புதன், 13 மே, 2009

நடிகர் திலகம் பதவி சூப்பர்!


உலகில் மிக சிறந்த நடிகர் என்ற பட்டத்தை வென்ற தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு என் வாழ்த்துக்கள். அவரை வாழ்த்துவதை விட சுப்பர் ஸ்டார் ரஜனி காந்தை வாழ்த்த வேண்டும்.

தனது சுப்பர் ஸ்டார் பதவியையே முதல்வருக்கு வழங்குவதாக அறிவித்துள்ளராமே. ரஜனியின் இந்த அறிவித்தலை தொடர்ந்து அனைத்து சினிமா உலகமே தமது பட்டங்களை கருணாநிதிக்கு வழங்க தீர்மானித்துள்ளது.

நேற்றைய தினம் புலோக் ஒன்றில், நான் இப்படியான ஒரு செய்தியை வாசித்து நாள் முழுவதும் ஒரு சிரிப்பு தான். வீட்டிலும் சொல்லி சிரித்து கொண்டே இருந்தேன்.

ஏன் கருணாநிதி இப்படி ஒரு நாடகத்தை இப்போது நடிக்கின்றார். அரசியலா? உண்மையாகவா?

நிச்சயமாக இது உண்மையில்லை என தான் கூற முடியும். அரசியலில் ஒரு பக்கம் தான் இது.

சரியாக தேர்தல் நெருங்கிய போது தனக்கு சுகமில்லை என சொல்லி வைத்தியசாலையில் தானே சென்று சேர்ந்து கொண்டுள்ளார். அதை தொடர்ந்து அவரை பார்க்க இந்திய பிரதமர் உள்ளிட்ட மேலும் பல முக்கியஸ்தர்கள் தமிழகத்திற்கு வந்துள்ளனர்.

இது தான் அரசியலின் ஒரு விளையாட்டு, பிரதமரின் தமிழக விஜயத்தின் பின்னர் தனக்கு வெற்றி கிடைக்கும் என்ற ஒரு அவா!

தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கின்றாராம். ஏ.சியில். சுப்பர் நடிகர். இப்படியெல்லாம் யாரை ஏமாற்றுகின்றார். தன்னை தானே ஏமாற்றி கொள்கின்றார்.

இந்த வயதிலும் தனக்கு அரசியல் தேவையா? நடக்கவே முடியவில்லை. நடிக்கின்றார். இது பதவியின் மீதுள்ள மோகம். யாரை விட்டது பதவியின் மீதுள்ள ஆசை. இனிவரும் காலங்களில் நிச்சயமாக ஈழத்தை பற்றிய பேச்சையே முதல்வரின் வாயிலிருந்து கேட்க முடியுமா? பார்ப்போம்.

ஈழத்தின் விடிவு தமிழகத்தின் கையில் தான் என்று கூறுகின்றனர். முதலில் தமிழகத்தின் விடிவு யார் கையில். இன்று முடிவு. (தேர்தலில் மூலம்)

தேர்தலில் கிடைக்கும் முடிவின் பின்னர் தான் யார்? எப்படி? எதற்கு? ஏன்? என பார்க்க முடியும்.

பொறுத்திருப்போம். முதல்வரின் நடிப்பு நீடிக்குமா? ரஜனி தனது சுப்பர் ஸ்டார் பதவியை வழங்கி விடுவாரா?

சுப்பர் ஸ்டார் பதவியை விட நடிகர் திலகம் பதவி முதல்வருக்கு சூப்பர்!

0 கருத்துகள்: