வியாழன், 4 மார்ச், 2010

சச்சினுக்கு பாரத ரத்னா விருது!


இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கார் “பாரத ரத்னா” விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.

இதற்கான தீர்மானம் இந்திய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த தென்ஆபிரிக்க அணிக்கும், இந்திய அணிக்கும் இடையில் கடந்த மாதம் 24ஆம் திகதி நடைபெற்ற ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கார் இரட்டை சதங்களை பெற்றார்.ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதற்தடவையான இரட்டை சதங்களை பெற்ற வீரர் என்ற பெருமையை சச்சின் டெண்டுல்கார் அன்றைய தினம் தனதாக்கிக் கொண்டிருந்தார்.

இதற்காகவே இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்காருக்கு “பாரத ரத்னா” விருது வழங்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: