தயாரிக்கப்படும் அனைத்து மொழிகளிலுமான திரைப்படங்களுக்கு விருது வழங்க நான் தீர்மானித்தேன். எதற்கு விருது வழங்கலாம் என யோசித்த போது தான் ஒரு தீர்மானம் எனக்கு எடுக்க முடிந்தது.
குறிப்பிட்ட காலத்தில் கூடுதலாக எந்த மொழியில் படங்கள் தயாரிக்கப்படுகின்றது என்பதை அவதானித்து அதற்கு விருது கொடுக்கலாம் என்பது தான் அந்த தீர்மானம்.
எப்படி இது சூப்பர் தானே! ஓ.கே விருது வழங்குவோமா?
நான் வழங்கும் விருது முதலாவது இடத்திற்கு மாத்திரமே! யாரும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை கேட்க வேண்டாம்! காரணம் வழங்க முடியாது.
முதலாவது இடத்திற்கு வந்து திரைப்படங்கள் மிகவும் தூரத்தில் அதாவது முன்னிலையில் உள்ளன. அதனால் தான் முதலாவதற்கு மாத்திரம் விருது!
எந்த மொழியில் உள்ள திரைப்படங்கள் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் அதிகளவில் தயாரிக்கப்படுகின்றன.........
வேறு எது தமிழ் மொழி திரைப்படங்கள் தான்!
என்ன இது! நாளொன்றுக்கு சுமார் 3 அல்லது 4 திரைப்படங்கள் வெளியிடப்பட்டுகின்றன.
என்ன படம் எப்போது வந்தது என்பது இப்போ எனக்கு சந்தேகமாக தான் இருக்கு!
அவ்வளவு படங்கள்! கடந்த சில காலமாக வெளிவரும் படங்களை பார்க்க நேரமும் இல்லை, பார்த்த ஞாபகமும் இல்லை.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் திரைப்பட பாடல்கள் எந்த படத்திலுள்ள பாடல்கள் என்பது, எப்போதும் சந்தேகம் தான் எனக்கு!
எதற்கு இப்படி திரைப்படங்கள் தயாரிக்கின்றனர். ஒரு கருப்பொருள் கூட இல்லாமல் படங்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணமே உள்ளன.
முன்பு வந்த திரைப்படங்களை எடுத்து பார்த்தால் குறைந்தது 100 நாட்களையும் தாண்டி திரையரங்குகளில் ஓடினால் தான் அந்த திரைப்படம் வெற்றி திரைப்படமாக கருதப்படும்.
உதாரணமாக ரோஜா திரைப்படம் 300 நாட்களை கடந்த வெற்றியடைந்தது. இப்படி படங்களை குறிப்பிட்டு காட்ட முடியும்.
ஆனால் இன்று இந்திய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் திரைப்பட விளம்பரங்களில் '10ஆவது நாள் வெற்றிநடை போடுகிறது' என ஒளிபரப்பாகிறது.
10ஆவது நாள் வெற்றி நடையா?
எதற்கு இப்படியான விளம்பரங்கள் வெற்றி நடை என்பதன் கருத்தையே மாற்றிவிட்டார்கள் தமிழ் திரையுலகத்தினர்.
இப்படியான பிரசார நடவடிக்கைகள் இனியும் வேண்டாம்!
வெற்றி நடை என்பதற்கான கருத்தை மாற்றியமைத்தது இந்திய தொலைக்காட்சிகளே!
Monday, 27 July 2009
வெற்றிப் பட விருது தமிழுக்கு!
Posted by R.ARUN PRASADH at 19:36:00 0 comments
Sunday, 26 July 2009
இந்த யுத்தத்தில் யாருக்கு வெற்றி!
தமிழ் :- தோன்றிய காலம் இன்று வரை தெரியாது.
ஆங்கிலம்:- இது பல மொழிகளினால் ஒன்றிணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மொழி.
இப்படி இருக்கும் நிலையில் தற்போது ஆங்கிலேயர்கள் தமிழர்களை தமது கைவசம் கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.
ஏன்? பதில் தெரியுமா?
மிக பழமை வாய்ந்த மொழிகளில் முக்கிய இடத்தில் தமிழ் மொழி உள்ளது. ஆனால் ஆங்கிலம் சற்று பின்தங்கியுள்ளமை யாரும் அறிந்தமையே.
இதனால் பல முறைகளிலும் தமிழ் மொழியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஆங்கிலயர்கள் முயற்சிக்கின்றனர்.
இதில் ஆங்கிலயர்களது முதலாவது நடவடிக்கையாக வெளிநாடுகளிலுள்ள தமிழர்களுக்கு பிரஜாவுரிமை வழங்கி அவர்களை தமது நாட்டிற்குள்ளேயே வைத்து கொள்கின்றனர்.
அவ்வாறு பிரஜாவுரிமை கிடைத்த பின்னர் குறித்த தமிழர்கள் தமது சொந்த நாட்டை மறந்து அங்கேயே வாழ தொடங்கி விடுகின்றனர்.
பின்னர் அவர்களது பிள்ளைகள் தமது கல்வி நடவடிக்கைகளை அந்த நாட்டிலேயே மேற்கொள்கின்றனர்.
அந்த பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடையும் போது, அவன் தமிழ் மொழியை முழுமையாக மறந்து ஆங்கில மொழியை தன்மொழி போல பேச தொடங்கி விடுகிறான்.
உருவாகும் அடுத்த தமிழ் சந்ததி ஆங்கில சந்ததியாக மாறிவிடுகிறது.
இதில் கூடுதலாக இலங்கை தமிழர்களே உள்ளடங்குகின்றனர்.
பழமை வாய்ந்த தமிழ் மொழியை முழுமையாக அழித்து விட தயவு செய்து யாரும் இடமளிக்க வேண்டாம்.
தமிழ் மொழியை அழிக்க சூழ்ச்சிகளை செய்கின்றனர் பலர். அப்போதே புரிந்து கொள்ள முடிகிறது தானே தமிழ் மொழியின் பலத்தை.
ஒரு யுத்தம் முடிடைந்துள்ள நிலையில் தமிழன் அடுத்த யுத்ததில் ஈடுபட்டுள்ளான். இதில் யாருக்கு வெற்றி கிடைக்கும்.
விடை காலத்தின் கையில்!
Posted by R.ARUN PRASADH at 06:57:00 4 comments
Sunday, 19 July 2009
Thursday, 16 July 2009
2012ல் என்ன? இம்மாதம் 22ல் என்ன?
உலகில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அழிவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. இந்த அழிவுகள் எப்போது முடிவடையும். யாருக்கு தெரியும்.
ஆனால் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. அது தான் மாயன் கலண்டர்.
இது ஆதிவாசிகளினால் மத்திய அமெரிக்காவில் எழுதப்பட்ட ஒரு கலண்டர். இவ்வளவு காலமும் மாயன் கலண்டரிலுள்ள விதத்திலே உலகம் இயங்கி வந்துள்ளதாக தகவல்கள் தெரிக்கின்றன.
எனினும், இந்த கலண்டரின் திகதி முடிவடையவுள்ளது. 2012 டிசம்பர் 21ஆம் திகதிக்கு பின்னர் இந்த கலண்டர் எழுதப்படவில்லை. ஏன்?
அத்துடன், சில ஜோதிடர்களினால் அதே திகதி தொடர்பாக கருத்துக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
2012ஆம் ஆண்டின் 3ஆவது கிழமையே உலகின் இறுதி திகதி என அவர்கள் கூறுகின்றனர்.
அன்றைய தினம் உலகில் மிக பெரிய அழிவொன்று காத்திருப்பதாகவும் அவர்கள் தமது கருத்துக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.
இதேவேளை, 2012ஆம் ஆண்டுடன் ஒரு யுகம் முடிவடைகின்றது. அவ்வாறு ஒரு யுகம் முடிவடைகின்ற போது நிச்சயமாக மிக பெரிய அழிவொன்று ஏற்படும் என கூறப்படுகிறது.
இதற்கு ஒரு உதாரணம். 1912ஆம் ஆண்டு உலகில் அனைவரும் இன்றும் பேசக்கூடிய விடயம். மிக பெரிய கப்பல் விபத்து. டைட்டேனிக் கப்பல் விபத்துக்குள்ளாகிய ஆண்டு தான். அதில் 1517 பேர் பலியாகியிருந்தனர். அன்றும் ஒரு யுகம் முடியடைந்தது.
ஒவ்வொரு இதேபோன்ற ஆண்டுகளின் தகவல்களையும் எடுத்து பாரக்கும் போது அதை அனைவரும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
அவ்வாறு யுகம் முடிவடையும் வருடத்தில் 3 கிரகணங்கள் வரும். அந்த வருடம் ஆபத்துக்குரிய வருடம் என பல நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இவ்வாறே குமரிக் கண்டம் அழிவுண்ட வருடமும், துவாரகை கடலில் மூழ்குண்ட வருடமும் இதேபோன்றதொரு 3 கிரகணங்கள் ஏற்பட்ட வருடத்தில் என சான்றுகள் தெரிக்கின்றன.
உதாரணமாக 2004ஆம் ஆண்டு 3 கிரகணங்கள் ஏற்பட்டன. அவ்வருடம் ஏற்பட்ட அழிவு பற்றி கூற தேவையில்லை. அனைவரும் அறிந்ததே. சுனாமி - 9.2
அத்துடன், 2000ஆம் ஆண்டில் 4 சூரிய கிரகணங்களும், 3 சந்திர கிரகணங்களும் ஏற்பட்டுள்ளன. அந்த ஆண்டில் உலகம் முழுவதும் மக்கள் எண்ணற்ற இன்னல்களை அனுபவித்துள்ளனர். குறிப்பாக 22-8-2000 அன்று ரஷ்ய நீர்மூழ்கி கப்பல் நடுக்கடலில் 118 பயணிகளுடன் மூழ்கியது. 24ஆம் திகதி பக்ரைனில் ஏற்பட்ட விமான விபத்தில் 143 பேர் உயிரிழந்திருந்தனர். அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி மும்பை, கோவாவில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு எண்ணற்றோர் உயிரிழந்துள்ளனர்.
அவற்றை நாம் பொய் என்று கூறி மறுக்க முடியாது. காரணம் குமரிக் கண்டம் கடலுக்கு அடியில் இன்றும் காணப்படுகிறதுடன், அதேபோலவே தான் துவாரகையும் கடலுக்கு அடியில் அப்படியே காணப்படுவதாக கூறப்படுகிறது.
சில வருடங்களுக்கு முன்னர் நீர்மூழ்கிக் கப்பலின் மூலம் கடலுக்கடியில் சிலர் பயணித்துக் கொண்டிருந்த போது துவாரகையை கண்டுள்ளனர். அங்கு அரண்மனைகள், அதன் கதவுகள் உள்ளிட்ட மேலும் பல கட்டடங்கள் நீரில் மூழ்கியுள்ளதை கண்டுள்ளனர்.
அத்துடன், இவ்வருடமும் 3 கிரகணங்கள். என்ன அழிவு? 22.07.2009 அன்று சுனாமி ஏற்பட கூடிய சாத்தியகூறுகள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் ஏற்படவுள்ள சூரிய கிரகணத்தினால் புவியில் ஈர்ப்பு சக்தி ஏற்படும். அந்த சூரிய கிரகணத்தினால் ஏற்படக்கூடிய ஈர்ப்பினால் புவியின் கீழுள்ள தட்டுக்கள் அசையத் தொடங்கி விடும். அவ்வாறு ஏற்படும் அசைவினால் சுனாமி ஏற்படும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதை நாம் பொய் என்று கூற முடியாது. காரணம் கடந்த காலங்களில் ஏற்பட்ட விமான விபத்துக்கள். அத்துடன் கடந்த காலங்களில் ஏற்பட்டுவரும் நிலநடுக்கங்கள் என்பனவற்றை பார்க்கும் போது இது உண்மை என்றே கூறமுடியும்.
ஏன் விமானங்கள் இத்தனை தொடர்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளன.
சுமார் 3 மாத காலப் பகுதிக்குள் சுமார் 10ற்கும் மேற்பட்ட விமான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அதில் 710 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இந்த விமான விபத்துக்களுக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், நேற்றைய தினம் ஈராக்கில் இடம்பெற்ற விமான விபத்தில் கறுப்பு பெட்டி சேதமடைந்திருந்தது. எப்போதும் விமானத்தின் கறுப்பு பெட்டி சேதமடைய வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இலங்கையில் கடந்த இரு தினங்களாக காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று மற்றும் இன்று தொடர்ந்தும் பலத்த காற்று வீசி வருகிறது. இதை பார்க்கும் போது ஓரளவு நம்பக்கூடியதாய் இருக்கின்றது.
எதிர்வரும் 22ஆம் திகதி?
வேண்டுக்கோள்:- இது தொடர்பான தகவல்கள் இருப்பின் தயவு செய்து எனக்கு அறியத்தரவும்.
Posted by R.ARUN PRASADH at 08:08:00 1 comments
Tuesday, 7 July 2009
பொப் இசை பாடகர் மைக்கல் ஜாக்ஸனின் இறுதி தினம்!
பொப் இசை பாடகர் மைக்கல் ஜாக்ஸனின் இறுதி சடங்குகள் இன்றைய தினம் லோஸ்ஏன்ஜல் நகரில் இடம்பெறவுள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த மாதம் 25ஆம் திகதி திடீரென உயிரிழந்த பொப் இசை பாடகர் மைக்கல் ஜாக்ஸனின் மரணம் தொடர்பில் சந்தேகங்கள் எழுந்து வருகின்ற நிலையில் அவரது பூதவுடல் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
சுமார் 25 லட்சம் ரூபா பெறுமதியான 14 கரட் தங்க முலாம் பூசப்பட்டு விசேட வெண்கலத்தால் தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியில் வைத்து அவரது பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
1958ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 29ஆம் திகதி பிறந்த மைக்கல் ஜக்ஸன், தனது முதலாவது இசை பயணத்தை தொடர்ந்தார்.
பின்னர் 1980 களில் பெப் இசை பாடகர் என்ற புகழை பெற்றதோடு, 1982ஆம் ஆண்டு வெளிவந்த அவரது த்ரிலர் என்ற இசைத்தொகுப்பு உலகளாவிய வரவேற்பை பெற்றதுடன், அதிகளவு வாசூலை பெற்றுக் கொடுத்துள்ளது.
மைக்கல் ஜக்ஸன் பெப் இசைத்துறையில் மட்டும் அல்லாது பாடல் ஆசிரியர், நடிகர், ஏழுத்தாளர், இசையமைப்பாளர், வணிகர் உட்பட மேலும் பல துறைகளில் சிறந்து விளங்கியுள்ளார்.
Posted by R.ARUN PRASADH at 06:35:00 0 comments
Saturday, 4 July 2009
எது நடக்கின்றதோ, அது நன்மைக்காகவே!
விரோதி வருடமொன்று கூறியபோது யாரும் அதை பொருட்படுத்தவில்லை.
எனினும், இவ்வாண்டை நிச்சயமாக விரோதி வருடமாக தான் கணக்கெடுக்க வேண்டும். காரணம் அனைவரும் தெரிந்ததே. கடந்த காலங்களில் ஏற்பட்ட விபத்துக்கள்.
ஒன்றல்ல, இரண்டல்ல பல விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இவ்வருடம் அதிகமாக இருக்கலாமென பல இணையத்தளங்கள் தெரிவிக்கின்றன.
இது சிலவேளைகளின் உண்மையாக கூட இருக்க வாய்ப்புள்ளதல்லவா?
பார்ப்போம் எதற்கெதற்கோ கணக்கெடுப்பு எடுப்பவர்கள் நிச்சயம் இதற்கும் கணக்கெடுப்பு எடுபார்கள்.
அத்துடன், விபத்துக்கள் என்று கூறும் போது விமான விபத்துக்களே அதிகளவில் இடம்பெற்றுள்ளது.
ஏயார் பிரான்ஸ், யேமன் ஏயார் லைன்ஸ் உள்ளிட்ட மேலும் பல விமான விபத்துக்கள் இவ்வருடத்தில் இடம்பெற்றுள்ளன.
எனது கணக்கெடுப்பின் படி இவ்வருடம் 10ற்கும் மேற்பட்ட விமான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
தற்போது நாளொன்றுக்கு ஒரு விமானம் விபத்துக்குள்ளாகும் காலமான மாறிவிட்டது.
எத்தனை உயிர்களை இந்த விமான விபத்துக்கள் காவு கொண்டு விட்டன. இது காலத்தின் மாற்றம் அல்லவா?
இந்த காலப்பகுதியில் எமது உயிரை பாதுகாத்துக் கொள்ள முடியாது. காரணம் விபத்துக்கள் மட்டுமின்றி நோய்களும் எம்மை வாட்டுகின்றன.
டெங்கு, பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட மேலும் பல நோய்களினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், உயிரிழப்பர்களின் எண்ணிக்கையும் அதேபோன்று அதிகரித்து வருகிறது.
பார்ப்போம் அனைத்தும் இறைவனின் கையில். எது நடக்கின்றதோ, அது நன்மைக்காகவே!
Posted by R.ARUN PRASADH at 17:31:00 1 comments