Tuesday, 20 January 2009

இலங்கை அணியின் சாதனை நாள் இன்று?


இன்று நடைபெறவுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணி மூன்றில் ஒன்று என்ற நிலையில் விளையாடுகிறது.

என்ன அந்த மூன்றில் ஒன்று?

இலங்கை அணி வீரர்களுக்கு இன்று மூன்று உலக சாதனைகளை நிலைநாட்ட வாய்ப்புள்ள கிட்டியுள்ளது.

என்ன அந்த உலக சாதனைகள்.............. இலங்கை அணியின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் உலகில் அதிகூடிய விக்கட்களை கைப்பற்றிய வீரர் என்ற உலக சாதணையை நிலைநாட்ட இன்னும் 9 விக்கட்கள் மாத்திரமே உள்ளன.

321 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் பங்குப்பற்றியுள்ள முத்தையா முரளிதரன், இதுவரை 494 விக்கட்களை கைப்பற்றியுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் வசீம்ஹக்ரம் இதுவரை 502 விக்கட்களை கைப்பற்றி உலகில் அதிக கூடிய விக்கட்களை கைப்பற்றியவர்கள் வரிசையில் முன்னிலை வகிக்கிறார்.

மேலும், ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிகூடிய பிடிகளை பெற்றவர் என சாதணையை நிலைநாட்ட, அணி தலைவர் மஹேல ஜயவர்தனவிற்கு இ;ன்னும் ஒரு பிடி மாத்திரமே உள்ளது.

இவர் இதுவரை 191 சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி, 156 பிடிகளை பெற்றுள்ளார்.

இதேவேளை, ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 200ஆவது பிடியை கைப்பற்ற இன்னும் ஒரு பிடி மாத்திரமே உள்ள நிலையில் விக்கட் காப்பாளர் குமார சங்ககார இந்த போட்டியில் பங்குப்பற்றியுள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே கடந்த 9 வருடங்களாக சுற்றுப் பயணங்கள் எதுவும் நடைபெறவில்லை.

இறுதியாக 1999 மற்றும் 2000ஆம் ஆண்டுகளிலேயே சுற்றுப் பயணமொன்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்விரு அணிகளுக்கிடையேயான கிரிக்கெடின் முதலாவது சுற்றுப் பயணம் 1981ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், அந்த சுற்றுத் தொடரில் 2க்கு 1 என்ற வீதத்தில் பாகிஸ்தான் வெற்றிப் பெற்றது.

இரண்டு நாடுகளுக்குமிடையே 11 சுற்றுப் பயணங்கள் மாத்திரமே நடைபெற்றுள்ள நிலையில், இதில் பாகிஸ்தானுக்கு இலங்கை அணி 5 சுற்றுப் பயணங்களையும், பாகிஸ்தான் இலங்கைக்கு 3 சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுள்ளது.

மேலும், எஞ்சிய 3 சுற்றுப் பயணங்களும் வேறு நாடுகளில் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கிடையே நடைபெற்ற 11 சுற்றுப் பயணங்களிலும் பாகிஸ்தான் அணி 9 போட்டிகளிலும், இலங்கை அணி 2 போட்டிகளிலுமே வெற்றிப் பெற்றுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே 111 சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுள்ளன.

இதில் பாகிஸ்தான் அணி 67 போட்டிகளிலும், இலங்கை அணி 40 போட்டிகளிலும் வெற்றிப் பெற்றுள்ளன.

எஞ்சிய 4 போட்டிகளும் வெற்றித் தோல்வி இன்றி நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த தொடர் யார் கையில், இலங்கையா, பாகிஸ்தானா?

தொடரில் மூவரும் சாதனை படைப்பார்களா?

பொருத்திருந்தால் சாதனையின் பதில் கிடைக்கும்.

இலங்கை அணி வெற்றிப் பெற எனது வாழ்த்துக்கள்!

0 comments: