வெள்ளி, 31 அக்டோபர், 2008

மௌனம் காக்கும் ஊர்.....


இந்தியா – தமிழ் நாட்டில் உள்ள குறிச்சிகுளம் எனும் சிறிய கிராமம். இந்த கிராமத்தில் உள்ள மக்களின் பெருந் தொகையானோர் முஸ்லிம்கள்.

இந்த கிராமத்தம் மௌனத்தின் உருவம்.

என்ன மௌனம்? புரியவில்லையா? இங்கு உள்ளவர்களில் 100க்கும் 40 சதவீதமானோர் ஊமைகள். அது மட்டுமா அதிலும் சிலருக்கு காது கேட்காது?

என்ன கொடுமை!

இந்த கிராமத்தில் நிச்சயமாக குடும்பத்தில் ஒருவராவது ஊமை என்பது தான் கடவுள் கொடுத்த சாபம்.

இதற்கான காரணம் என்ன?, சாபமா? அல்லது நோயா? பார்ப்போம்.....

பல வருடங்களுக்கு முன்னர் இந்த ஊரில் உள்ள 5 குடும்பங்கள் தாங்க இதற்கு காரணம்...

இந்த குடும்பங்களும் ஐந்தும் அந்த ஊரில் மிக பெரிய பணக்காரர்கள். இந்த சொத்து வெளியில் உள்ளவர்களுக்கு சென்று விட கூடாதென்ற பேராசையால் உறவு முறைக்குள் திருமணங்களை செய்து கொண்டனர் அந்த 5 குடும்பங்களை சேர்ந்தவர்கள்...

அந்த குடும்பத்தில் உள்ளவர்களில் சிலர் ஊமைகள்... இது தான் பரம்பரையாக பரவ தொடங்கியது.

இப்போதும், உறவு முறைக்குள் தான் திருமணம் செய்து கொள்கிறார்கள்..

இதற்கு கூட காரணம் இருக்கு.....

வெளியில் உள்ள எவருமே இவர்களை திருமணம் செய்ய முன் வருவதில்லை..

பாய்ந்து ஓடி திரியும் குழந்தைகள் முதல் தள்ளாடும் கிழவன் வரை பலர் ஊமைகள் அல்லது காது கேளாதவர்கள்.......

இது தொடர விடாது தடுப்பது எப்படி? அவர்களால் தான் அது முடியும்...... எப்படி?

உறவு முறைகளை திருமணம் செய்வதை தவிர்த்து வெளியில் உள்ளவர்களை திருமணம் செய்தால் நிச்சயம் அடுத்த தலைமுறை ஊமைகள் அல்ல....

அடுத்த தலைமுறையில், இந்த ஊமைகள் நிச்சயம் மௌனம் காக்காது. வெடிக்குண்டுகளின் சத்தங்களை போல பேசும்......
....மூலம் விஜய் T.V....