட்ச ரூபா செலவின் இரத்தினபுரி மாவட்டத்திலேயே மிக பெரிய ஆலயம் என்ற பெருமையை சேரும் வகையில் ஆலயம் புனர்நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

நான்கு பக்கங்களும் மலையால் சூழப்பட்டு ஆலயத்திலிருந்து இடது பக்கமாக உள்ள மலையில் நீர் வீழ்ச்சி காணப்படும் மிக அழகான ஆலயம் என இலங்கையில் இந்த ஆலயத்தையே கூறமுடியும்.

பல வியப்பான சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்றுவரும் இந்த ஆலயத்தின் பெருமையை அங்குள்ள நாங்கள் கூறுவதை விட பக்தர்கள் என ரீதியில் நீங்களே நேரடியாக பார்த்தால் அதன் பெருமையை உணர்ந்துக் கொள்ள முடியும்.அத்துடன், பல வருடங்களாக எமது ஆலயத்திற்கு இணையத்தளமொன்றை அமைக்க வேண்டும் என அவா அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் இருந்தது.

அது இவ்வருடம் நிறைவடைந்துள்ளது.

இணையத்தள முகவரி:-

http://www.rakwanasrimutthumariamman.com/

0 கருத்துகள்: