Thursday, 30 September 2010
Sunday, 26 September 2010
Tuesday, 14 September 2010
Tuesday, 17 August 2010
பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவுக் கொண்ட யுத்தம் தற்போது விளையாட்டில்!
கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற மோதல்கள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது நாடு வழமை நிலைக்கு திரும்புகிறது.
இந்நிலையில் இலங்கையின் மீதான உலக நாடுகளின் கவனம் அதிகரித்துள்ளமை யாரும் அறிந்ததே.
மோதல்கள் இடம்பெற்ற பலர் பல்வேறு வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற நிலையில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தை விளையாட்டு யுத்தமாக மாற்றி விட்டார்கள் தற்போது.
பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவுக் கொண்ட இந்த யுத்தம் தற்போது விளையாட்டாகி விட்டது என்பதை எண்ணினால், மனிதனின் மனிதாபிமானம் இது தானா.
மனிதனின் உயிரிற்கான பெறுமதி விளையாட்டில் முடிந்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற யுத்தத்தை தற்போது கணினியின் வீடியோ விளையாட்டாக மாற்றி விட்டனர்.
Posted by R.ARUN PRASADH at 09:30:00 2 comments
Tuesday, 3 August 2010
அச்சுறுத்தலுடன் முதலில் உண்மையை தர நாம் தயார்………
இலங்கையில் 30 வருடங்களாக இடம்பெற்றுவந்த யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் ஊடகங்களின் மீதான யுத்தம் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
உலக நாடுகளை எடுத்துக் கொண்டால் உள்நாட்டு யுத்தத்தை நிறைவு செய்த நாடு என்ற பெருமையை இலங்கை பெற்றுள்ளதாக தெரிவிக்கின்ற போதிலும், அது உண்மைக்கு புறம்பான கருத்து என்பதே உண்மை.
ஒரு நாட்டை எடுத்துக் கொண்டால் நாடாளுமன்றம், ஜனாதிபதி, நீதிமன்றம், ஊடகம் என்ற அடிப்படையிலேயே நாடு இயங்க வேண்டும்.
ஆனால் இலங்கையில் ஜனாதிபதி, நாடாளுமன்றம், நீதிமன்றம், ஊடகம் என்ற அடிப்படையிலேயே நாடு இயங்கி வருகிறது.
இதில் 4ஆவது இடத்தை பிடித்துள்ள ஊடகத்தின் சுதந்திரம் முழுமையாக பறிக்கப்பட்டுள்ளமையானது உலக நாடுகளே அறிந்த உண்மை.
ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்றமை, ஊடகவியலாளர்கள் கடத்தப்படுகின்றமை என ஆரம்பமான ஊடகங்களுக்கு எதிரான வன்முறைகள் தற்போது ஊடகத்தை முழுமையாக அழிக்கும் செயற்பாட்டில் வந்து நிற்கிறது.
நான் கடமையாற்றும் வெற்றி, சியத்த மற்றும் ரியல் ஆகிய ஊடக வலையமைப்புக்களின் செய்திப் பிரிவு கடந்த 30ஆம் திகதி இனந்தெரியாத 12 பேரினால் தாக்கப்பட்டு முழுமையாக தீவைக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 30ஆம் திகதி முதல் எமக்கு செய்தி சேகரித்து வெளியிடும் நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் நடுநிலையாக செய்தியை வெளியிடும் பல ஊடக நிறுவனங்கள் இருக்கின்ற போதிலும், எமது செய்தியானது யாருக்கும் அச்சுறுத்தலை எடுத்தும் வகையில் இருக்கவில்லை. முழுமையாகவே நடுநிலை செய்தியாகவே அமைந்திருந்தது.
இவ்வாறு செய்தியை வெளியிடும் எமக்கே அச்சுறுத்தல் என்கிறது போது நாட்டின் உண்மையை வழங்கினால்?
இதேவேளை, என்னுடன் கடமையாற்றும் சகல ஊடகவியலாளர்களான ரஜனிகாந்தன் மற்றும் லெனின்ராஜ் ஆகியோர் தாக்கப்பட்டு தொடர்ந்தும் தமது வீடுகளில் இருந்தவாறே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள அதேவேளை, அவர்களுடன் கடமையாற்றும் ஏனைய நால்வருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
எவ்வாறான அச்சுறுத்தல்கள் வந்தாலும் எமது ஊடக நிறுவனத்தில் வெளியிடப்படும் செய்திகளில் நாம் ஒருபோதும் பின் நிற்பதில்லை.
உண்மையான செய்திகளை உடனடியாக முதலில் தர எப்போதும் தயாராக இருப்போம்.
பாதிக்கப்பட்டுள்ள எமக்கு ஒத்துழைப்புக்களையும், அருதல்களையும் வழங்கி வரும் நேயர்கள், ஊடகவியலாளர்கள், எமது நண்பர்கள் மற்றும் ஏனையோருக்கு நிறுவனத்தின் சார்பில் நன்றி…………….
எமது நேயர்களுக்காக எமது உண்மையான ஊடக சேவை விரைவில் உங்களின் முழுமையான ஒத்துழைப்புடன் தொடரும்…
Posted by R.ARUN PRASADH at 20:46:00 0 comments
Monday, 26 July 2010
இலங்கையுடன் முதல்வன்...........
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிய முதல்வன் திரைப்படத்தை குடும்பத்தினருடன் சேர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
பல தடவைகள் இத்திரைப்படத்தை நான் பார்த்திருந்தும், இம்முறை வேறு ஓர் கோணத்திலேயே பார்த்தேன்.
இந்த படத்திற்கும் இலங்கைக்கும் இடையில் பல்வேறு தொடர்புகள் உள்ளமையை நான் இம்முறை தான் அறிவிந்து கொண்டேன், அது மாத்திரமன்றி இப்படத்தை முழுமையாக இலங்கையுடனேயே ஒப்பிட்டு பார்த்தேன்.
ரகுவரனுக்கும், அர்ஜுனுக்கும் இடையில் நடைபெறும் செவ்வி காணும் சம்பவம்.
அர்ஜுனினால் ரகுவரனிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கும் தற்போது இலங்கையின் சூழ்நிலைக்கும் இடையில் 100 சதவீத ஒற்றுமை காணப்படுகிறது.
உலக வங்கி, வரி, மனித உரிமைகள் என அனைத்து விடயங்களும் கேள்விகளாக இதன்போது அர்ஜுனினால் கேட்கப்படுகிறது.
அத்துடன், தேர்தல் விஞ்ஞாபனத்தையும் எமது நாட்டுடன் ஒப்பிட்டு பார்க்கக்கூடியதாய் உள்ளது.
அது மாத்திரமன்றி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சு பதவியை வகிக்கும் ஒருவரை சார்ந்த கதாப்பாத்திரமொன்றும் முதல்வன் திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் எதிர்காலத்தை ஏற்கனவே இத்திரைப்படத்தில் இயக்குநர் சங்கர் தெளிவுப்படுத்தியுள்ளமை வியக்க வைக்கும் விடயம்........
மேலும் இலங்கை தொடர்பான பல விடயங்கள் அத்திரைப்படத்தில் வெளிகொணரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயம்........... படத்தை மீண்டும் பார்க்கவும்....................
Posted by R.ARUN PRASADH at 18:00:00 1 comments
Labels: arjun, Arun, muthalvan, muthalvan - sri lanka, rakuwaran, Ranjan Arunprasadh, Raprasadh, sri lanka
Sunday, 11 July 2010
Tuesday, 6 July 2010
(FACEBOOK) முகப்புத்தக பாவனையாளர்களுக்கு மாத்திரம்.
முகப்புத்தகத்தில் அரட்டையில் ஈடுபடும் போது உங்கள் நண்பர்களுடன் வார்த்தைகளை தவிர்த்து சிறு சிறு அடையாளங்களின் மூலம் வித்தியாசமாக உங்களின் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளுங்கள்.
Smiley | Name | Shortcut | |
---|---|---|---|
![]() | smile | :-) :) :] =) | |
![]() | frown | :-( :( :[ =( | |
![]() | gasp | :-O :O :-o :o | |
![]() | grin | :-D :D =D | |
![]() | tongue | :-P :P :-p :p =P | |
![]() | wink | ;-) ;) | |
![]() | curly lips | :3 | |
![]() | kiss | :-* :* | |
![]() | grumpy | >:( >:-( | |
![]() | glasses | 8-) 8) B-) B) | |
![]() | sunglasses | 8-| 8| B-| B| | |
![]() | upset | >:O >:-O >:o >:-o | |
![]() | confused | o.O O.o | |
![]() | shark | (^^^) | |
![]() | pacman | :v | |
![]() | squint | -_- | |
![]() | angel | O:) O:-) | |
![]() | devil | 3:) 3:-) | |
![]() | unsure | :/ :-/ :\ :-\ | |
![]() | cry | :'( | |
![]() | Chris Putnam | :putnam: | |
![]() | robot | :|] | |
![]() | heart | <3 | |
![]() | kiki | ^_^ | |
![]() | 42 | :42: | |
![]() | penguin | <(“) | |
|
| ||
|
Posted by R.ARUN PRASADH at 07:30:00 1 comments