Tuesday, 27 January 2009

இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 8ன் அதிரடி வருகை.


இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 யை மைக்ரோ சோப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

2009ஆம் ஆண்டின் மைக்ரோ சோப்டின் முதலாவதும் புதியதுமான வெளியீடாக இது அமைந்துள்ளதாக மைக்ரோ சோப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

1995ஆம் ஆண்டு முதன்முறையாக வெளியிடப்பட்ட இண்டர்நெட் எக்ஸ்புளோரர், படி படியாக முன்னேறி 14 வருடங்களில் 8ஆவது பிறவியையும் எடுத்துள்ளது.

1999ஆம் ஆண்டு உலகின் அதிகமானோர் பாவிக்கும் ஒரு இணைய உலாவியாக இது இருந்தது என்றால் மிகையாகது.

1999ஆம் ஆண்டு காலப்பகுதியில் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் பாவனையாளர்கள் உலகில் 95 சதவீதம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

2002 மற்றும் 2003ஆம் ஆண்டுகளில் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 5 மற்றும் 6யை பாவனையாளர்கள் உபயோகித்து வந்துள்ளதாகவும், எனினும் அன்றைய காலத்தில் அதன் உபயோகம் சற்று குறைந்தே காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு காரணமாக அமைந்தது, இதற்கு ஒத்த ஏனைய இணைய உலாவிகள் பாவனைக்கு வந்ததே என கூறமுடியும்.
இண்டர்நெட் எக்ஸ்புளோரரிற்கு போட்டியாக வந்ததாக கூறக் கூடிய இணைய உலாவிகள் என்பது மொக்சிலா, பயர்பொக்ஸ் ஆகியவை எனலாம்.

இருப்பினும் மைக்ரோ சோப்ட் தனது வின்டோஸ் இயங்குதளத்தினால் இண்டர்நெட் எக்ஸ்புளோரரை கவிழ விடாது பாதுகாத்து கொண்டது.

எனினும், 2008ஆம் ஆண்டு போட்டியிடில் குதித்த மற்றுமொரு இணைய உலாவியினால் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் சற்று பின்னடைவை எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அது தான் குகிள் குரோம்.

குகிள் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு, பல சலுகைகளை உள்ளடக்கப்பட்டு இலவசமாக பாவனையாளர்களுக்கு வழங்கியிருந்தது.

இதன் சிறப்பம்சங்களை கண்ட பாவனையாளர்கள், இண்டர்நெட் எக்ஸ்புளோரரிலிருந்து குரோமிற்கு உடனடியாக மாறியிருந்தனர்.

இதனுடன் போட்டியிடும் நோக்கிலேயே இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 யை மைக்ரோ சோப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பார்ப்போம் எப்படி உபயோகமொன்று இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 8ன்.

மேலதிக தகவல்கள் மற்றும் பதிவிறக்கத்திற்கு:-

http://www.microsoft.com/windows/Internet-explorer/beta/default.aspx

0 comments: