ஞாயிறு, 1 மார்ச், 2009

இந்திய கிரிக்கெட் வீரரின் சிலை லண்டனில்!


லண்டன் அருங்காட்சியகத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு மெழுகுச் சிலை நிறுவப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள 'மேடம் டுசாட்ஸ்' என்ற பிரபலமான மெழுகுச் சிலை அருங்காட்சியகம் ஏராளமான பயணிகளைக் கவரும் முக்கிய சுற்றுலா மையமாக விளங்கி வருகிறது.

இதில் உலகின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற நட்சத்திரங்களுக்கு மெழுகுச் சிலை வைத்து கௌரவிக்கப்படுகிறது.

இங்கு இந்தியாவைச் சேர்ந்த பொலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், சல்மான்கான் மற்றும் முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, பி.வி. நரசிம்மராவ் ஆகியோருக்கு ஏற்கனவே மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், இந்தியாவைச் சேர்ந்த விளையாட்டு வீரரின் சிலையை அங்கு வைத்திருக்கவில்லை.

ஏனினும், இன்று அந்த புகழ்பெற்ற அருங்காட்சியகத்தில் இந்திய கிரிக்கெட் வீரரின் சிலை வைக்கப்பட்டு விட்டது.

இது சச்சின் டென்டுல்கர் மூலம் நிவர்த்தியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ள டென்டுல்கருக்கு மெழுகுச் சிலை நிறுவி கௌரவப்படுத்த உள்ளோம் என அருங்காட்சியகத்தின் முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

இதற்காக கடந்த வாரம் டென்டுல்கர் லண்டன் சென்றிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்போது அவரது உருவச் சிலையை தயாரிக்க ஏதுவாக அவரை அளவெடுக்கும் பணி முழுமையாக நடந்தது. தனது டெஸ்ட் கிரிக்கெட் உடையை நன்கொடையாக அளித்தார்.

டென்டுல்கரின் மெழுகுச் சிலை உருவாக்கும் பணி மேடம் டுசாட்டில் உள்ள சிற்பக் கூடத்தில் நடந்து வருகிறது.

இதற்காக ரூ. 3 கோடி செலவழிக்கப்படுகிறது.

டென்டுல்கரின் மெழுகுச் சிலை ஏப்ரல் மாதத்தில் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கின்றனர் அருங்காட்சியகத்தின் முகாமைத்துவத்தினர்.

0 கருத்துகள்: