Thursday, 22 January 2009

இயற்கைக்கும் பதில் மனிதனிடம் உள்ளது.


புவி வெப்பமடைவதினால் 21ஆம் நூற்றாண்டு முடிவிற்குள் நிச்சயம் உலக மக்களின் பெருந்தொகையானோர் வறுமைக் கோட்டிற்கு கீழ் தள்ளப்படுவார்கள் என ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.

புவி வெப்பமடைவதினால் விவசாய பயிர் செய்கைகளில் பாதிப்பு ஏற்பட்டு, மக்களின் வாழ்க்கைத் தரம் குறைவடைந்து மக்கள் வறுமைக்கு தள்ளப்படுவதாக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்விலிருந்து தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெப்ப மண்டல நாடுகள் மற்றும் துணை வெப்ப மண்டல நாடுகளில் 3 பில்லியன் மக்கள் தற்போது வாழ்ந்து வருவதாகவும், இந்த நுற்றாண்டில் இந்த பகுதி மக்களின் தொகை இரட்டிப்பதாகவும் ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தெற்கு அமெரிக்கா முதல் வடக்கு அர்ஜெண்டினா, தெற்கு பிரேசில், வட இந்தியா முதல் தெற்கு சீனா, தெற்கு ஆவுஸ்திரேலியா மற்றும் ஆபிரிக்க பகுதிகள் அனைத்திலும் இந்த நிலை தோன்றும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

புவி வெப்பமடையும் தாக்கத்தினால் உணவு உற்பத்தி எதிர்மறை விளைவை கொடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆய்வாளர்கள் வரலாற்று ரீதியான உணவு பற்றாக்குறையில் 2003ஆம் ஆண்டு பிரான்ஸிலும், 1972ஆம் ஆண்டு உக்ராயினிலும் ஏற்பட்ட உணவு நெருக்கடியை ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வெப்ப மண்டல நாடுகள் மட்டுமல்லாது, 2003ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஐரோப்பாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெப்ப நிலை உயர்வால் 52000 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த காலத்தில் பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

புவி வெப்பமடைவதற்கு தவிர்க்க முடியாது, காரணம் அது இயற்கை, அதற்காக மாற்று வழிகளை உபயோகிக்க முடியுமென கூறி ஆய்வாளர்கள் அதற்கு பதில் என்ன செய்ய முடியும் என்ற ஆய்வுகளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

இயற்கைக்கும் பதில் மனிதனிடம் உள்ளது.

0 comments: