Wednesday 11 March 2009

உலக கோடிஸ்வரர்களில் இந்தியர்கள் 24 பேர்!


உலக கோடிஸ்வரர்கள் தரவரிசையை போர்ப்ஸ் இதழ் புதிதாக வெளியிட்டுள்ளது.

இந்த உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 24 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளதுடன், இவர்களில் 4 முதல் 10 இடங்களுக்குள் இந்தியர்கள் இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் பட்டியலில் 13 ஆண்டுகளாக தொடர்ந்து முதல் இடத்தை வகித்து வந்த உலகின் முன்னணி கணனி நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் தலைவர் பில் கேட்ஸ் பின்னுக்குத் தள்ளப்பட்டு அவருடைய இடத்தை வாரன் பப்பே பிடித்துள்ளார்.

லண்டன் வாழ் இந்தியரான உலகின் மிகப்பெரும் எஃகு உற்பத்தி நிறுவனமான ஆர்சிலரின் தலைவரான லட்சுமி மிட்டல் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளதுடன், அவரது சொத்து மதிப்பு 45 பில்லியர் டொலராகும்.

அவருக்கு அடுத்தபடியாக ஆசியாவில் வசிக்கும் முதல் பணக்காரர் என்ற பெருமையுடன் உள்ளார் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி. இவரது சொத்து மதிப்பு 43 பில்லியன் டொலராகும்.

அடுத்ததாக 6வது இடத்தில் முகேஷின் சகோதரரான அனில் அம்பானி. இவரது சொத்து மதிப்பு 42 பில்லியன் டொலர் என்பதுடன், ரியல் எஸ்டேட் நிறுவனமான டி.எல்.எப்பின் தலைவர் கே.பி.சிங் 30 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளார்.

கடந்த ஆண்டு 52 பில்லியன் டொலருக்கு சொந்தக்காரராக இருந்த வாரன் பப்பே அவரது நிறுவனத்தின் பங்குகள் விலை தொடர்ந்து அதிகரித்ததைத் தொடர்ந்து அவரது சொத்து மதிப்பு மேலும் 10 பில்லியன் டொலர் உயர்ந்து தற்போது 62 பில்லியன் டொலராக உள்ளது. இதன் மூலம் அவர் உலகின் முதல் பணக்காரராக உயர்ந்துள்ளார் என்று போர்ப்ஸ் கூறியுள்ளது.

பில் கேட்சின் சொத்து மதிப்பு 58 டொலராக உள்ளது. அவர் மூன்றாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments: