இம்மாதம் 26ஆம் திகதி அதாவது நாளைய தினம் வானில் சிறிய மோதிர வடிவிலான சூரிய கிரகணமொன்று தென்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூரிய கிரகணம் இந்தியா, அந்தமான்தீவு, நிக்கோபர் தீவுகள், லட்சத்தீவுகள் போன்ற பகுதிகளில்; பார்க்க முடியுமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு அத்திலாந்திக் கடலில் நமீபியாவுக்கு அருகே இலங்கை நேரப்படி 10.27 மணிக்கு இந்தச் சூரிய கிரகணம் ஆரம்பித்து தென்படுமெனவும், தெற்குச் சீனக் கடலில் கம்போடியாவுக்கு தெற்கே மாலை 4.31 மணிக்கு முடிவடையுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் பிற்பகல் சுமார் 2.16 முதல் மாலை சுமார் 4.05 வரை சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இவ்வருடம் ஜூலை மாதம் 22ஆம் திகதி இந்த நூற்றாண்டின் நீளமான சூரிய கிரகணம் வானில் தோன்றும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment